குழந்தைக்கு 2 வயது ஆகுது இன்னும் பேச மாட்றான்

என்னோட பையனுக்கு 2 வயசு அகுது ஆனா பேச மாட்றான். ரொம்ப அடம் பிடிக்குறான். ஏதாவது அவனுக்கு வேணும்னா கை ஜாடை காட்றான். அவன எப்படி பேச வைக்குரது. அடம் ரொம்ப பிடிக்குறான் அழுது வாந்தி எடுக்குறான். அவன எப்படி திசை திருப்புறது.

ஒரு வார்த்தை கூட பேச மாட்டாரா? அவர் பேச்சு எந்த அளவு இருக்கிறது என்று சொன்னால் பதில் சொல்ல உதவியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

2 வயசு ஆகுதா ஆகி விட்டதா.எத்தனை மாசம் ?2 வயசில் கை ஜாடை காட்டுவதும் ஒரு மொழி தான்.

வார்த்தைகள் என்று பார்த்தால் அம்மா, அப்பா,யூஸ்,வா ,போ போன்று ஒட்றை வார்த்தைகள் 10 க்கு மேல் சொல்லுறாரா?

பேச வைக்க நீங்கள் பக்கத்திலோ தூரத்திலோ நின்று பேசாமல் கண்ணுக்கு நேர கண் பாத்து சொல்லி குடுங்கோ,1 மணினேரம் தவறாமல் தினமும் எல்லா விளையாட்டு பொருட்களும் எடுத்து வைச்சு சேந்து விளாடுங்கோ,

ஒரு பொருளை காட்டி அதன் பேரை நிறைய தடவை திருப்பி திருப்பி சொல்ல வேணும் ,குழந்தை உடனே திருப்பி சொல்ல வேணும்னெல்லாம் எதிர் பாக்க கூடாது.
ஆனால் கண்டிப்பா அது அவருக்கு ரெஜிஸ்டர் ஆகும் வெளிய வர கொஞ்சம் லேட்டாகலாம்.

எவ்வளவுக்கு எவளவு நீங்கள் மறுப்பை காட்டுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு குழந்தை பிடிவாதம் பிடிக்கும்.
நோ ,வேண்டாம்,தொடாதே,செய்யாதே இந்த வார்த்தைகளை தவிர்த்துப்பாருங்கள் பிடிவாதம் குறையும்.

அதுக்காக நீங்கள் நிறைய விட்டுக்குடுக்க வேண்டி இருக்கும்.

நமக்கு ஏற்ற மாதிரி குழந்தைகள் மாற மாட்டினம் ,3 வயசுக்குள்ள அதை எதிர்பாத்தா ரெம்ப அடம் பிடிச்சு அழுது ஓவரா குழப்படி செய்து ஒரு இடத்தில நிக்காமல் ஓடி முடிஞ்ச அளவு குழப்படி செய்வினம்.
சோ குழந்தகளுக்கு ஏற்ற மாதிரி சூழ்நிலைய மாற்ற வேணும்.

என் ரெண்டரை வயசு மகளுக்கு அப்பா சோபா ல உக்காந்து நியூஸ் பாத்தா பிடிக்காது.டி வி யை ஆப் பண்ணி விடுவா.
அப்பாவும் என்னென்னமோ எல்லாம் திசை திருப்பி பாத்து ஏலாது .ரூம் ல இருக்கிற டி வி கள் மாதுரியே ஹால் லயும் சுவரில தூக்கி மாட்டி விட்டார்.மீ டி,வி பாத்து 1 வருசத்துக்கும் மேல .

எதயாவது செய்யவேண்டாம் ந்னு மிரட்டினீங்களா இருந்தால் அதை விட பாரதுரமான குழப்படி செய்ய துணிஞ்சுடுவினம் .

நாங்கள் என்ன செய்தாலும் தங்களையும் சேர்க்க வேணும் என்றதே குழந்தைகளின் எதிர்பார்ப்பும் நீங்கள் செய்ற மாதிரி சம்மந்த்தப்பட்ட சின்ன சின்ன வேலைகள் சிலதை செய்ய குடுங்கோ.

மேலும் சில பதிவுகள்