தந்தூரி சிக்கன் பிரியாணி

தேதி: December 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (18 votes)

 

சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க :
தயிர் - ஒரு கப்
பூண்டு - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது
பச்சைமிளகாய் - 2
லவங்கம் - 4
எலுமிச்சை - பாதி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கஸூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பிரியாணி செய்ய :
அரிசி - அரை கிலோ
சிக்கன் லெக்பீஸ் - 4
வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
தாளிக்க :
பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா2


 

சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக் பாகம் வேகும் வரை பொரிக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.
அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தது ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.
விருப்பமெனில் கலர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.
அரைமணி நேரம் கழித்து திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.

இதே பிரியாணியை சிக்கன் சேர்க்கும் வரை இதே முறையில் செய்து விட்டு அதன் பின்னர் <a href="/tamil/node/31149"> தம் சிக்கன் பிரியாணி </a> இந்த குறிப்பில் உள்ளது போல சாதத்தை வடித்து சேர்த்தும் பிரியாணி செய்யலாம். இன்னும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் வாவ் வாவ் ஹோட்டல்ல வைக்கிற மாதிரியே அழகா சர்வ் பண்ணிருக்கீங்க. டேஸ்ட்டும் நல்லா இரூக்கும்னு பார்க்க தெரியுது இந்த சண்டே பிரியாணி உங்க ஸ்டைல்ல தான். தாங்ஸ். கலக்குங்க.

அருமையான பிரியாணி வெள்ளிக்கிழமை என்னுடைய பெண்ணுக்கு பிறந்த நாள் இந்த பிரியாணி தான் செய்ய போரென்

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா& டீம் மிக்க நன்றி

Be simple be sample

தான்க்யூ சோமச் தேவி, கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு.தான்க்யூ

Be simple be sample

உங்கள் பெண்ணுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள். செய்து பார்த்துட்டு மறக்காம சொல்லிடுங்க. தான்க்யூ

Be simple be sample

தேங்ஸ் செய்து பத்துடு சொல்ரென்

Nana thanturi chicken pannen rempa nalla vanthusu testa iruthusure

ஊருக்கு போய் இத செய்து சாப்பிட்டு தான் அடுத்த வேலை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி,,,

பாபா நடமாடும் உணவகம் ( ரெய்கி குணா )
பேஸ்புக் :பாபா உணவகம் Facebook :babaunavagam / reikiguna