தேதி: November 16, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன் - ஒரு கிலோ
முழு தேங்காய் ( சிறியது) - ஒன்று
பெரிய வெங்காயம் - 2 (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம், தக்காளியை தனித் தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும். அனைத்து பொடி வகைகளுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். தேங்காயை அரைத்து 2 கப் பால் எடுத்து வைக்கவும்.

சிக்கனை கழுவி சுத்தம் செய்து பொடி வகைகளை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்க்கவும்.

தக்காளி வதங்கியதும் பிசறி வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வேக விடவும். சிக்கனில் இருக்கும் தண்ணீரே போதும் வேண்டுமெனில் சிறிது சேர்க்கலாம்.

சிக்கன் தண்ணீர் வற்றியதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் மல்லி தழை சேர்த்து இறக்கவும்.

சுவையான சிக்கன் தேங்காய் பால் கிரேவி ரெடி. இது சாதம், சப்பாத்தி என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

Comments
abi
சூப்பர் கிரேவி. மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
Be simple be sample
abi
சூப்பர் கிரேவி. மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
Be simple be sample
டீம்
இவ்வளோ வேகமா?? என்னுடைய முதல் குறிப்பை அழகாக வெளியிட்ட அட்மின் அண்ணா & டீம் க்கு என் நன்றிகள்...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ரேவா அக்கா
முதல் ஆளா வந்து கருத்து சொன்னதற்கு தேங்க்யூ அக்கா.. ட்ரை பண்ணி பாருங்க. நல்லா இருக்கும்.. இனி நிறைய குறிப்புகள் கொடுக்க ட்ரை பண்றேன்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
அபி
முதல் குறிப்பு வெளியானதையிட்டு என் வாழ்த்துக்கள். படங்கள் அழகாக பளிச்சென்று இருக்கின்றன. பாராட்டுக்கள் அபி. தொடர்ந்து நிறையக் குறிப்புகள் கொடுக்க வேண்டும்.
- இமா க்றிஸ்
இமா அம்மா
நன்றி அம்மா. இனி தொடர்ந்து கொடுக்க முயற்சிக்கிறேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
abi
Manamaarndha vaazthukkal :) padangal super. Kattaayam ini thodarndhu kurippugal tharanum.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
கண்டிப்பா அக்கா.. ட்ரை பண்ணி பாருங்க நல்லா இருந்தது. 2 தடவை பண்ணிட்டு நல்லா இருக்கவும் அனுப்பினேன். நன்றி அக்கா.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
abi
Arumai.muthal kuripirku vaazhthukal abi.
நித்யா அக்கா
ரொம்ப நன்றி அக்கா...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
அபி
முதல் குறிப்புக்கு என் வாழ்த்துக்கள், படங்கள் எல்லாமே பளிச்.
இன்னும் நிறைய டிப்ஸ் க்கு என் வாழ்த்துக்கள்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
சுபி
ரொம்ப தேங்க்ஸ் சுபி.. நிறைய குறிப்புகள் கொடுக்க முயற்சி பண்றேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
Abi
கெட்டிக்காரி. படம் விளக்கம் எல்லாம் நிறைய அனுபவம் உள்ள ஆக்கள் குடுத்தமாதிரி நேர்த்தி. தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள். கண்டிப்பா செய்து பாத்து சொல்லுறேன்.
சுரேக்கா
இத அனுப்புறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். அவ்வளவு பரபரப்பாகி அத்தனை போட்டோ எடுத்தேன். செய்து பாருங்க. நன்றிக்கா...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
அபி @@@
முதல் குறிப்பா வாழ்த்துக்கள் அபி ! இதுபோல் புது புது சுவையான குறிப்புகளை குடுங்கள் நாங்க சமைத்து பார்க்கிறோம் ..
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
அஸ்வதா அக்கா..
ரொம்ப நன்றி அக்கா... தொடர்ந்து குறிப்புகள் வரும்.. இதை ட்ரை பண்ணி பாருங்க நல்லா இருக்கும்...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி