தேதி: January 23, 2016
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பிரட் - 10 துண்டுகள
வற்றிய பால் - 3 கப்
கன்டன்ஸ்டு மில்க் - 4 மேசைக்கரண்டி
சீனி - 1 கப்
ஏலத்தூள் - சிறிது
முந்திரி - சிறிது
வெண்ணெய் - 1/2 கப் + 3 மேசைக்கரண்டி
ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் உதிர்த்து போடவும்.

ஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் பிரட் துண்டங்களைப் போட்டு வறுக்கவும்.

அத்துடன் வற்றிய பால் ஊற்றி குழைய பிரட்டவும்.

அதன் பின்னர் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

பின்னர் சீனி சேர்த்து பிரட்டி விட்டு கொண்டே இருக்கவும்.

அதில் வெண்ணெய் சேர்த்து கட்டிவிழாதவாறு தொடர்ந்து கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் கெட்டியான பதம் வரும் போது முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான ஸ்வீட் ப்ரெட் ஹல்வா ரெடி.

Comments
முசி அக்கா
அக்கா நல்லா இருக்கீங்களா..?
ப்ரட் ஹல்வா ஈஸி அன்ட் டேஸ்டி ரெசிபி ஒன் ஆஃப் மை பேவரிட் ரெசிபி..:)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
நன்றி
குறிப்பினை வெளியிட்ட டீமிர்க்கு நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
கனிமொழி
நல்ல இருக்கேன் மா.பதிவிர்க்கு மிக்க நன்றி மா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.