கார சட்னி

தேதி: December 15, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (13 votes)

 

தக்காளி - 10
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கேற்ப


 

முதலில் தேவையானவற்றை அனைத்தையும் தயார்படுத்தி வைக்கவும்.
தக்காளி, பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் வற்றி எண்ணெய் மேலாக வரும் வரை கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கினால் சுவையான கார சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இது வெளியில் வைத்து பயன்படுத்தினால் ஒரு வாரம் வரையும், பிரிட்ஜில் வைத்திருந்தால் பல நாட்கள் வரை பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான முறை, கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அபி,

செய்து பார்த்திட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கம்மா..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

உங்களோட கார சட்னி இன்னைக்கு செஞ்சேன் ரொம்ப நல்ல இருந்தது..நன்றி.

செய்து பார்த்திட்டு சொன்னது மிக்க மகிழ்ச்சி..நன்றிங்க!!

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நான் சமீபத்தில் உங்கள் செய்முறையை செய்தேன், நன்ராக‌ இருந்தது

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

செய்து பார்த்திட்டு சொன்னதற்கு நன்றிங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Simply superp

Simply superp

Simply superp

Simply superp

Simply superp

Simply superp