காய்கறி சங்கிலிகள்

காய்கறி சங்கிலிகள்

தேதி: December 22, 2015

4
Average: 3.8 (5 votes)

 

காரட்
சிறிய கத்தி
வெஜிடபிள் பீலர்
வெஜிடபிள் கோரர் (vegetable corer)
சாப்பிங் போர்டு (chopping board)
கிச்சன் டவல்
டூத்பிக்

 

தேவையானவைகள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
ஒரு டூத்பிக்கை கத்தியால் மெல்லிய‌ சிராய்களாகப் பிரித்துவிட்டு, ஒரு சென்டிமீட்டர் நீளத் துண்டுகளாக‌ உடைத்து வைக்கவும்.
டூத் பிக்
காரட்டின் தோலைச் சீவிவிட்டு, தலைப் பகுதியை நேராக வெட்டி நீக்கவும்.
காரட்
கோரரை, காரட் நடுவில் திருகியபடி நுழைக்கவும். கோரரின் வளையத்திற்கு மேல் உள்ளே போக விட வேண்டாம். (காரட் சாறு வடியக் கூடும். இதற்காகத் தான் கிச்சன் டவல்.)
காரட்
கோரரை வெளியே எடுத்து விட்டு, காரட்டை 3 மில்லிமீட்டர் அகல‌ வட்டங்களாக‌ வெட்டிக் கொள்ளவும். கோரர் நுழைந்த‌ அளவு ஆழத்திற்கு வெட்டியதும் மீண்டும் கோரரால் துளைத்துவிட்டு வட்டங்களை வெட்டிக் கொள்ளவும்.
காரட் துண்டுகள்
வெளி வளையங்களை மட்டும் சேகரித்துக் கொள்ளவும்.
காரட் வளையம்
வளையங்கள் சில இடங்களில் மெல்லியதாக வெட்டப்பட்டுவிடும். பாதி எண்ணிக்கை வளையங்களை மட்டும், அவற்றின் மொத்தமான இடத்தில் கத்தியால் அழுத்தி வெட்டித் திறக்கவும்.
காரட் வளையம்
திறந்த ஒரு வளையத்தினுள் முழுமையான‌ வளையங்கள் இரண்டை மாட்டவும். திறந்த இடத்தில் இரு பக்கமும் டூத்பிக்கினால் குற்றி, துளை செய்துவிட்டு, உடைத்து வைத்த சிராய்த் துண்டு ஒன்றைக் குற்றி வளையத்தை மீண்டும் இணைத்து விடவும்.
காரட் வளையம் கோர்த்தல்
இனி ஏதாவது ஒரு பக்கம், ஒரு திறந்த‌ வளையம் ஒரு முழு வளையம் என்று மாற்றி மாற்றிக் கோர்த்துக் கொள்ளவும். திறந்த‌ வளையங்கள் அனைத்தையும் இணைத்து முடிக்க அழகான‌ நீளச் சங்கிலி கிடைக்கும். இதனைக் கொண்டு, ப்ளாட்டர் (platter) ஒன்றை அல்லது ஒரு முழு மேசையைக் கூட அலங்கரிக்கலாம்.
காரட் சங்கிலி
சிறிய சங்கிலித் துண்டுகளைத் தொங்க விடலாம். (தொங்குவதை மறு நாளைக்கு என்று வைக்க இயலாது. காரட் உலர ஆரம்பிக்கும் சமயம் குச்சு பிரிந்துவிடும்.)
காரட் சங்கிலி
இதே முறையில் வேறு காய்களைக் கொண்டும் சங்கிலிகள் செய்யலாம். முள்ளங்கி, பீட்ரூட் போன்ற கிழங்கு வகைகளையும் வெள்ளரி, சுகினி போன்ற காய்களையும் பயன்படுத்தலாம். காய்களின் தன்மைக்கும் வெளி வட்டத்தின் அளவிற்கும் ஏற்றபடி உள்வட்டத்தை வெட்டிக் கொள்ள‌ வேண்டும். விரும்பினால் வெளி, உள் வட்டங்கள் இரண்டையுமே வெட்டி எடுக்கலாம். வெட்டுவதற்கு, சிறிய‌ வட்டமான‌ குக்கி கட்டர்கள், சிறிய‌ மெலன் ஸ்கூப் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வெளி வட்டங்கள், ஒரு அளவுக்கு மேல் பெரிதானால் சங்கிலி தட்டிற்கு அமைப்பில்லாதது போல் தெரியும்.
வெள்ளரி சங்கிலி
கத்தியைத் தவிர‌ வேறு எந்த‌ உபகரணங்களுமே இல்லாமல் வெங்காயத்தை மட்டும் வைத்துச் செய்த சுலபமான சங்கிலி இது. வெங்காயத்தை வட்டங்களாக வெட்டிக் கொண்டு, பாதி எண்ணிக்கை வட்டங்களை அப்படியே வைத்து மத்தி வரை கத்தியால் ஒரு கோடு அழுத்தி வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வளையங்களைப் பிரிக்கவும். வளையங்களில் வெளிப் பக்கம் உள்ளவை பெரிதாகவும் உள்ளே போகப் போகச் சிறுத்தும் காணப்படும். முதலில் பெரிய‌ வளையங்கள் அனைத்தையும் கோர்த்துவிட்டு பிறகு சிறியவற்றைக் கோர்க்கலாம். அல்லது ஒரே அளவானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியைச் சமையலில் பயன்படுத்தலாம். குச்சு வைத்துப் பொருத்தாமல் அப்படியே கோர்த்து வைக்க வேண்டும்.
ஆனியன் சங்கிலி

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

காய்கறி சங்கிலிகள் பார்க்க ரொம்ப கலர்புல்லா அழகா இருக்கு.

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Super

:-) உறுப்பினராகின அன்றே இங்க கமண்ட் போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றி மலர்விழி

கனி... உங்களுக்கும் என் நன்றி. லேட்டா சொல்றேனோ! :-)

‍- இமா க்றிஸ்

Very nice explanation. Thank you

வெகு காலம் கழித்து இந்த இழையில் ஒரு பாராட்டு - மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. என் அன்பு நன்றி சகோதரி.

‍- இமா க்றிஸ்