சோளா பூரி - 2

தேதி: January 4, 2016

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (9 votes)

 

மைதா மாவு - கால் கிலோ
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை தேக்கரண்டி


 

முதலில் சோளா பூரி செய்ய தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மைதா மாவுடன் உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக் கொள்ளவும்.
தேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.
சுவையான சோளா பூரி தயார். விரும்பிய குருமா அல்லது சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்குப் பூரி பிடிக்கும். விரைவில் செய்து பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

சமையல் குறிப்புக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி,,,

பாபா நடமாடும் உணவகம் ( ரெய்கி குணா )
பேஸ்புக் :பாபா உணவகம் Facebook :babaunavagam / reikiguna