ரசகுல்லா & ரசமலாய்

தேதி: October 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (13 votes)

 

ரசகுல்லா செய்ய :
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - ஒரு கப்
வினிகர் - ஒரு தேக்கரண்டி
ரசமலாய் செய்ய :
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய், பிஸ்தா, பாதாம்


 

பாலை காய்ச்சி வினிகர் விட்டு திரிய விடவும்.
திரிந்த பாலை மெல்லிய துணியில் வடிக்கட்டி குளிர்ந்த நீரில் அலசி ஆறவிட்டு தண்ணீர் இல்லாமல் பிழியவும்.
பனீரை நன்கு கட்டி இல்லாமல் தேய்த்து பிசையவும். விரல்களால் மட்டுமே மென்மையாக தேய்க்கவும்.
பனீரில் கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தேய்த்து பிசைந்து விரும்பிய அளவில் உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் சர்க்கரை சேர்த்து 2 மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
கொதித்து மிதந்து மேலே வரும் பொழுது லேசாக திருப்பி விட்டு மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
உருண்டைகள் இரண்டு மடங்கு பெரிதாகி வெந்ததும் இறக்கவும்.
அதே சர்க்கரை பாகில் சிறிது நேரம் ஊற விட்டு பரிமாறவும்.
ரசமலாய் செய்ய பாலை கொதிக்க விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். கலருக்கு குங்கமப்பூ அல்லது கலர் பவுடர் சேர்க்கவும். ரசகுல்லாவை லேசாக பிழிந்து ஒரு முறை தண்ணீரில் தோய்த்து பிழிந்து காய்ச்சிய பாலில் சேர்க்கவும்.
ஊறவிட்டு பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறவும்.
யம்மி ரசகுல்லா மற்றும் ரசமலாய் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு. 2 வாரத்திற்கு முன்னாடி மாமனார் பண்ணி கொடுத்தாங்க. நல்லா இருந்தது பட் பால் திரிக்க லெமன் யூஸ் பண்ணிருப்பாங்க போல லைட்டா லெமன் ஸ்மெல் வந்தது. அடுத்து வினிகர் யூஸ் பண்ணலாம். நல்ல ஐடியா.. தேங்க்ஸ்க்கா..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

இவ்ளோ ஈஸியா செய்றது.
சூப்பர் டிப்ஸ்.

ம்ம் இப்பவோசாப்பிடனும் போல இருக்கு, நான் இரண்டுலேயும் ஒரு ஒரு பீஸ் எடுத்துகிட்டேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நம்ம ரேவ்ஸா?? ;) நம்ப முடியாத நிரைய விஷயம் நம்மை சுற்றி நடக்குது. எப்ப இந்த ரெசிபி பார்த்தாலும் கல்பு நியாபகம் தான். அது ஒரு கனா காலம்.

அபி... எலுமிச்சை சேர்த்தாலும் தண்ணீரில் நல்லா அலசினா வாசம் வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்தது நானில்லை. மாமனார் செய்து சாப்பிட மட்டும் கொடுத்தார். இதெல்லாம் செய்ய பிடிக்காது சாப்பிட மட்டுமே பிடிக்கும்....

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றி அட்மின் அண்ணா & அறுசுவை டீம்.

Be simple be sample

தான்க்யூ அபி. மாமனார் செய்து கொடுத்தாரா.சூப்பர். வனி சொன்ன டிப்ஸ்தான் அலசிட்டா அந்த வாசம் இருக்காது.

Be simple be sample

ஈசி தான். இப்ப எடுத்து டேஸ்ட் பார்த்துட்டு இன்னொரு நாள் செய்து எங்களுக்கு கொடிக்கணும்.தான்க்யூ

Be simple be sample

எனக்கும் கல்ப்ஸ் நியாபகம்தான். மேடம்தான் மறந்துட்டாங்க. எப்படியோ செய்துட்டேன் நம்புங்கப்பா. தான்க்யூ

Be simple be sample

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை இது போன்று நானும் சமையல் வகைகளை அளிக்க உள்ளேன். keep support me

https://play.google.com/store/apps/dev?id=4702890658323381984

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா