சிறு மாற்றம் பெரு மகிழ்ச்சி {உண்மை சம்பவம் }

அரிசியை வெயிலில் வைத்து எல்லை தாண்டி சிந்தாமல் பரவி விட்ட செல்வாம்பிகைக்கு எல்லையை தாண்டி எங்கெங்கோ சென்றுவரும் சிந்தனைகளை சிதறாமல் சேர்க்க வழிதெரியவில்லை.

ஒரு வித கலக்கமும் மகிழ்ச்சியும் சேர்ந்து சொல்லொணா உணர்வுகள் மனதில் அலைபாய ஒரு கையால் காக்கையை விரட்டியபடி மூழ்கித்தான் போனாள் சிந்தனைக்குள்.

அப்படி என்னதான் சிந்தனை.

வெளிநாட்டில் இருக்கும் மகனின் உதவியுடன் தன் ஒரே மகளை நோர்வே யில் மணம் முடித்து குடுத்திருந்தாள். மகள் கர்ப்பமாக இருப்பது அறிந்து வேண்டிய கடவுளர்களுக்கு எல்லாம் நேத்தி செலுத்தி முடிக்கு முன்னரே

''பிரசவ காலத்துக்கு உன்னை இங்கே அழைக்கிறேன் அம்மா ஆயத்தம் செய்து கொள்''

எனும் மகளின் வார்த்தைதான்

ஆம் பங்குனி பிறந்தால் 58 வயதாகப் போகிறது.அடிக்கடி இடுப்பு பிடித்துக்கொள்கிறது.சக்கரை வேறு அதிகமாகிவிட்டதை மருத்துவர் உறுதிப்படுத்திவிட்டார்.காலைப்பனியில் ஓயாமல் தும்மல் போட வேண்டி இருக்கிறது.கண்கள்வேறு அடிக்கடி புகை படிந்ததுபோல் மாயம் செய்கிறது.

என்னதான் செய்வது வயதானால் எல்லோருக்கும் பொதுவாக வரும் அசெளகரியங்கள்தானே எண்றெண்ணி மெதுவாக எழ முயன்றவளை
பலமாக அழைத்தது கணவன் ரத்தினத்தின் கனமான குரல்.

''எங்கே என் கண்ணாடி ? அரை மணிநேரம் பேப்பர் படிக்க ஒரு மணிநேரம் தேடவேண்டி இருக்கிறதே இந்த கண்ணாடியை. எடுத்து பத்திரமாக வைக்க மாட்டியா ???''

ஆமாம் செல்வாம்பிகையின் கணவணுக்கு சுமை தூக்குதல் போன்ற பெரிய வேலைகள் தான் செய்யத்தெரியும் தனக்கான சிறு சிறு வேலைகள் எல்லாமே மனைவியே செய்து பழகிப்போய்விட்ட நிலையில்
கண்ணுக்கு முன்னால் இருந்தாலும் மனைவி எடுத்துக்கொடுக்காமல் அந்த கண்ணாடியை எடுத்து மாட்ட மாட்டார்.

சுற்று முற்றும் பார்த்து ஒரே நொடியில் எடுத்துக்கொடுத்தவளின் சிந்தனை ஓட்டம் மட்டும் முடிவுக்கு வந்ததாக இல்லை.

எல்லோரும் சொன்னார்கள் உனக்கென்ன கொடுத்து வைத்தவள் ,இந்த வயதில் வெளிநாடெல்லாம் போக கிடைத்திருக்கிறது என்று.எல்லோரும் பெருமையாக பார்ப்பதை ரசித்தாலும் சம்மந்தபட்டவளுக்குத்தானே அதன்
மறுபக்கத்தை சிந்திக்க வேண்டிய தேவை இருக்கும் .

பாட்டன் முப்பாட்டன் என்று பிறந்து வளந்த நாட்டின் காலையில் சில்லிடும் இம்மியளவு பனியே ஒத்துக்கொள்ளவில்லை, வயசான காலத்தில் நம்மையே யார் பார்ப்பார்கள் என்ன செய்ய போகிறோம் என்று இருக்க ,
மருந்தும் மாத்திரையும் அதிகமாகிக்கொண்டு போகும் இந்த நிலையில், கடல் தாண்டி அதுவும்,
64 வயதாகியும் கைக்குழந்தைபோல் இன்னும் அடம்பிடிக்கும் கணவனை சொந்தங்கள் உதவியில் விட்டு தன்னந்தனியே பழக்கமில்லாத ஊருக்கு எப்படி போவேன் அங்கே போய் எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று
இதயம் படபடக்க, தண்ணீரை எடுத்து குடித்து மறைத்துக்கொண்டாள்.

