தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி

தேதி: October 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4 (23 votes)

 

சீரகசம்பா அரிசி - 3 டம்ளர்
சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம் (தட்டி வைக்கவும்)
பூண்டு - 100 கிராம் (தட்டி வைக்கவும்)
நெய், எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை - ஒரு மூடி
புதினா - 2 கொத்து
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
மசாலா அரைக்க :
பச்சை மிளகாய் - 5
பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதிபத்திரி, அன்னாசி பூ - தலா 5
இஞ்சி - 150 கிராம்


 

பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.
அதில் தட்டி வைத்திருக்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை வதக்கவும்.
சிக்கன் வெந்ததும் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அரிசியை களைந்து 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் கொதித்ததும் அதில் சேர்த்து அதிக தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் தயிர், எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு மூடவும்.
தீயின் அளவை மிதமாக வைத்து 15 நிமிடம் தம்மில் வேக விடவும்.
சுவையான தலப்பாக்கட்டி பிரியாணி ரெடி. இதே செய்முறையில் மட்டன் வைத்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Romba supera irukku pa nalaikku ithai seithu parkiren

குறிப்பை வெளியிட்ட அண்ணா& அறுசுவை டீம் மிக்க நன்றி

Be simple be sample

செய்து பார்த்துட்டு சொல்லுங்க. சூப்பரா இருக்கும். தான்க்யூ.

Be simple be sample

இப்போதான் பார்க்கிறேன். சூப்பரா ரொம்ப ஈசியா இருக்கு. ட்ரை பண்றேன். இது எத்தனை பேருக்கான அளவு? அப்புறம் கைவசம் பாஸ்மதி தான் இருக்கு அதுல பண்ணலாமா? கிளியர் மை டவுட் ப்ளீஸ்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

saptingala

இரவு இது தான் செய்தேன். ரொம்ப சிம்பிள். மைல்டா இருந்தது. எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சுது. நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

3 டம்ளர்க்கு 4பேர் சாப்பிடலாம்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க. தான்க்யூ

Be simple be sample

செய்து படம் காட்டிட்டிங்க.பிடிச்சதுக்கு ரொம்ப தான்க்ஸ்ங்கோ.

Be simple be sample

அருமையான மற்றும் பயனுள்ள குறிப்புக்கு நன்றி,,,

பாபா நடமாடும் உணவகம் ( ரெய்கி குணா )
பேஸ்புக் :பாபா உணவகம் Facebook :babaunavagam / reikiguna

I tried with kaadai. It came out very well. my son enjoy this Britain

I tried with kaadai. It came out very well. my son enjoy this Briyang. Thanks