பொரித்த சிக்கன்

தேதி: January 9, 2016

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (13 votes)

சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
தந்தூரி மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
ஓமம் (oregano) - சிறிது (விரும்பினால்)
கார்ன் ஃபிளார் - 2 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவையான அளவு

எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இஞ்சி பூண்டு, தயிர், வினிகர், உப்பு போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊற விடவும்.
பின்னர் அதில் தந்தூரி மசாலா பவுடர், மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
அதனுடன் கார்ன் ஃபிளார் மற்றும் முட்டை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
கடைசியாக ஆரிகானோ சேர்க்கவும்.
மிதமான தீயில் பொரித்து பொரித்து எடுக்கவும்.
சுவையான பொரித்த தந்தூரி சிக்கன் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல குறிப்போட வந்துருக்கீங்க. சூப்பர் சிக்கன் முசி

Be simple be sample

குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் டீமிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி ரேவதி,அடிக்கடி அறுசுவையில் தலை காட்ட‌ முயர்ச்சி செய்கிறேன்.

சூப்பர் சிக்கன் ரெசிப்பி இதை bake செய்தால் நன்றாக இருக்குமா

சூப்பர் சிக்கன் ரெசிப்பி இதை bake செய்தால் நன்றாக இருக்குமா

பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,நான் பேக் செய்ததில்லை,விரும்பினால் கார்ன் ப்லோர்,முட்டை சேர்க்காமல் பேக் செய்து பாருங்க‌.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.