எங்கெங்கு காணினும் வெள்ளமடா

சென்னை வெள்ளம்

'''இடுக்கண் வருங்கால் நகுக‌, துன்பம் வந்தால் சிரிங்க‌'' என்று வாய்ஸ் கொடுப்பார்கள். நாமும் சிரித்துவிட்டு செல்வோம். ஆனால் நம்மால் அப்படி இருக்க‌ முடியாத‌ நிலை வரும் என்று எண்ணிக் கூடப் பார்க்கவில்லை.
''''தமிழ் நாட்டு தலை நகர்க்கே இந்த‌ கதியா?, சென்னை நகரமே தண்ணீரில் மூழ்கி விட்டது, சென்னை நகரில் வெள்ளம்; மக்கள் கண்களிலே கண்ணிர் வெள்ளம், உதவுங்கள், நேசக்கரம் நீட்டுங்கள், அன்பு பாலம் அமைப்போம்''' என்றெல்லாம் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரடி ஒளிப்பரப்பாக‌ வெள்ளக் காட்சியை துயரக் காட்சியை ஒளிப் பரப்பியது. நம்மால் துயரத்தை கட்டுப்படுத்த‌ முடியவில்லை. எங்க‌? எப்படி? ஏன்? என்ன‌? என்று கேட்டுக் கேட்டு செய்தியை அறிந்துக் கொள்ளத்தான் முடிந்தது. எப்படி எப்படி எல்லாம் அவர்களுக்கு உதவி செய்வது என்று வெளியூர் மக்கள் தவித்தனர்.
அல்லாவுதீனும், அற்புத‌ விளக்குப் போல் , இங்கே நூறுப்பேர்க்கு உணவு, உடை, உறைவிடம் தயார். உதவி தேவைப் படுவோர் தொடர்பு கொள்க‌ என்று தொலைப்பேசி எண்ணுடன் தகவல் கொடுக்க‌, மற்றோர் இடத்திலிருந்து ஐப்பது
பேருக்கு குழந்தைகள் பெரியவர்கள் உட்பட‌ உண்வு தேவை என்று தொலைப்பேசி எண்ணுடன் தகவல் வர‌, வேறு இடத்தில் இருந்து இங்கு ஆயிரம் பேருக்கு உண்வு தயார் வினியோகிக்க‌ தன்னார்வலர்கள் தேவை விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்க‌ என்று தொலைப்பேசி எண்ணுடன் தகவல் பரிமாற்றம். என்ன‌ அர்த்தமுள்ள‌, அழகான‌, பயனுள்ள‌, தன்னலமற்ற‌ தகவல் பரிமாற்றம். இந்த‌ நிகழ்ச்சியை சத்தியம், செவன் ஜி, பாலிமர், புதிய‌ தமிழகம் போன்ற‌ ஊடகங்கள் சேனல்கள், தெளிவான‌ திட்டமுடன் செயலாற்றியதை நம்மால் கண்கூட‌ காணமுடிந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த‌ எங்களுக்கோ ஆனந்தக் கண்ணீர். மனித‌ நேயம் சாகவில்லை, சற்றே மறைந்து விட்டது. ஆனால் தக்க‌ நேரத்தில் விஸ்வரூபமாக‌ வெடித்து, பரவி, மக்களின் மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது என்றால் அது மிகையில்லை.
''எங்களுக்கு உணவு, தண்ணிர், ஏன் உடைக்கூட‌ வேண்டாம், முதலில் நேப்கீனுக்கு ஏற்பாடு செய்யுங்கள்'''என்று ஒரு பெண் வெளிப்படையாக‌ அதுவும் ஆண்களைப் பார்த்து கதறிய‌ காட்சி, கொடுமைடா சாமி. அது வரை மனிதனுக்கு அத்தியாவச‌ தேவைதண்ணீர், உணவு, உடை என்று கணக்கிட்டு உதவி கொண்டிருந்தோரை அந்த‌ கதறல் திடுக்கிடச் செய்தது. பெண்களின் அத்தியாசமானது, அவசரமான‌ தேவை எது என்பதை சமுதாயத்திற்கே வெட்டவெளிச்சமாக உணர்த்தியது.
எங்கள் அம்மா, இரண்டாம் உலகப்போர் நடைப் பெற்ற‌ காலத்தைப்பற்றி கதைகதையாய் சொல்வார்கள். அப்போது மக்கள் , பணம் நகையை மட்டும் மூட்டையாக‌ கட்டி தலையனைப்போல் வைத்து கொள்வார்களாம். ''பாம் போட்டுடாங்க‌''நு சத்தம் வந்தவுடன் அந்த‌ மூட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் பதுங்கு குழியில் ஒளிந்துக்கொள்வார்களாம் என்று வேடிக்கையாக‌ சொல்வார்கள். அந்த‌ நிலமைதான் நமக்கும் இப்போது. நாமும் நமக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான‌ ஆவணங்களை ஆபத்து நேரத்தில் சட்டென்று எளிதில் எடுத்து கொள்வதற்கேற்ப‌ தனியாக‌ ஒரு பையில் வைத்துருப்பது அவசியம் என்பதை சென்னை வெள்ளம் நமக்கு பாடம் புகட்டி உள்ளது.
''விதியை மதியால் வெல்லலாம், இயற்கையை செயற்கையால் வெல்லலாம்''என்று நீர் வழி ஆதாரங்களை துண்டித்து களியாட்டம் புரிந்த‌ மக்களுக்கு இயற்கை பாடம் கற்பித்து உள்ளது. இப்போதாகிலும் விழித்துக் கொள்ள‌ வேண்டியது அவசரம் மட்டும் அல்ல‌ அவசியமானதாகும். இது அரசின் கடமை மட்டும் அல்ல‌, மக்களின் கடமையும் ஆகும். '''நூறு இளைஞர்களைக் கொடுங்கள், சாதித்துக் காட்டுக்கிறேன்''என்றார் விவேகானந்தர். ''எதிர் கால‌ இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது'''என்றார் கலாம். அத‌ நிதர்சணமான‌ வார்த்தைகள் உண்மையானது என்பதை நம் நாட்டு இளைஞர்கள் நிரூப்பித்துக் காட்டியுள்ளார்கள். நம் நாட்டு இளைஞர்களுக்கு நமது ராயல் சல்யூட்.
வெள்ள‌ ஆபத்திலும் வருத்தப்படாத‌ வாலிபர் நெட்டில் கொடுத்த‌ மீம்ஸ்
''மேட்டினில் வாழவாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
போட்டினிலே பின் செல்வார்.''
''தண்ணீராய் செலவழித்து கட்டிய‌ வீட்டில்
தண்ணீரே நுழைந்தது பாரீர்.
''ஆஸ்தியென ஆசையாய் கட்டிய‌ வீடெல்லாம்
நாஸ்தி யானதே சோகம்''''

