மட்டன் ட்ரை ஃப்ரை

தேதி: October 31, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

மட்டன் - 350 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - 100 மில்லி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2


 

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.
மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.
மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான மட்டன் ட்ரை ஃப்ரை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இப்பதான் உங்க பிரியாணி ரெடி ஆகிட்டு இருக்கு.... இது நாளைக்கு பண்ணிடலாம்... தேங்க்ஸ்க்கா...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & அறுசுவை டீம் நன்றி.

Be simple be sample

தான்க்யூ அபி. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லனும்

Be simple be sample

மீனுக்குள்ள மட்டன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் ரெசிபி தோழி. பார்க்கும் போதே வாய் ஊருது. என் மெனு லிஸ்டில் இதை சேர்த்துடுறேன். தேங்ஸ்.

வனி :)))))).

Be simple be sample

தான்க்யூப்பா. ஈசிதான் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Be simple be sample

unga intha muraiya try panni parkiren.nanum ippadi than seiven but kadaisya fridgeil konjam vaithu eduthu paneil pottu fry pannuven.

Thanks sis. Revathi.S.

எதுக்கு பிரிட்ஜ்ல வச்சி பிரை பண்றீங்க. செய்து பார்த்துட்டு சொல்லுங்க. தான்க்யூ

Be simple be sample