குழந்தையின் கண்ணுக்குள் முடி

en kulaiinthaiyin kannukkul mudi ulladu. mattrum kannil thanneer vandu kondae ulladu. ena seivadu?

பெரியவர்களானால், கையைக் கழுவிக் கொண்டு கிண்ணம் போல பிடித்து நீர் தேக்கி, முகத்தைக் குனிந்து, கண்ணை நீரில் வைத்து சிமிட்ட நீரில் கழுவிக் கொண்டு வரும். (ஃபார்மஸியில் இதற்கென்று கிண்ணங்களும் கிடைக்கும். )குழந்தை... இப்படிச் செய்ய வைக்க முடியாது.

யாராவது சொன்னால் கூட, காட்டன் பட் வைத்து எடுக்கவெல்லாம் முயல வேண்டாம். முடிதானே என்று நினைப்போம். சமயங்களில் அது மெல்லிதாக சொருகிக் கொண்டு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும். (அனுபவம். முன்பு சில வருடங்கள் அடிக்கடி இமை கண் உள்ளே விழுந்து தொந்தரவாக இருந்தது எனக்கு. எங்கு போனாலும் ஒரு கைக் கண்ணாடியுடன்தான் போனேன். முடியத் தட்டி எடுக்க முயன்ற ஒரு சமயம் விழிப் படலத்தில் சொருகிக் கொண்டது.)

குழந்தை இரவு தூங்கி எழும்போது அனேகம் எல்லாம் சரியாகி இருக்கும். கண்ணீர் வருவது நல்லதுதான். அதுவே முடியைக் கழுவிக் கொண்டு வரும். நாளைக் காலையும் முடி உள்ளே இருப்பது தெரிந்தால் டாக்டரிடம் கொண்டு சென்றால் கவனமாக எடுத்துவிடுவார்கள். அதுதான் பாதுகாப்பான விடயம்.

அது வரை கண்ணைக் கசக்க விட வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

தங்கள் கருத்துக்கு நன்றிங்கமா. நம்ப வீட்டுக்கு பக்கத்துல ஒருத்தர் பாப்பா கண்ணுள ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விட சொன்னாங்க நாங்களும் விட்டோம் கண்ணுதண்ணீல தானா வெளில வந்துடுச்சிங்கமா. உங்ககிட்ட ஒரு உதவி என் 6 month baby க்கு என்னென்ன food எப்போ தரலாம்னு உங்களுக்குத் தெரிஞ்ச எனக்கு ஒரு timetable கொடுங்கமா. thanking you.

மேலும் சில பதிவுகள்