மலர்ச் செண்டு

மலர்ச் செண்டு

தேதி: December 15, 2015

4
Average: 3.8 (6 votes)

 

இரண்டு நிறத்தில் பூக்கள் (கமீலியா, டேலியா அல்லது ரோஜா)
பெரிய‌ அகலமான‌ இலைகள்
பன்ன‌ இலைகள்
ஸ்னிப்பர்
கத்தரிக்கோல்
செலோஃபேன் பேப்பர்
ஃப்ளோரல் பேப்பர்
ஸ்டேப்ளர்
ரிப்பன்
ராஃபியா அல்லது சணல்
செலோடேப்

 

மேற்ச்சொன்ன தேவையானவைகள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
தேவையான பொருட்கள்
இலைகளை ஈரத் துணியால் துடைத்துவிட்டு, வளைத்துப் பிடித்து காட்டியுள்ளபடி ஸ்டேப்பிள் செய்யவும்.
இலைகள்
படத்தில் உள்ளபடி வெட்டிவிடவும். மூன்று அல்லது நான்கு இலைகளை இப்படித் தயார் செய்து வைக்கவும்.
இலை தயாரிப்பு
நடுவில் வைக்க‌ விரும்பும் நிறப் பூக்களைத் தெரிந்து, அவற்றிலுள்ள‌ இலைகளைக் கிள்ளிவிடவும்.
பூக்கள்
சுற்றிலும் வைக்கத் தெரிந்தெடுத்துள்ள‌ பூக்களில் இடையிடையே ஒன்றிரண்டு இலைகளை மட்டும் விட்டுவிட்டு மீதி இலைகளை நீக்கிவிடவும். முதலில் எடுத்த‌ பூக்களைச் சுற்றிலும் வைத்துப் பிடித்து, ராஃபியாவால் காம்புகளை நன்கு இறுகச் சுற்றிக் கட்டவும்.
பூக்கள் இணைப்பு
வளைத்து வைத்த‌ இலைகளில் மூன்று அல்லது ஐந்து இலைகளை, கட்டிய‌ செண்டின் பின்பக்கமாக வைத்து மீண்டும் கட்டிக் கொள்ளவும்.
பூக்கள் இணைப்பு
பன்ன‌ நெட்டுக்களை தேவையான‌ நீளத்திற்கு முறித்துக் கொள்ளவும். அவற்றின் அடியில் உள்ள‌ இலைகளை உதிர்த்துவிட்டு இவற்றை வளைந்த‌ இலைகளுக்கு இடையிலும் வெளி ஓரங்களிலும் வைத்துக் கட்டவும். முன்புறம் மேலும் இரண்டு மூன்று பூக்களைச் சற்று இறக்கினாற் போல‌ வைத்துக் கட்டவும்.
பூங்கொத்து
செலோஃபேன் கடதாசியைப் பெரிய‌ சதுரமாக‌ வெட்டிக் கொண்டு முக்கோணமாக‌ மடித்துக் கொள்ளவும். முக்கோணத்தின் நடுவில் உள்ள‌ கூரான‌ பகுதியைச் செண்டின் பின் பக்கம் மேலே தெரியுமாறு வைத்து, ஓரங்களைச் சற்றுச் சுருக்கிப் பிடித்து செலோடேப் போடவும். (இப்படியே தண்டுப் பகுதியை நீருள்ள கிண்ணம் ஒன்றில் வைத்துவிட்டால் பிறகு தேவையான பொழுது எடுத்துத் துடைத்துவிட்டு மீ்தி வேலையைத் தொடரலாம்).
பூங்கொத்து
ஃப்ளோரல் பேப்பரையும் பெரிய‌ சதுரமாக‌ வெட்டி எடுக்கவும். பூக்களின் காம்புகளை ஒரே நீளத்தில் வைத்து நறுக்கிக் கொள்ளவும். மீதியாக‌ உள்ள‌ ஃப்ளோரல் பேப்பரில் ஒரு நீளத் துண்டு வெட்டிக் கொண்டு, செண்டின் தண்டுப் பகுதியை மறைத்துச் சுற்றிக் கொண்டு செலோடேப் போட்டு ஒட்டவும். (தண்டுகளை ஈரமான டிஷ்யூவினால் சுற்றி விட்டு, அதன் மேல் செலோஃபேன் சுற்றிவிட்டு பிறகு ஃப்ளோரல் பேப்பரைச் சுற்றினால் பூக்கள் சற்று அதிக நேரம் வாடாமலிருக்கும்.)
பூங்கொத்து
சதுர‌ ஃப்ளோரல் பேப்பரை முன்பு செலோஃபேன் பேப்பருக்குச் செய்தது போல‌ முக்கோணமாக‌ மடித்து செலோஃபேன் பேப்பரின் பின்னால் வைத்து அதே விதமாக‌ டேப் செய்துவிடவும்.
ரிப்பனை அழகாகக் கட்டி வெட்டிவிடவும்.
பூங்கொத்து ரிப்பன்
அழகான‌ மலர்ச் செண்டு தயார். கூடவே வாழ்த்து அட்டையொன்றைத் தயார் செய்து சொருகிவிட்டால் போதும்.
மலர்ச் செண்டு

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப நாட்களுக்கு பின் உங்க குறிப்பு!!! பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. நலமா? கிருஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நத்தார் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

அன்புடன்
செபா