ஆயினும் செல்வாம்பிகையின் பயத்தையும் படப்டப்பையும் மகளும் கண்டு கொள்வதாக இல்லை. யாரும் கண்டு கொள்வதாகவும் இல்லை .பரபரப்பாக எல்லா வேலைகளும் நடக்க மகள் சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும்
ஓடி ஆடி வாங்கி பாசல் செய்து திணித்து முடிக்க எப்படி நகர்ந்தது என்று தெரியாமல் வேகமாக நகர்ந்த நாட்கள் பிடித்து தள்ளிவிட, தாய்நாட்டிற்கு தற்காலிக விடை கொடுத்து நோர்வே வந்து சேர்ந்துவிட்டாள்.

புது நாட்டில் கால் வைத்தவளுக்கு ,என்னதான் இந்த உலகில் கொட்டிக்கிடந்தாலும் மனம் என்னவோ நமக்கு பொருத்தமானவற்றில் மட்டுமே லயிக்கும் என்பது போல் ஆச்சரியத்தில் ஆழத்திய விடயம்
புதிய நாட்டின் வயோதிபர்கள்.

இவர்களுக்கு எல்லாம் என்ன வயசிருக்கும் என்று கேட்டவளுக்கு அங்குள்ளவர்கள் சொன்ன பதில் மேலும் ஆச்சரியம் .ஆம் 60 க்கு அதிகம் என்பதே .

என்றுமே எங்குமே பாத்திருக்கவில்லை.கண்களை நம்பவே முடியவில்லை. எவ்வளவு அழகாக உடை அணிந்து இருக்கிறார்கள்.எவ்வளவு சுறுசுறுப்பாக தங்கள் வேலையை செய்கிறார்கள்.உதவி இல்லை என்று உரிக்காமல் ஓரமாக
வாரக்கணக்கில் போட்டு வைத்த தேங்காய்கள் ஞாபகத்தில் வந்து போனது.

65 வயது பாட்டி காரை எடுத்துக்கொண்டு கடைக்கு போய் சாமான்கள் வாங்கி வருவதை மேலும் கீழுமாக பார்த்தாள் செல்வாம்பிகை.பேரப்பிள்ளைகளை பாடசாலை கூட்டிபோவது,தம்பதிகளாக கடற்கரைக்கு செல்வது,வேறு நாடுகளுக்கு
இடங்கள் பார்க்க செல்வது,மேலதிகமாக பொது தொண்டுகள் செய்வது என எல்லாமே ஆச்சரியப்படுத்த உடம்பில் ஒரு உற்சாகம் பரவ அன்றுதான் 58 வயது வயோதிபம் இல்லை என்பதை உணர்ந்த்தாள்.
தொடர்ந்து எந்த மாத்திரையும் தேவைப்படவில்லை.மகிழ்ச்சியுடன் ஓடியாடி வேலைகள் செய்து கலகலப்பாக இந்தவளுக்கு கண்ணீர் பீறீட்டது காரணம் கேட்ட மகளிற்கு சொன்னாள்,
''என் தாய் தந்தையர்கள் உறவினர்கள் மூதாதையர்கள் இப்பிடியும் வாழலாம் என்று தெரியாமல் வயதாகி விட்டது வயதாகி விட்டது என புலம்பி மூலையில் முடங்கி மாண்டு விட்டார்களே என்று குழந்தை போல் குலுங்கி அழுதாள்.

இந்த பயணம் அவள் வாழ்வு முறையையே புரட்டிப்போட்டிருந்தது .சென்ற தேவைகள் சிறப்பாய் முடிய ஊர் வந்து சேர்ந்தவளுக்கு ஒரே உற்சாகம்.வயதாகி விட்டது இனி இதெல்லாம் எதற்கு என்று வைத்திருந்த கைக்கடிகாரத்தை
எடுத்து தன் கணவனிடம் பற்றி மாத்தி தரும்படி கொடுத்தாள்.
ஆச்சரியத்துடன் இது என்ன புது வினோதம் என்று வினவிய கணவனுக்கு அனைத்தையும் புரிய வைத்தாள்.ஏன் கடைசி மூச்சு வரை ரசித்து வாழக்கூடாது என்று கேள்வி கேட்டாள்.நாங்களும் சத்தான உணவுகளை எடுத்து வளர்ந்தவர்கள்தானே
சுத்தமான காற்றை சுவாசித்தவர்கள்தானே நோயும் பிணியும் அண்டிவிட்டதாக ஏன் வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்றாள்.

