
தேதி: October 14, 2015
ஜிப்
பின்பக்கத்திற்கு மஞ்சள் நிற துணி - 17" X 17" ஒரு துண்டு
முன்பக்கத்திற்கு :
மஞ்சள் துணி - 17" X 5" இரண்டு துண்டு
நீல நிற துணி - 30" X 7" ஒரு துண்டு
நீல துணியில் ஒன்றரை இன்ச் அளவு இடைவெளியில் வரிசையாக கோடுகள் போடவும்.

படத்தில் காட்டியுள்ளபடி கோட்டின் மீது கால் இன்ச் அளவில் பின் டக் (pintuck) தையல் போடவும்.

துணி முழுவதும் போட்டிருக்கும் அனைத்து கோட்டிலும் டக் செய்த பின் பார்க்க படத்தில் உள்ளது போல் இருக்கும்.

டக் மேல் நோக்கி இருக்குமாறு மெஷினில் வைத்து மேலே தையல் போடவும்.

அதற்கு அடுத்து வரும் தையல் டக் கீழ்நோக்கி வருமாறு தைக்கவும். இப்படி நான்கு தையல்கள் மேலும் கீழுமாக போட்டால் ஒரு அழகிய டிசைன் கிடைக்கும்.

மஞ்சள் நிற துணியை நீல நிற துணியின் இருபக்கமும் இணைக்கவும். குஷன் கவரின் முன் பக்கம் ரெடி.

பின்பக்க மஞ்சள் நிற துணியை இரண்டாக நறுக்கி நடுவில் ஜிப் வைத்து தைக்கவும்.

அதன் பிறகு பின் பக்கம் மற்றும் முன் பக்க துணிகளை இணைத்து நான்கு பக்கங்களிலும் சுற்றி தைத்து விடவும். அழகிய குஷன் கவர் ரெடி.

உங்கள் வீட்டின் மெத்தை, சோஃபாவின் நிறத்திற்கு ஏற்ப செய்துக் கொள்ளவும். நான் நீலதுணியை மட்டுமே பின் டக் செய்துள்ளேன். முன்பக்கதுணி முழுவதும் பின்டக் செய்யலாம். அதில் மணி வைத்தும் அலங்கரிக்கலாம்.

Comments
குஷன் கவர்
நிகிலா மேடம் குஷன் கவர் ரொம்ப அழகா இருக்கு. கலர் காம்பினேஷன் சூப்பர்...
கலை
பின் டக்
சூப்பர் நிகிலா! குஷன் கவர் கலர் அருமை.
ஒரு காலம் எனக்கு மிகவும் பிடித்த வேலை இது. சின்னவர்களுக்கு ஷர்ட், ட்ரவ்சர் பாக்கெட்டுகளில் போட்டு வைப்பேன். :) 28 வருஷம் முன்பு. அப்போ பேரெல்லாம் தெரியாது. எங்கோ ரெடிமேட் துணியில் பார்த்தேன், பிடித்திருக்கவும் தைக்க ஆரம்பித்தேன்.
இப்போ உங்கள் கைவேலையைப் பார்த்ததும் எதிலாவது தைக்க வேண்டும் என்கிறது மனது. ஜாக்கட் ஒன்றில் போடலாம். :) போட்டுவிட்டுப் படம் காட்டுகிறேன்.
- இமா க்றிஸ்
கலை
//நிகிலா மேடம் குஷன் கவர் ரொம்ப அழகா இருக்கு. கலர் காம்பினேஷன் சூப்பர்...//
மேடம் வேண்டாமே. . ..;)
படுக்கை விரிப்புக்கு கான்ட்ராஸ்ட்ரான கலரில் குஷன் போட்டால் பெட்ரூம் பார்க்க அழகாக இருக்கும்.
பாராட்டுக்கு மிக்க நன்றி கலை.:))
இமா
கலர் பிடிச்சிருக்கா....பாராட்டுக்கு மிக்க நன்றி இமா.:)
பாப்பா ரெடிமேட் கவுனில் முன்பக்கம் டிசைன் ஆக பார்த்திருக்கிறேன். பசங்க டிரஸில் போட்டுருக்கிறீங்கள். சூப்பர்.:))
சாரி பிளவுஸின் பின்பக்கம் டிசைன் ஆகப் போட அழகாக இருக்கும். சிறிய பவுச் மற்றும் பையில் கூட போடலாம்.
போட்டுட்டு படம் காட்டுங்க இமா:))
நிகிலா
அழகாக இருக்கு.தெளிவான விளக்கம்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
மிக்க நன்றி முசி:))
நிகி
ரொம்ப சூப்பர். குஷன்னாலே நீங்கதான். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
மிக்க நன்றி வனி.
நீங்கள் தரும் ஊக்கமே எனது முயற்சிக்கு வித்தாகும். :)