5
Average: 5 (3 votes)

Comments

//இரண்டாம் உலகப்போர் // & //தலையணை உறை// அது கதையல்ல ரஜினி; அந்தக் காலத்துடன் முடிந்துவிடவும் இல்லை. இப்போதும் அங்கங்கே நடந்துகொண்டேதான் இருக்கிறது. 'போற பாக்' ஒன்று ஒரு காலம் இலங்கைத் தமிழர் வீடுகளில் இருக்கும். உரம் (சிங்கள மொழியில் போற என்றால் உரம்.) வரும் நைலான் பை யில் முக்கியமான ஆவணங்கள், வீட்டில் உள்ள நகைகள் எல்லாம் தயராக இருக்கும். தமிழில் சொன்னால்... கிளம்பிப் 'போற பாக்'. ஒரு தடவை சின்னவர் (அப்போ 4 வயது)துணிகளைக் கழுவும் போது காற்சட்டைப் பையிலிருந்து நான்கைந்து ஒடியல்கள் கிடைத்தன. :-) இப்போ நினைக்கச் சிரிப்பு வருகிறது. சின்னவர் சொன்ன காரணம், 'ஓடிப் போகும் போது பசிக்குமே!' என்பது.

இங்கு இயற்கை அனர்த்தங்கள் பற்றியும் அதற்குத் தயாராக இருப்பது பற்றியும் பாடசாலையில் சொல்லிக் கொடுப்பார்கள். வீட்டார் தயாராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் பக்குவம் மனதளவில் சின்னவர்களுக்கும் வந்துவிடும்.

தங்கள் சிரமங்களைப் பற்றிச் சிந்தியாது பாதிக்கப்பட்டவர்களுக்கு மும்முரமாக உதவிகள் செய்த உள்ளங்கள் உண்மையில் மகத்தானவைதான்.

