என் குழந்தை சரியாக துங்க வழி சொல்லுங்கள் தோழிகளே

என் குழந்தைக்கு 7.5 மாதம் ஆகிரது.அவள் பிறந்ததுள இருந்தே சரியாக துங்க மாட்டா.இப்போதும் அதே பிரச்சனை தான்.எனக்கு முதுகு வழி இருக்கு நான் என் பொண்ண வச்சிட்டு ரொம்ப கஷ்டம் படுரேன்.என் பொண்ணு பகல்ல தூங்கவே மாட்டா.இரவும் 5 or 6 நேரம் எழுந்துருவா.நான் நல்ல வயித்துக்கு கொடுத்து தான் தூங்க வைக்கேன்.துங்குன 30 min ல எந்திரிச்சி இருந்து அழுவா.எதுகுனே தெரியாது.அதுகப்புரம் கொஞ்சம் பால் குடிசிட்டு தூங்குவா.மருபடி 40 min ல எழுபுவா அதே மாதிரி பன்னுவா.5 to 6 times.பகல் ல நதூங்கவே மாட்டா இரவும் சரியா தூங்கலனா எப்படி இருக்கும்.எப்பவும் அழூகை.முழிக்கும் போது கண்ண துரக்காமலே ஒஒஒஒஒ னு அழுவா.ஏன்.நான் தூக்குனா தான் சமதானம் ஆவா.புருசன் தூக்குனா அழுவா அப்ப மட்டும்.நான் இப்போ abuthabi ல இருக்கேன்.உதவி பன்னுங்கள் தோழிகளே...

Hi revathi... Nalama? Romba naal pasa mudiala pa..
Abu Dhabi vanthutingala?
kulandhai vayiru valiyaal alalam..
konjam kayam Karachi kuduthu parunga pa..

Hi jenisa.நான் நலம்.நீங்க நலமா.நான் அபுதாபி வந்து 2 மாதம் ஆகிறது.நான் al shahama ல இருக்கோம்.நீங்க எங்க இருகிண்க.
வயரு வழி இல்ல.aluthute இருக்க மாட்டா தூங்க தான் மாட்டா.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்.
குழந்தைக்குப் பால் தரும்போது தலை சற்று உயரமாகவும் உடல் பகுதி சற்று தாழ்வாகவும் (குறைந்தது 4 அங்குலமாவது வித்யாசம்) இருக்கவேண்டும்.
பால் குடிக்கும் போது (பால் குடித்தது போதவில்லை என்று நீங்கள் உணர்ந்தால்
தூங்க‌ விடாமல் காலை வருடி விட்டு மறுபடியும் குடிக்கவையுங்கள். பால்
குடித்த‌ பிறகு தோள் மேல் சார்த்திக் கொண்டு முதுகை லேசாகத் தட்டிக் கொடுத்து
வருடிக் கொடுங்கள். பாலோடு காற்றையும் சேர்த்துக் குழந்தை குடித்து விட்டால்
ஏப்பமாக‌ வெளியேறும். துளி பாலையும் குழந்தை கக்கி விடும். பயம் வேண்டாம்.
உரை மருந்து கொடுக்கும் வழக்கம் இருந்தால் பிரச்சனை இல்லை.
இல்லையானால் ஜாதிக்காய் கிடைத்தால் அதைச் சந்தனக்கல்லில் இழைத்து
தேனில் குழைத்துக் கொடுக்கவும். இழைத்த‌ விழுது அரை மிளகு அளவுக்கு மேல் போகக் கூடாது அதிகமானால் நிறைய‌ நேரம் தூங்கும், வேறு ஒன்றும்
ஆகாது, கைசுகமும் பதமும் கண்ட‌ குழந்தையை ஒன்றும் செய்யாதீர்கள்.
இந்த‌ எல்லாப் பிரச்சனைகளும் கொஞ்ச‌ நாளைக்குத்தான். இப்பவே சலித்துக்'
கொண்டால் எப்படி, நல் வாழ்த்துக்களுடன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Poongothai amma,

vanakam..

en kuladhaiyai nan thaniya than pathukiren.. Abroad la irukom ma.. Ava oru velayum seiya vidamataka.. Engayathu pona udane alura.. Ena panrathu.. Enala kitchen la oru Vela paka mutila.. Epdi samalikrathu idea iruntha kudunga please..

குழந்தை பக்கம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவற்றை பூங்கோதை சொல்லியிருக்காங்க.

இது உங்கள் கேள்வியின் இன்னொரு பக்கத்துக்கான பதில்.
முதுகுவலி என்றீர்கள். முக்கியமாக போஷாக்குப் போதைமையால் இது இருக்கக் கூடும். பாலூட்டுவதால் பொருத்தமான உணவாக அதே சமயம் ஆரோக்கியமான உணவாகப் பார்த்துச் சாப்பிடுங்கள். ஓய்வு - இன்னும் சற்றுக் கூட்ட வேண்டுமோ! இது கொஞ்சம் கஷ்டமான விடயம் இல்லையா? :-) அத்தியாவசியமான வேலைகள் தவிர மீதி எந்த வேலையையும் இப்போ செய்ய வேண்டாம். வேலைகளைப் பார்த்து ப்ளான் செய்துகொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் குழந்தையைச் சரியாகப் பார்த்துக்கொள்ள முடியும்;ரசிக்கவும் இயலும்.

‍- இமா க்றிஸ்

அப்படியே செய்கிரேன் .ஜெனிசா படுர கஷ்டம் தான் எனக்கும்.எதாவது உதவி பன்னுங்க.

மேலும் சில பதிவுகள்