sewing machine vanga idea urgent

hi friends enakku stiching with simple embroidery podura mathuri machine venum budget with in Rs.10000....help me

//simple embroidery podura mathuri machine// எம்ப்ராய்டரி தெரிந்திருந்தால், நீங்களாகப் போய்ப் பார்த்து வாங்குவதைத்தான் விரும்புவீர்கள். அதனால் ஸிக்ஸாக் தையல்கள் பற்றிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பெங்களூரில் இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட‌ விலையில் நல்ல‌ மெஷின்கள் எல்லா மெஷின் கடைகளிலும் கிடைக்கும். சின்னதாக‌ ஒரு கூகுள் சர்ச் போட்டுப் படங்களையும் விலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் தேவைக்கு எந்த‌ மெஷின் பொருத்தம் என்பது உங்களுக்குத்தான் புரியும். இன்னொருவர் ரசனையும் தேவையும் வேறாக‌ இருக்கும். அதனால் மற்றவர்கள் சொல்லும் பதில்கள் உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை.

எம்ப்ராய்டரி செய்ய ஸிக்ஸாக் மெஷின் கூட தேவையில்லை; சாதாரண‌ மெஷினே போதும். புதிதாக முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கு ‍‍ஒரு யோசனை... எம்ப்ராய்டரி செய்யலாம் என்கிற‌ எண்ணத்தில் ஸிக்ஸாக் மெஷின் வாங்கி வைத்துக் கொண்டு, பயன்படுத்தத் தெரியாமல் கவலைப்படுவோரைப் பார்த்திருக்கிறேன். சுலபமாக எம்ப்ராய்டரி செய்வதற்கு கம்ப்யூட்டரைஸ்ட் எம்ப்ராய்டரி மெஷின்கள் வசதி என்பது என் அபிப்பிராயம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்