ஹாய் சகோதரிஸ், எனக்கு 23 வயதாகிறது என்னுடைய எடை 63கே.ஜி . நான் உடல் எடை குறைய டயட் இருக்கின்றேன், ஆனால் , கல்லூரி விட்டு வந்தோன நல்லா பசிக்குது, எதாவது நொருக்கு தீனி சாப்டனும் போல இறுக்கு. நொருக்கு தினி சாப்டா எடை குறைக்க மிடியாது, அதனால் யாராவது பசியாரவும், சத்தான, எடை கூடாமலும், நல்ல ஒரு வீட்டில செய்யர தீனி தெரிஞ்சா சொல்லுங்க பா.
குட்டி பசிக்கு
கேழ்வரகு அடை,கோதுமை இடியாப்பம்,பழங்கள்கூட சப்பிடலாம்
நன்றி santhanu
பழங்கள் சாப்டவே பிடிக்க மாட்டீங்குது, மத்தபடி தானிய வகைனா எனக்கு பிடிக்கும், கேப்பை சாப்ட்டா எடை கூடாதுல பா.
தானியம்
தானிய வகை எல்லாவற்றிலுமே காபோவைதரேற்று இருக்கிறது. 'ஒரு பறிமாறல்' அளவில் ஒவ்வொரு தானியத்திலும் வெவ்வேறு அளவு சக்தி கிடைக்கும். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிடுங்கள்.
எடை கூடாமல் சாப்பிடக் கூடிய ஸ்னாக், செலரித் தண்டு என்கிறார்கள். மைனஸ் கலோரிப் பெறுமானம் உள்ளது என்கிறார்கள். சாப்பிட்டுச் செரிமானமடைந்து உடல் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவை விட, அந்தக் காரியத்திற்காக உடல் இழந்த கலோரி அளவு அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால்... கூட தொட்டுக் கொள்ளும் 'டிப்' எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்; அளவும் குறைவாக எடுக்க வேண்டும்.
- இமா க்றிஸ்
imma mam
நன்றி மேம், நான் இப்போலாம் வயிறு நிரம்ப சாப்டுறதில்ல, எதுவா இருந்தாலும் அரை, முக்கா வயிறு தான் சாப்டுறேன், உடல் எடை குறைய, எத செய்யனும்னு ஓரளவு தெரிஞ்சிக்கிட்டேன். என்னென்ன செய்ய கூடாதுனு சொன்னா நல்லா இருக்கும் மேம்.
அம்மு
மேம் வேண்டாம். இமா என்றே கூப்பிடலாம் நீங்க. :-)
//என்னென்ன செய்ய கூடாது// :-) சும்மால்லாம் சொல்ல முடியாதே! உங்க ரூட்டீன் தெரிஞ்சா அதுல எது எதைச் செய்யக் கூடாது என்று சொல்லலாம். :-)
இனிப்பு, மாப்பொருள், கொழுப்பு அதிகம் வேண்டாம்.
ம்... ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை மணி நேரம் உட்கார்ந்து இருப்பீங்க? கணக்குப் போட்டுப் பாருங்க. இதுல... டீவீ, இன்டர்நெட், வேலை, சாப்பாட்டு நேரம், நடக்காமல் போகும் பயணங்கள், விசிட்டிங், உங்க வீட்டுக்கு விருந்தினர் வந்தால் பேசும் நேரம், தூக்கம் எல்லாம் போட்டுக் கூட்டிப் பார்க்கலாம். இவையெல்லாம் உடல் சக்தி விரயம் செய்யாத நேரங்கள். வேறு விதத்தில் சொன்னால்... இதுதான் உணவு சேமிக்கப்படும் நேரம்; எடை போடும் நேரம். இவற்றில் எவற்றைக் குறைக்க முடியும் என்று யோசியுங்கள்.
- இமா க்றிஸ்
சத்தான ஸ்னாக்ஸ்
அன்பு அம்மு,
சாயங்காலத்துக்கு, சுண்டல் வகைகள் செய்து சாப்பிடுங்க. வயிறு நிறையும், வெயிட் அதிகம் ஏறாது.
நொறுக்குத் தீனி சாப்பிடணும்னு நினைக்கிறவங்களுக்கு பிஸ்கட், பழம் எல்லாம் சாப்பிட விருப்பம் இருக்காது, நல்லா உப்பு உறைப்பாக சாப்பிடணும்னு தோணும், அதுக்கு சுண்டல் வகைகள் நல்ல சாய்ஸ்.
அன்புடன்
சீதாலஷ்மி
imma mam and seetha mam
thanku so much imma mam and seetha mam, and enaku oru doubt , normalla ve enaku milk, coffee, tea, boost, complan intha item eh pidikathu, amma enna thiti thiti kudika vaipanga, diet nu kaaranam kaati milk item saptu 6 months aachu, ithunala ethum vitamin kuraipaadu varuma. protein kidaikama poiduma, ithuku alternate a enna panlam.
ஹாய் அம்மு எனக்கும் உங்க வயது
ஹாய் அம்மு எனக்கும் உங்க வயது தான்.வெயிட் குறைப்பதற்க்கு சுடு தண்ணீரில் தேன் கலந்து தினமும் சாப்பிட்டால் வெயிட் குறையும்.ட்ரை பண்ணி பாருங்கள்.வெயிட் குறைக்கிறேனு சொல்லிட்டு சாப்பிடாம இருக்காதிங்க.நீங்கள் சாப்பாடு அளவை குறைத்தால் வெயிட் அதிகமாகும்.இரவில் சப்பாத்தி ரொட்டி போன்றவற்றை சாப்பிடுங்கள்.
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும்