வளைகாப்பு procedures

Dear sisters, enaku oru help venum. 7th month valagapu panalama.. Panalam na ena procedures. Evlo selavu agum veetlaye simple ah pana. En ammaku sariya therila. Pls solunga. Amma veetla irundhu 5 types sadham seidhu kondu varardhu matum dhana ilana varavangaluku sapadu selavum amma veetla dhan pananuma. Pls solunga.

எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் தோழி தென்தமிழகத்தை பொறுத்தவரை வளைகாப்பு அம்மா வீட்டு செலவுதான் வாழ்த்த வரும் உறவினர்கள் அனைவருக்கும் சாப்பாடு நம்மால் முயன்ற அளவு சிறிய கிப்ட் கொடுக்கலாம் கண்டிப்பாக மஞ்சள் குங்குமம் வளையல் கொடுக்க வேண்டும் 7வது மாதத்தில் வளைகாப்பு பண்ணலாம்

எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் தோழி தென்தமிழகத்தை பொறுத்தவரை வளைகாப்பு அம்மா வீட்டு செலவுதான் வாழ்த்த வரும் உறவினர்கள் அனைவருக்கும் சாப்பாடு நம்மால் முயன்ற அளவு சிறிய கிப்ட் கொடுக்கலாம் கண்டிப்பாக மஞ்சள் குங்குமம் வளையல் கொடுக்க வேண்டும் 7வது மாதத்தில் வளைகாப்பு பண்ணலாம்

Thank you sister..

தமிழ் மாத படி 7வது மாதம் அல்லது குடும்ப வழக்க படி 9வது மாதம் சிலர் செய்வார்கள். எனக்கு 7 வது மாதத்தில் வளைகாப்பு நடத்தினார்கள். என் வளைகாப்பு செலவு மாமியார் வீடுதான் செய்தார்கள். அம்மா வீடு 21 தட்டு வரிசை வைத்து நகை மற்றும் மாப்ளை பெண்ணுக்கு பட்டு புடவை பட்டு சட்டை இதுதான் அம்மா வீட்டு செலவு. 11 வகையான சாப்பாடு வருபவர்களுக்கு 50 டசன் வளையல்கள் குழந்தைகளுக்கு teddybear toys சிறிய வகை பரிசு. அவர் அவர்கள் குடும்ப மரபு படி பெரியவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். உங்களுக்கான கல்யாண செட்டு மற்றும் makeupசெலவுகள் உங்கள் கணவரிடம் வாங்கி கொள்ளுங்கள். பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு வளைகாப்பு செய்து ஆரோகியமான குழந்தை பெற வாழ்த்துக்கள்.

Nandri sister

வளைக்காப்பு 7 மாதம் செய்யலாம்.நீங்க அதாவது அம்மா வீட்டுல பண்றதா இருந்தா 5 வகை சாதம் வரவங்களுக்கு எல்லாம் வளையல் மஞ்சள் குங்குமம் முடிந்தால் ஒரு சின்ன கிண்ணம் ஏதாவது ஸ்டீல் பாத்திரம் தரலாம்.மாமியார் வீட்டுல செய்றதா இருந்தா உங்களால் முடிந்த அளவுக்கு பூ, பழம்,ஸ்வீட், காரம் என தட்டுகள் வைக்கலாம்.எனக்கு தெரிந்ததை சொன்னேன் அக்கா.வளைக்காப்பு நல்ல முறையில் நடைபெற்று சிக்கிரமா ஒரு குட்டி பையன் அல்லது தேவதை பிறக்க வாழ்த்துக்கள் அக்கா

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும்

மேலும் சில பதிவுகள்