//''மேட்டினில் வாழவாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
போட்டினிலே பின் செல்வார்.''// இடுகையைப் படிக்கும் போது வந்த சோகம் நொடியில் காலி. ;))) சிரிக்க வைச்சிட்டீங்க ரஜினி.

‍- இமா க்றிஸ்

ஹாய்

நன்றி தோழி. பதிவுக்கு யாரும் கருத்துக்கொடுக்கவில்லையே என்று மிகவும் சோர்ந்து விட்டேன். அனிதா, நிகிலா, பாலனாயகி ஒருத்தரும் கருத்து சொல்லவில்லையே என்பது ஆதங்கம். சுப்ரியர் இமாவே கருத்துப் பதிவு தந்தது மிகவும் சந்தோஷம்.
'''நாஸ்தியானதே'''படித்து சிரித்துவிட்டேன் என்று பாராட்டியமைக்கு நன்றி இமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

இதற்கெல்லாம் போய் சோரலாமா! :-) எல்லோரும் பிஸியா இருக்கிறாங்க என்று நினைக்கிறேன். வருவாங்க.

கமண்ட் போடுறவங்க மட்டும்தான் படிக்கிறாங்க என்கிறது இல்லை ரஜினி. மூன்று கமண்ட் இருந்தால் முப்பது பேராவது படிச்சிருப்பாங்க. கமண்ட் எல்லாம் எண்ணிட்டிருக்காம. 'என் கடன் வலைப்பதிவு எழுதுவதே!' என்று எழுதிட்டே இருங்க. நிச்சயம் நிறையப் பேர் படிப்பாங்க.

~~~~

//கடல் அளவு ஆசை
கையளவு மனசு// ;))) விடுமுறை. திடீரென்று நினைச்சிட்டு கையளவு மனசு பார்க்கிறோம். :-)

‍- இமா க்றிஸ்

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. நான் பதிவு போட்ட அன்னைக்கே படிச்சிட்டேன்.. ஹாலிடே பிஸி அதனால கமெண்ட் போடல.. எல்லோரும் வருவாங்க..
நாங்களும் இதை தான் நினைத்தோம்.. யார் யார் என்ன பண்றாங்களோனு ரொம்ப கவலைபட்டோம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அன்பு ரஜினி
என் கருத்துக்களைத் தேடியது குறித்து மகிழ்ச்சி.:)
பொங்கல் க்ளீனிங் ரொம்ப‌ பிசி.
அடிக்கடி வர‌ முடியலை பா.
அந்த‌ குறள் ரொம்ப‌ சூப்பருங்க‌:))

ஹாய்,

''நான் பதிவு போட்ட‌ அன்னைக்கே படித்து விட்டேன்'''ரொம்ப‌ சந்தோஷம். காசு, பணம், மணி, துட்டு ஆகிய‌ கால‌ கட்டங்களை கடந்து விட்டவள். உங்களின் தொடர்பும், பாராட்டுமே எனக்கு ஹார்லிக்ஸ். நன்றி அபி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
;;என் கருத்துக்களைத் தேடியது குறித்து மகிழ்ச்சி''ஆமாம் நிகிலா சரியான‌ கருத்து கணிப்புக் கொடுப்பவர் நீங்கள்.

;;அந்த‌ குறள் ரொம்ப‌ சூப்பருங்க‌:}} நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அன்பு ரஜினி மேடம்,

யாரும் கருத்து தெரிவிக்கலையேன்னு யோசிக்காதீங்க‌. நான் எல்லாம் அப்பப்ப‌ காணாமல் போய், வர்ற‌ ஆளு, என்ன‌ செய்யறது.

ஆனா, கண்டிப்பாக‌ படிச்சிடுவோம்.

இன்னொண்ணு, படிக்கிற‌ எல்லோரும் பதிவு போடுவதில்லை, ஆனா, அறுசுவையில் எழுதியாச்சுன்னா, அதை உலகமெங்கும் உள்ளவங்க‌ படிக்கிறாங்க‌ என்பதுதான் நிஜம்.

அதனால‌, தொடர்ந்து எழுதுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய்,

எங்கேயோ கேட்ட குரல் நு திரும்பிப் பார்த்தா நம்ப‌ சகோதரி. அப்பப்ப‌ மனசு தோற்றுவிடும் போது லைக்ஸ் தேவை படுகிறதுமா. அது தான் ஆதங்கமா வருகிறது. நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு