
தேதி: October 26, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
மொத்த நேரம்: 35 நிமிடங்கள்
பனீர் - ஒரு பாக்கெட்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பிரிஞ்சி இலை - பாதி
பட்டை - சிறு துண்டு
ஏலக்காய் - 1
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
கலர் பொடி - சிட்டிகை
வெண்ணெய் - கால் கப்
எண்ணெய்
உப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
வெங்காயம், தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நறுக்கிவற்றை தனித்தனியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதக்கியவற்றை ஆற வைத்து தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.

பனீரை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பனீரை போட்டு பொரித்து எடுக்கவும். அதிகம் கருகி விடாமல் குறைந்த தீயில் வைத்து பொரிக்கவும்.

நாண்ஸ்டிக் கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பட்டை, இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

வெங்காய விழுது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அதில் தக்காளி விழுதை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கழித்து பொரித்த பனீரை சேர்த்து கிளறவும்.

மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.

Comments
செண்பகா அக்கா
எதேச்சையாக பனீரில் ரெசிப்பி தேடினேன். இன்றைய குறிப்பே இதுதானா? நைட் சப்பாத்திக்கு இதை தான் ட்ரை பண்ண போறேன். டேஸ்ட் பார்த்திட்டு உடனடியா Fans Club க்கு வரும். நன்றி அக்கா.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
பனீர் பட்டர் மசாலா
செய்து விட்டேன். பேன்ஸ் கிளப்பில் போட்டிருக்கேன் நன்றி அக்கா சூப்பரா இருக்கு.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
Superbbb
Enaku romba pasikarthu itha patha udaney kandipa try pandren sister..
Madhu epti irukunu soluchu?
Madhu epti irukunu soluchu?
பனீர் பட்டர் மசாலா
நல்லா இருக்கு ஆனா உரைப்பா இருக்குனு சொல்லுச்சு.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி