சாக்கோ ஷீரா

சாக்கோ ஷீரா

தேதி: January 23, 2016

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

4
Average: 3.3 (8 votes)

 

ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
சாக்லெட் சிரப் - கால் கப்
முந்திரி
ஏலக்காய் தூள்
நெய் - அரை கப்


 

தனியே ஒரு பாத்திரத்தில் சர்க்கரை அளவுடன் மூன்று பங்கு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே நெய்யில் ரவையை சேர்த்து சிம்மில் 5 நிமிடம் வரை வறுக்கவும்.
ரவை வறுத்தல்
வறுத்த ரவையில் கொதிக்கும் சர்க்கரை தண்ணீரை சேர்க்கவும். ஏலக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
சர்க்கரை பாகு சேர்த்தல்
வெந்து வரும்போது சாக்லெட் சிரப் பாதி அளவு சேர்க்கவும்.
சாக்லெட் சிரப் சேர்த்தல்
வாணலியில் ஒட்டாதவாறு அவ்வபோது கிளறிவிடவும்.
கைவிடாமல் கிளறுதல்
எல்லாம் சேர்ந்து கேசரி பதத்திற்கு திரண்டு வந்ததும் முந்திரி தூவி இறக்கவும்.
கேசரி பதம்
மீதி சாக்லெட் சிரப்பை மேலே ஊற்றி, பாதாம் தூவி பரிமாறவும். சுவையான சாக்கோ ஷீரா தயார்.
சாக்கோ ஷீரா தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா நலமா..?

சாக்கோ ஷீரா யம்மி ரெசிபி.. சீக்கிரமா ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன் அக்கா:‍)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா& குழுவினர்க்கு நன்றி

Be simple be sample

நலம் கனி.தான்க்யூ செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Be simple be sample

Super ரெசிபி அக்கா என் கணவருக்கு செய்து தர போரேன்