
தேதி: November 2, 2015
வீட்டில் இருக்கும் குளிர்ச்சாதனப் பெட்டியில் (ஃப்ரிட்ஜில்) முதலில் வீணாகும் பாகம் கைப்பிடி தான். அதிகம் பயனில் இருப்பது ஃப்ரிட்ஜ் கைப்பிடிதான். எனவே அந்த கைபிடிக்கு கவர் போடுவது அதனை நீண்ட நாட்கள் பாதுகாக்க உதவியாய் இருக்கும். ஃப்ரிட்ஜ் கைப்பிடி கவர் ரெடிமேடாக கிடைத்தாலும், நாமே அதை எளிதில் செய்யலாம் என்பதை இங்கே படங்களுடன் விளக்குகின்றார் நிகிலா அவர்கள்.
விரும்பிய நிறத்தில் துணி - நான்கு துண்டுகள் (12'' X 6'' அளவில் )
ஸ்பாஞ்ச் துண்டுகள் - இரண்டு ( துணியை விட சற்று சிறியதாக )
வெல்க்ரோ 12 இன்ச் - இரண்டு
உங்கள் வீட்டிலிருக்கும் ஃப்ரிட்ஜின் கைப்பிடி அளவிற்கு ஏற்றாற் போல் துணிகளையும், அதற்கு ஏற்றவாறு வெல்க்ரோ மற்றும் ஸ்பாஞ்ச்சினை எடுத்துக் கொள்ளவும்.

துணியின் உள்பக்கம் வெளியில் தெரியும்படி வைத்து இரண்டிரண்டு துணிகளாக இணைத்து வைத்து சுற்றி மூன்று பக்கங்களில் தைக்கவும்.

பின்னர் தைக்காமல் வைத்திருக்கும் பக்கத்தின் வழியாக திருப்பி விடவும்.

அதன் வழியே ஸ்பாஞ்ச்சை உள்ளே நுழைக்கவும்.

திறந்திருக்கும் பக்கத்தை குண்டூசியால் இணைத்து வைத்துக் கொண்டு பின்னர் மெஷினில் தைக்கவும்.

படத்தில் காட்டியபடி குறுக்கும் நெடுக்குமாக தையல் போட்டு எளிய டிசைன் செய்யவும்.

வெல்க்ரோவை ஒரு பக்கத்தில் மேல்பகுதியிலும், எதிர் பக்கத்தில் கீழ்பகுதியிலும் வைத்து தைக்கவும். இதே போல் மற்றொரு துண்டிலும் செய்யவும்.

ஃப்ரிட்ஜ் கைப்பிடி அழுக்காகாமல் பாதுகாக்க அழகிய கைப்பிடி தயார்.

Comments
நிகி
ரொம்ப சிம்பிள் & சூப்பர். அடுத்த முறை ஊருக்கு வரும் போது செய்து பார்க்கிறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிகிலா
ரொம்ப நல்ல ஐடியா.. என்னோடதும் ஒயிட் கலர் பிரிட்ஜ் தான்.ஈசியா 2 கைப்பிடியும் அழுக்காகிடும்.தீபாவளி முடியட்டும் கண்டிப்பா ட்ரை பண்றேன். தேங்க்ஸ் நிகி.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
நிகிலா
நல்லா இருக்கு.சிம்பிலி சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
வனி
எளிய முறையில் செய்வது பற்றிக் கூறியுள்ளேன். செய்து பார்த்து சொல்லுங்க.
பாராட்டுக்கு நன்றி வனி:))
அபி
பாராட்டுக்கு நன்றி.உங்க கிச்சனுக்கும் பொருத்தமான கலரில் செய்து மாட்டுங்க .
கைப்பிடி அழுக்காகாமல் அலங்காரமாக இருக்கும்.
செய்து பார்த்து படம் போடுங்க அபி:))
முசி
ரொம்ப நன்றி முசி:))
blouse
madam enaku blouse thaika sollikodungal
எனக்கு தையல் கற்பதற்கு
எனக்கு தையல் கற்பதற்கு ஆர்வம்.ஆனால் அதை பற்றி எதுவும் தெரியாது.இன்டர்நெட் ல எப்படி கற்பது என்பதை சொல்றீங்களா ப்ளீஸ்.