horlicks

friends 8months baby ku horlicks kudukalama

//kudukalama// கொடுக்கலாம், எப்போதாவது அருமையாக‌ ஒரு 'ட்ரீட்' போலவென்றால் சரிதான். தினமும் கொடுக்க‌ வேண்டாம். பால் போன்று இது ஒரு உணவு அல்ல‌. கொடுக்க‌ ஆரம்பித்தால் பிறகு குழந்தைக்குச் சுவை பிடித்துப் போய், 'ஹோர்லிக்ஸ்தான் வேண்டும்,' என்று அடம்பிடிக்க‌ ஆரம்பிக்கலாம். அத்தியாவசியமான‌ உணவுகளை உள்ளே அனுப்புவது பிரயத்தனமாகிவிடும்.

இது குழந்தைக்கு உணவுகளை அறிமுகப்படுத்தும் காலம். ஆரோக்கியமான‌, வித்தியாசமான‌ 'உணவுப் பதார்த்தங்களை' அறிமுகப்படுத்தப் பாருங்கள்.

விளம்பரங்கள் சொல்லும் தயாரிப்புகள், 'டேக் எவே' உணவுக்குச் சமம். எப்போதாவது ஒரு அவசரப் பொழுதில், பயணங்களின் போது கொடுக்கவென்று இவற்றை வைத்துக்கொள்ளலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்