உணவு மேசைக்கான மலரலங்காரம்

உணவு மேசைக்கான மலரலங்காரம்

தேதி: November 14, 2015

4
Average: 3.4 (5 votes)

 

லவண்டர் பூக்கள்
கிச்சன் பேப்பர்
கிச்சன் ஃபாயில்
ஃப்ளோரல் பேப்பர்
ஸ்னிப்பர்
கத்தரிக்கோல்
ட்விஸ்டீஸ்
பேப்பர் ரிப்பன்
ஸ்ப்ரே கானில் நீர்

 

பூக்களைத் தெரிவு செய்யும் போது, இறுக்கமான‌ தண்டுகள் உள்ளவையாக அதே சமயம் முதிர்ந்த‌ பூக்கள் இல்லாதனவாகத் தெரிவு செய்ய‌ வேண்டும். பூக்கள் முதிர்ந்திருந்தால் வித்துக்கள் மேசையில் உதிரும்; உணவுத் தட்டுகளிலும் கொட்டிவிடலாம். பிஞ்சுத் தண்டுகள் உள்ளவை அமைப்பாக‌ நில்லாது; சட்டென்று துவண்டு விடும். பூச்சிகள் இல்லாத செடியில் இருந்து பூக்களைத் தெரிந்து எடுக்கவும்.
பூக்கள் தேர்வு
தண்டுகளில் இருந்து இலைகளை வெட்டி நீக்கவும்.
இலை நீக்கம்
மூன்று அல்லது நான்கு பூக்களை சேர்த்துப் பிடித்து, நான்கு அல்லது ஐந்து சென்டிமீட்டர் அளவு தண்டினை விட்டு, ஒரே அளவாக‌ நறுக்கவும்.
தண்டினை நறுக்குதல்
முதலிலேயே பூக்களைத் தேவையான‌ படி பிரித்து கட்டுக் கட்டாக‌ ஒரே அளவில் வெட்டி வைத்துக் கொண்டால் ஒவ்வொரு செண்டாகத் தயார் செய்யாமல் ஒரே வேலையை அனைத்துச் செண்டுகளிலும் முடித்து விட்டு அடுத்த‌ படிநிலைக்குப் போகலாம்.
பூக்களை பிரித்தல்
ஒரு கட்டு பூக்களை எடுத்து, தண்டுகளைச் சுற்றி கிச்சன் பேப்பரைச் சுற்றி ட்விஸ்டியால் கட்டிக் கொள்ளவும். கிச்சன் பேப்பரின் அளவைப் பொறுத்து ஒரு பேப்பரை ஆறு அல்லது எட்டு சதுரத் துண்டுகளாக‌ வெட்டிக் கொள்ளலாம்.
பூக்கள் சுற்றுதல்
செண்டை ஒரு தட்டின் மேல் வைத்து பேப்பரில் நீரை ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.
பூக்கள்
கிச்சன் பேப்பரின் அளவில் கிச்சன் ஃபாயிலைக் கிழித்து எடுத்து ஈரமான‌ பேப்பரைச் சுற்றி விட்டால், பிறகு ஈரம் மேசையிலோ தட்டுகளிலோ படாது.
பூக்கள் கொத்து
ஃப்ளோரல் பேப்பரை சற்றுப் பெரிய‌ சதுரங்களாக‌ வெட்டிக் கொள்ளவும்.
பேப்பர்
ஃப்ளோரல் பேப்பரால் அழகாக‌ ஃபாயிலைச் சுற்றி மறைத்து விட்டு அதன் மேலும் ஒரு ட்விஸ்டியைச் சுற்றி விடவும்.
ப்ளோரல் பேப்பர்
ரிப்பனை 20 சென்டிமீட்டர் துண்டுகளாக வெட்டி வைக்கவும். செண்டில் ட்விஸ்டியை மறைத்துச் சுற்றிக் கட்டி விடவும்.
ப்ளோரல் பேப்பர்
கத்தரிக்கோல் முனையினால் ரிப்பனை அழுத்தி இழுத்துவிட‌ இப்படிச் சுருண்டு கொள்ளும்.
மலர்ச் செண்டு
விருந்தினரின் எண்ணிக்கையை மனதிற் கொண்டு தேவையான‌ எண்ணிக்கை செண்டுகளைத் தயார் செய்யவும். இவற்றை விருந்துக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பாகவே தயார் செய்து குளிர்மையான‌ இடத்தில் சேமித்து வைக்கலாம்.
மலர் அலங்காரம்
உணவு மேசையில் தட்டுகளை அடுக்கும் போது ஒவ்வொரு தட்டிற்கும் அருகே ஒரு செண்டு வைத்துவிட்டால் பார்வைக்கு அலங்காரமாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் அறைக் காற்றில் சேரும் மெல்லிய லவண்டர் வாசனை மனதிற்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கும். விருந்து முடிந்து வழியனுப்பும் போது விருந்தினர் கையில் ஒவ்வொரு செண்டைக் கொடுத்து வழியனுப்பி வைக்கலாம்.
மலர் அலங்காரம்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அருமையான யோசனை அழக இருக்கிறது

வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
அன்புடன்
செபா.

ரொம்ப அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி.
அன்புள்ள செபா.