செல்வாம்பிகை வீட்டில் இப்போது எல்லாமே மாறிப்போய் இருந்தது .மாத்திரைகள் இடம் தெரியாமல் போயிருந்தது.உதவி கேட்டு அடுத்தவர்களை நச்சரிக்கும் தேவைகள் ஒழிந்து போயிருந்தது
.குட்டி குட்டி பயணங்களும் ஆரவாரங்களும் வாழ்வை நிறைத்திருந்தது.இங்கும் வயோதிபத்தை ஓரம் கட்டி வீரமாக வாழும் பலர் கண்ணுக்கு தெரிய தொடங்கினார்கள்.

5
Average: 4.5 (17 votes)

Comments

வாங்க வாங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super very very super

ஏமாறாதே|ஏமாற்றாதே

கதையின் ஆரம்பம் அமர்க்களம் போங்கோ.
//அரிசியை வெயிலில் வைத்து எல்லை தாண்டி சிந்தாமல் பரவி விட்ட செல்வாம்பிகைக்கு எல்லையை தாண்டி எங்கெங்கோ சென்றுவரும் சிந்தனைகளை சிதறாமல் சேர்க்க வழிதெரியவில்லை.//

கதையின் கரு மனதைக் கவர்ந்து விட்டது.
வயதாகி விட்டதாக‌ நினைப்பதாலேயே ஒரு வித‌ சோம்பல், இயலாமை எல்லாம் வந்துவிடும்.

என்றும் புதிதாக‌ கற்றுக் கொண்டு உற்சாகமாக‌ வாழணும். நிறைய‌ நிறைய‌ கற்றுக் கொண்டே இருப்பது தான் வாழ்க்கை.

பாராட்டுக்கள் சுரேஜினி.

16வது தரம் வந்து பார்க்க... ஏற்கனவே 4 கொமண்ட் இருக்கு. ;))

நீங்க நல்லா எழுதுவீங்க என்று தெரியும் சுரேஜினி. ஆனால் நினைச்சதுக்கும் மேல இது. :-) அருமை. ஒரு வேண்டுகோள் - எங்களைப் போல எப்பவாவது மட்டும் இடுகை வெளியிடாமல் அடிக்கடி பதிவுகள் கொடுக்க வேணும். :-)

நாங்கள் இங்க அடிக்கடி கதைக்கிற தலைப்பு இது. க்றிஸ்ஸின் அப்பா சாகேக்க 60 வயசுக் கிழவர். இப்ப க்றிஸ் அதுக்கும் மேல போயும் தானே கூரை ஏறிப் பெய்ண்ட் பண்ணுறார். ஆனால்... எல்லாம் மனசுதான். ஊரில எங்கட மாமியை 80 வயசு வரைக்கும் எல்லோரும் இளமையாகத்தான் நினைச்சாங்கள். ஓடி ஓடி தெரிஞ்சவை தெரியாதவை எல்லாருக்கும் உதவி செய்வா. உதவி செய்ததெல்லாம் தன்னை விடச் சின்ன ஆட்களுக்கு. :-) 80 வயசுக்குப் பிறகு இங்க வந்து போனவ. ரசனையான பொம்பிளை. நான் அவவ மாதிரித் தான் இருப்பன். //கடைசி மூச்சு வரை ரசித்து வாழ// விருப்பம். நடக்கும் நிச்சயம்.

படங்களெல்லாம் சுப்பர். அது என்ன அந்த மூக்குக்கண்ணாடி அப்பிடிக் குட்டியா இருக்கு! ;) கடைசிப் படம்... பொருத்தமாகத் தேடிப் போட்டிருக்கிறீங்கள். 'என் மொழிகள்' தலைப்பும் 'ப்ளொக்' என்கிறது ஏற்ற மாதிரி இருக்கு. உங்கள் மொழிகள் பல படிக்க ஆவல். என் அன்பு வாழ்த்துக்கள். @}->--

‍- இமா க்றிஸ்

ஹை ! நல்லா இருக்கு சுரே ..85 வயசு தாத்தாவே விர்ருனு காரில் போறாங்க இங்கே ..பல பாட்டிஸ் தனியாவே அவங்க வேலைகளை செய்கிறாங்க ..எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் ..மனசை refresh ஆக்கினா போதும் எந்த வயசிலும் சுறுசுறுப்பா இருக்கலாம்..எங்க சர்ச்சுக்கு பஞ்சாபி கிச்சனென்று ஒன்று நடக்கும் அதற்க்கு வரும் லேடிஸ்எல்லாமே 60 க்கு மேலே ஆனா 1/2 மணி நேரத்தில் 100 சப்பாத்தியை சுடுவாங்க ..எனக்கே ஆச்சர்யமா இருக்கும்..எங்க ஸ்ட்ரீட்ல ஒரு பிரிட்டிஷ் தாத்தா அவர் வேலையே எப்பவும் கார் பார்ட்சை கழட்டி கழட்டி மாட்டுவதுதான் :) எதையாச்சும் புதுசா செட் செய்வார் .இப்படி நிறையப்பேர் ..here Older people shield themselves from psychological distress such as depression by staying happy and active

வந்துட்டேன் வனி .மிக்க நன்றி பிரிய தர்சினி.நிகிலா உங்கள் பாராட்டு கண்டு மிகவும் மகிழ்ச்சி.உண்மைதான் நம்மூர்ல எல்லாம் வயதானால் நோய் வரும் எங்கிறதையும் மீறி முதுமையே நோய் என்றமாதிரி மனசில பதிஞ்சு போச்சு.ஒவொரு வயசில் ஒவொரு சந்தோசம்.மனசு வச்சா எல்லா வயசும் இளமையே.

உசுப்பேத்தி உசுப்பேத்தி எழுத வைக்க பாக்குறா வெவ்வெவ்வே. பட் உண்மையாவே எனக்கு எழுதுறதில சரியான விருப்பம் வந்துட்டுது.வேண்டுகோளை ஏற்றுக்கொண்டேன்.

3வது படம் என் சொந்த படம் இம்ஸ் டெய்லி பெட் ஐ விட்டு எழும்பாமலே இதை பாப்பன் .முட்டை பொரியல் மாதிரி இருக்கும்.
நெட் ல படம் தேடி யூஸ் பண்ணுரது சுத்த வேஸ்ட் என்றதும் எவளோ டைம் ஐ கில் பண்ணுது என்றதையும் இப்பதான் விளங்கிக்கொண்டேன்.இனி எல்லாம் சொந்த படம்தான்.அது குவிவாடி கண்ணாடி அதான் அப்பிடி தெரியுது போல .

80 வயசுக்கு மேல வந்து போனவாவோ கேக்கவே ஆசையா இருக்கு.

எங்கட நாடுகளிலயும் சுற்றுச்சூழல் வசதி எல்லாம் வயதான ஆக்களும் சந்தோசமா இருக்கிறதுக்கு பொருத்தமா தான் இருக்கு.மனசால தான் தங்களை வயசாளி ஆக்கி வச்சிருக்கினம்.சிலர் அதையும் மீறி உங்கட மாமி அம்மம்மா மாதிரி அபார சுறுசுறுப்பா இருக்கிறதை பாக்க அவளோ சந்தோசமா இருக்கும்.

என் ஹஸ் ந் அம்மம்மா 86 வயசிலும் கொசு மாதிரி சுறுசுறுப்பா பறப்பா.

ஒம்ம் நீங்களும் எல்லாரும் அப்பிடித்தான் இருக்க வேணும் .அதுதான் உண்மையான சந்தோசம்.

உண்மைதான் அஞ்சு எல்லாத்தையும் விட ஒரு நம்மளோட பேசேக்குள்ள கவனிக்கிறனீங்களோ அரசியல் வெதர் வக்கேசன் பொழுதுபோக்கு அப்பிடி நல்ல நல்ல டொப்பிக் எல்லாம் சுவாரஸ்யமா போகும் .எப்பவாவது பியூட்டி சலூனுக்கு போனா அங்க 75 பிளஸ் தான் அதிகமா முடி கலர் பண்ணிக்கொண்டு இருப்பினம் .ரெகுலர் கஸ்டமர்.

எனக்கு தெரிஞ்ச தமிழ் அம்மாக்கள் எப்ப சந்திச்சாலும் புள்ள இந்த 2 காலும் அடிக்கடி வலிக்குது .சட்டெண்டு எழும்பினா தலை சுத்தலா இருக்கு இப்பிடி சுத்தி சுத்தி உடல் உபாதைகளாவே இருக்கும் .50 வயசிலேயே.கேக்க பாவமா வேற இருக்கும்.இந்த கதைகூட ஒரு அம்மா ரெம்ப வருசத்துக்கு முதல் சொன்னதுதான்.

நல்ல பதிவு சுரோ. இங்கு ஒரு வயது வந்ததும் ஒரு வேளை நல்ல அலங்காரம் செய்து எங்கயாவது போன கூட குறை சொல்லும் கூட்டம் இங்கு உண்டு. இதையும் தாண்டி ஆக்டிவ்வா ரசனையுடன் வாழும் பெரியவர்கள் இங்கு குறைவு. அருமையான பதிவு

Be simple be sample

சுரே சிஸ் இந்த பதிவு ரொம்ப நல்லா இருந்தது படிக்க..:-)
எங்க வீட்டிலயும் தாத்தா இப்படித்தான். இப்போ 78 வயாசகுது ஆனாலும் இன்னும் கூட சுறுசுறுப்பா எல்லா வேலையும் செய்வாங்க.. படிச்சதும் தாத்தா பாட்டி நியாபகம் தான் வந்தது..

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முதல் பதிவு.. சூப்பர்.. இங்கெல்லாம் 50 வயதானாலே வயதாகிவிட்டாத புலம்புவார்கள்.. உண்மை கதை வேறு நிறைய மக்கள் படிப்பார்கள்.. இன்னும் நிறைய நிறைய எழுதுங்கோ... வாழ்த்துக்கள்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

உண்மை நானும் கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா நல்ல படிச்ச டாக்டர்ஸ் பிஸ்னஸ் வுமன்ஸ் எல்லாம் மேக்கப் பண்ணினா யாரும் ஏதும் சொல்லுறதில்ல ,மிடில் கிளாஸ் பண்ணினாத்தான் குறை சொல்லினம் காரணம் தெரியுமோ?அவர்கள் யாரும் சொல்லுபவர்களை சட்டை பண்ணுறதில்ல .அதுமாதிரி சொல்லுற ஆக்களை உதாசீனப்படுத்தீட்டு சந்தோசமா இருக்க வேணும்.யாரையுமோ துன்பப்படுத்தாத தேவையான நேர்மையான சந்தோசங்களை அனுபவிக்க அது மட்டும் தான் வழி.சில வீடுகளில பிள்ளைகளே நக்கல் பண்ணுவினம்.புரிய வைக்க முடியாமல் விட்டுடிவினம அம்மாக்கள் பாவம்

நன்றி கனிமொழி உண்மைதான் அப்பிடி பாக்க சந்தோசமா இருக்கும்.

நன்றி அபி.நானே நிறைய புலம்பல் கள் கேட்டிருக்கன்.சார்ந்து வாழுறது கூட வைய இப்பிடி புலம்ப வைக்குதோ ந்னும் இருக்கும் சிலனேரம் ,அதாவது தனக்கான வேலைகளை செய்ய ஆட்கள் இருக்கிறது கூட, கண்டிப்பா எழுதுறேன் அபி

சுரேஜினி வருக‌ வருக‌...அருமையான‌ பதிவு. உங்கள் பதிவைப் படிக்கும் போது என் அம்மம்மாவின் ஞாபகம் தான் வருகிறது. அவர் இப்போது இல்லை. ஆனாலும் 92 வயது வரை எல்லா வேலையையும் தானே செய்வார். அப்படி சுறுசுறுப்பு. வீட்டில் நடக்கும் எந்த‌ விஷேஷமும் அவர் உதவி இல்லாமல் நடந்தது இல்லை.அவரிடம் இருந்து தான் பல‌ நல்ல‌ விசயங்களை நான் கற்றுக் கொண்டேன்.உடம்புக்கு தான் வயதே தவிர‌ மனசுக்கு இல்லை என்று வாழ்ந்தவர்.. இதை எல்லோரும் புரிந்து கொண்டாலே ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தன்னாலே வரும். உங்கள் எழுத்து நடை சூப்பரா இருக்கு. மேன்மேலும் தொடர‌ என் வாழ்த்துக்கள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

very good friend.
good writing and concept
anpudan
suba

be happy

ஹாய்,

'''குட்டி குட்டி பயணங்களும், ஆரவாரங்களும் வாழ்வை நிறைத்திருந்தது'''அர்த்தமுள்ள‌ வாக்கியம். வாழ்த்துக்கள் சுரேஜினி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அன்பு சுரேஜினி,

எனக்குப் பிடித்த இலங்கைத் தமிழ்! சூப்பராக எழுதியிருக்கீங்க.

’இந்த வயசிலும் இவ்வளவு ஆக்டிவ் ஆக இருக்கீங்களே’ அப்படின்னு யாராவது சொல்றப்ப, நமக்கென்ன வயசா ஆகிடுச்சு, இப்படி சொல்றாங்களேன்னு முன்னெல்லாம் தோணும். ஆனா, இப்ப சில உடல்நலக் குறைவுகள் வயசை அப்பப்ப நினைவு படுத்துது. கூல் கூல் அப்படின்னு ரஜினி வாய்ஸ்ல நானே எனக்கு சொல்லிக்கிறேன்:):)

உங்க கதை உற்சாகத்தை ஏற்படுத்துது.

அன்புடன்

சீதாலஷ்மி