குழப்பத்தில் உள்ளேன் உதவுங்கள்

ஹலோ தோழிகளே
எனக்கு 2 வயது மகன் உள்ளான். நான் வேலைக்கு செல்லும் பெண். 1 1/2 வருடங்களாக‌ என் குழந்தையை என் மாமனார் கவனித்து கொண்டார். இப்பொழுது அவரின் உடல்நிலை குழந்தையை கவனித்து கொள்ள‌ முடியவில்லை. மாமியாரிடம் எவ்வளவு கெஞ்சியும் பலன் இல்லை. எனக்கு அப்பா அம்மா இல்லை. அதனால் 1 வாரமாக‌ என் கணவர் இரவில் வேலைக்கு சென்று வந்து பகலில் குழந்தையை பார்த்து கொள்கிறார். அவருக்கு மாலை 6 மணியில் இருந்து 11 மணி வரை வேலை பிற்கு தூங்க‌ சென்று விடுவார். காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை வேலை. நான் கல்லூரியில் பணி புரிகிறேன். இதில் பிரச்சனை என்னவென்றால் எனக்கு 8.45 க்கு கல்லூரி பஸ் அதை விட்டால் அரசு பேருந்து 10 மனிக்கு தான் அதில் சென்றால் நான் கல்லூரியை அடைய‌ 11 மனி ஆகிறது. நானும் என் கனவரிடம் 8.30 க்கு வீட்டில் இருக்கும்படி வேலையில் இருந்து கிளம்ப‌ சொல்வேன் ஆனால் அவர் லேட்டாக‌ தான் வருகிறார். 2 பேர் வேலைக்கு சென்றால் தான் குடும்ப‌ செலவுகளை சமாளிக்க‌ முடியும். இன்று காலையில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் குழந்தையை விட்டேன் ஒரு 15 நிமிடம் தான் அதற்க்கே மிகவும் அழுகை இந்த‌ நிலையில் day care ல் விட‌ என் கணவர் சம்மதிபது இல்லை. எனக்கும் மனம் இல்லை என்ன‌ செய்வதென்றே புரியவில்லை. தோழிகள் எதவது ஆலோசனை கொடுத்தால் உதவியாக‌ இருக்கும். உதவுவீர்கள் என்ற‌ நம்பிகையில் உஙள் பதிலுக்காக‌ காத்திருக்கிறேன்

நீங்கள் வேலைக்குத் தாமதமாகப் போவது எத்தனை சரியில்லையோ அதே போலதான் உங்கள் கணவர் வேலையிலிருந்து நேரத்திற்குக் கிளம்பி வருவதும். எப்போவாவது ஒரு நாள் என்றால் அனுமதி கேட்கலாம். இது தினமும் இருக்கப் போகும் பிரச்சினை. இதனால் உங்கள் இருவருக்குமே தினம் டென்ஷனோடு ஆரம்பிக்கிறதாக இருக்கும் இல்லையா!

பக்கத்து வீட்டாரைக் கேட்பது... ஒரு அவசரத்திற்கு உதவும். அதனால், அடிக்கடி கேட்காமல் இந்த ஆப்ஷனை சேவ் பண்ணி வைச்சுக்கங்க.

ஒரே வழி டே கேர்தான். ஒரு ரூட்டீனான விஷயம். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் உங்களுக்கும் குழந்தைக்கும் சீக்கிரமே ஆயத்தமாவது & மாற்றங்கள் பழகி விடும். உங்களுக்கும் டென்ஷன் இராது; உங்கள் கணவரும் டென்ஷனாக இராது. இன்னொரு விஷயம்... இப்படி ஷிப்ட் மாற்றி வேலை செய்தபடி, டே கேரில் விடாமல் குழந்தைகளைக் கவனித்துக் கொண்ட ஒரு குடும்பத்தை எனக்குத் தெரியும். அவர்களால் ஒன்றாக எங்கும் போக இயன்றதில்லை; குழந்தைகளையும் தனித்தனியேதான் வெளியே அழைத்துப் போவார்கள். குடும்பமாக நாட்களைக் கழிப்பது எப்போதாவதுதான். எத்தனை காலம் இப்படித் தொடர இயலும் நீங்கள்! செலவைப் பற்றி யோசிக்காமல் குழந்தையை டே கேரில் விடுங்கள். பெரியவர்கள் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது. குழந்தையை அழைத்துப் போகும் சமயம் நேரம் போதாவிட்டாலும், கூட்டி வரும் சமயம் அங்கு நிலவரம் எப்படி என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்.

காலம் விரைவாக ஓடிவிடும். குழந்தை ப்ளே ஸ்கூல், நர்சரி என்று போக ஆரம்பித்து விட, உங்களால் ப்ளான் பண்ணி உங்கள் வேலைகளைப் பார்க்க இயலும்.

‍- இமா க்றிஸ்

இது சரியான‌ வழி தான் ஆனால் இன்று ஒரு நாள் ஒரு 30 நிமிடத்திற்க்கே அழுதவன் நாள் முழுவதும் எப்படி இருபானோ என்று பயமாக‌ உள்ளது

//இன்று ஒரு நாள் ஒரு 30 நிமிடத்திற்க்கே அழுதவன் // டே கேர் ஆட்கள் இதற்கெல்லாம் பழக்கப்பட்டவர்கள். பெரும்பாலான குழந்தைகள் இப்படித்தான். பிறகு மற்றக் குழந்தைகளோடு சேர அழுகை நின்றுவிடும். முயற்சி செய்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்