அன்பின் அறுசுவை

மெதுவடை

மதுமதி தன் ஐந்து வயது மகளை தூங்க‌ வைத்தாள். இரண்டு வயது மகனுக்கு பாட்டிலில் பால் புகட்டினாள். சரவணன், அவளது கணவன் அருகில் வந்து அமர்ந்தான். ''நம் கல்யாண‌ நாளை விசேஷமாக‌ கொண்டாட‌ வேண்டும் என்றாயே, என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று யோசித்தாயா?''என்றான். ''ஆமாங்க‌ நானும் பலவிதமா திட்டமிட்டுள்ளேன். காலை எட்டு மணிக்கு கோயில், ஒன்பது மணிக்கு நம் வீட்டில் டிபன், மாலை ஆறு மணிக்கு ஓட்டல் வெல்கமில் நமது உறவினர், நண்பர்களுக்கு டின்னர். என் ஏற்பாடு உங்களுகு வசதியா, போதுமா? ஏதாவது மாற்றம் உண்டா?''' என்று கேள்விகளை அடுக்கினாள். ''ஒ.கே. எல்லாம் சரியாக‌ உள்ளது. வெரி குட். ஆனால், காலை நம் வீட்டில் டிபன் என்று அணுகுண்டு போட்டுள்ளாயே? யார், யார் டிபனுக்கு வருகிறார்கள்? ''என்று கேலியாகப் பார்த்தான்.
'''ஆமாங்க‌ என் டிபன் அணுகுண்டு மாதிரித்தான் இருக்கும். ஏன் கேலி பண்ண‌ மாட்டீங்க‌|. என்று பொய் கோபத்துடன் சிணுங்கினாள். ''உங்க‌ அப்பா, அம்மா, எங்க‌ அப்பா,அம்மா மட்டுமே''என்றாள். ;;சரி, சரி என்ன‌ மெனு' என்றான் சரவணன். '''உங்க‌ அப்பா அம்மாவுக்குப் பிடித்த‌ கேரட் அல்வா, பூரி, உருளைக் கிழங்கு மசாலா. எங்க‌ அப்பா அம்மாவுக்குப் பிடித்த‌ கேசரி, இட்லி, வடை, சாம்பார். சரியா'''என்றாள் மதுமதி. '''ஏம்மா வெட்டிங் டே நமக்கா? இல்லை அவர்களுக்கா? ''நக்கலாக‌ வினவினான் சரவணன்.
'''நாம் அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது ஒவ்வொரு நாளும் நமக்குப் பிடித்த மெனுவையே அவங்க‌ செய்வாங்க‌. இப்ப‌ நம்ம‌ வீட்டுக்கு அவங்க‌ வரும் போது அவங்களுக்கு பிடித்த‌ ஐட்டங்களை கொடுத்தோம்னா அவர்களுக்கு சந்தோஷமா இருக்குங்க‌'. அதணால் தான் இந்த‌ மெனு'''என்றாள் . '''சரியான‌ திருட்டுக் கள்ளி''என்று அவள் கன்னத்தில் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
;;;மதுமதி, நாளைக்கு நமக்கு கல்யான‌ நாள், தேவையானதை வாங்கி விட்டாயா? ''என்றான். '''ம்ம்ம் '' நு தலையை ஆட்டினாள். தன் சமையல் குறிப்புக்களையும் காட்டினாள். அவனும் குறிப்பை உரக்கப் படித்தான். ''கேசரிக்கு பால் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக‌ இருக்கும், கேரட் அல்வாவிற்கு கோவா சேர்க்க‌ வேண்டும், கோதுமை மாவுடன் கொஞ்சம் ரவை கலந்து பூரி செய்தால் , பூரி உப்பலாக‌ வரும். ம்ம். ஒகே ஜமாய்.'''என்றான்.
அவள் அருகில் வந்தாள் மகள், ''நாம‌ நாளைக்கு பிஸியா இருப்போம். நா இப்பவே ஓம் ஒர்க் முடித்து விடுகிறேன் . ஹெல்ப் பண்ணுங்கமா''என்றாள். மகளுடன் சேர்ந்து அவள் வேலை முடிய‌ டைம் இரவு 11. அடுத்து நை நை என்று சினுங்கிய‌ மகனுக்கு விக்ஸ் தடவி, தட்டி கொடுத்து தூங்க‌ வைக்கும் போது டைம் நைட் ஒரு மணி.
சரவணனும், மதுமதியும் ஒருசேர‌ கண்விழித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை சொல்லி கடிகாரத்தைப் பார்த்தனர். சரியாக‌ காலை மணி எட்டு. கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்தால் வாழ்த்துக்கள் சொல்லினர் இருவரது அப்பாவும் அம்மாவும். எல்லோரும் கோயிலுக்கு சென்று வந்தனர். சரவணனும், மதுமதியும் எல்லோரும் ஓட்டலுக்கு டிபன் சாப்பிட‌ போகலாம் என்று அழைத்தனர்.
''மதுமதி, உங்க‌ அப்பா அம்மாவிற்குப் பிடித்த‌ கேசரி, இட்லி, வடை, சாம்பார் நான் கொண்டுவ்ந்துள்ளேன், எல்லோருக்கும் பரிமாறு''என்றாள் அவள் மாமியார். ''மதுமதி, உங்க‌ மாமியார் மாமனார்க்கு பிடித்த‌ பூரி, கிழங்கு மசாலா, இனிப்பும் நான் கொண்டு வந்துள்ளேன் பரிமாறு''என்றாள் அவளின் தாயார். தேங்க்ஸ்மா என்று மாமியாரை வணங்கினாள். நன்றிமா என்று தாயைக் கட்டிப் பிடித்தாள்.
'''இது அன்பின் அறுசுவை விருந்து'''கோரஸாக‌ பாடி மகிழ்ந்தனர் சரவணன், மதுமதி குடும்பத்தினர். உண்மையான‌ அன்பின் அறுசுவை இது தாங்க‌.

3
Average: 3 (3 votes)

Comments

அன்பின் அறுசுவை கதை ரொம்ப‌ ரொம்ப‌ நல்லாருக்கு.

அறுசுவை உணவை அன்புடன் பரிமாற‌ மனமார‌ ஆசைப்படுவதே போதும் இல்லியா.
மதுமதியின் ஆசையை பெரியவங்க‌ நிறைவேத்தராங்க‌.
சம்பந்திகள் இருவரும் ஒருவருக்கொருவர் பிடித்ததை கொண்டு வந்திருப்பது அருமை.

ஆமா, ரஜினி.... மதுவுக்கும், சரவணனுக்கும் பிடித்ததை உணவு என்னன்னு சொல்ல‌லியே .....
அதை நாம‌ பரிமாறலாமே......

இதுவே அன்பின் அறுசுவை. கதையின் சுவை எனக்கு ரொம்ப‌ பிடித்த‌ சுவை:))
பாராட்டுக்கள் ரஜினி.
இது போல‌ இன்னும் படைப்புகள் தர‌ எதிர்பார்க்கிறேன்.:)

கதை அருமையா இருக்கு. ஐடியா பிடிச்சிருக்கு.

உரில் ஒரு குடும்பம்; 3 சகோதரிகள் இருந்தார்கள். வீடுகளும் ஓரளவு அருகேதான் இருந்தன. தாய் தந்தை பிறந்தநாளுக்கு யார் என்ன செய்வது என்று பேசிக் கொண்டு கலக்கிவிடுவார்கள். இப்போ உங்கள் கதையைப் படிக்க அவர்கள் நினைவுக்கு வந்தார்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய்,

''அன்பின் அறுசுவை கதை ரொம்ப‌ நல்லாருக்கு,
''இது போல‌ இன்னும் படைப்புகள் தர‌ எதிர்பார்க்கிறேன்'''பாராட்டுக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
;;கதை அருமையா இருக்கு, ஐடியா பிடிச்சிருக்கு;;;மிக்க‌ மகிழ்ச்சி. ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பும், உரிமையும் சரியாக‌ இருந்தால் அந்த‌ குடும்பம் மகிழ்சியாக‌ இருக்கும் என்பது எனது கணிப்பு. நன்றி இமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அன்பு ரஜினி மேடம்,

கவிதை, கதை என்று கலக்கிறீங்க‌ போங்க‌. நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் சகோதரி,

நன்றி சீதா லஷ்மி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ரொம்பவே நல்லா இருந்தது ,, இப்படிதான் இருக்கணும் குடும்பம் ,,அப்போதான் எல்லாரும் ஒரே குடும்பமா சந்தோசமா நிம்மதியா இருக்க முடியும் .. எல்லாருக்கும் அப்படி அமைய வாழ்த்துக்கள்.. நீங்க நல்லா எழுதியிருகீங்க;

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..