செம்மீன்

சமீபத்தில் படித்து முடித்து மனதை விட்டு நீங்காது தங்கிய நாவல். மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளை தமிழில் சுந்தர ராமசாமி யால்  மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நாவல்.

மனைவியின் கற்பே கடலுக்கு செல்லும் கணவனை காப்பாற்றும் என நம்பிக்கை கொண்ட மீனவ சமுதாயக் கதை.

செம்மன்குஞ்சு சக்கியின் மகள்கள் கருத்தம்மா, பஞ்சமி. தோணியும் வலையும் வாங்க வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாக கொண்டவர்கள். அதற்கு கருத்தம்மாவின் மீது காதல் கொண்டுள்ள மீன் மொத்த வியாபாரியான பரீக்குட்டி உதவிகிறார். பிடிபடும் மீன்கள் தனக்கே விற்க வேண்டும் என்று. ஆனால் செம்மன்குஞ்சு அவருக்கு தராமல் மற்றவருக்கு அதிக விலைக்கு விற்று கடனும் அடைக்காமல் வருவதால் சக்கியும், கருத்தம்மாவும் சண்டையிடுகிறார்கள்.
சக்கிக்கு தன் மகளுக்கு பரீக்குட்டி மேல் காதல் என தெரியவர தம் சமுதாயத்தில் அப்படி வேற்று மதக்காரரை மணக்கும் வழக்கமில்லை என கருத்தம்மாவை கண்டிக்கிறார். பரீக்குட்டியின் வியாபாரம் நொடிந்து போய் விடுகிறது.இதனிடையே மற்றொரு மீனவன் அனாதையான பழனிக்கு தன் பெண்ணை மணக்க முன் வருகிறான் செம்மன்குஞ்சு மனைவியின் எதிர்ப்பையும் மீறி.

பரீக்குட்டியின் இரவு நேர பாடல் கேட்டு திருமணத்திற்கு முதல்நாள் பேசி மறந்து வேறு திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என பேசி விட்டு வருகிறாள்.

மறுநாள் கருத்தம்மா பழனியின் திருமணம் பல சண்டைகள் நடுவில் நடக்கிறது. இதனால் உடல் நலம் இல்லாமல் ஆகும் தாயை பிரிய தந்தையின் கோபத்திற்கு ஆளாகிறாள். கணவனுடன் இல்வாழ்க்கை தொடங்க கருத்தம்மாவின் கற்பு பற்றிய தவறான பேச்சால கணவனிடம் தன் காதலை தெரிவிக்கிறாள். அவனும் மனதில் ஓரம் குறை இருந்தாலும் நம்பிக்கை கொள்கிறான்.

இதனிடைய சக்கி இறந்த செய்தி கொண்டு வந்த பரீக்குட்டி தான உன் அம்மாவின் சொல்படி உன் அண்ணனாக வந்திருக்கேன் என்று சொல்லி செய்தி சொல்லிசெல்கிறான்.
இதனால் ஊராரின் தவறான பேச்சால் பழனியை தன்னுடன் கடலுக்கு அழைத்து செல்ல யாரும் விரும்பவில்லை, தங்களுக்கு ஆபத்து நேரும் என்று.

இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. அப்பாவின் வேறு திருமணத்தால் மனம் வெறுத்து பஞ்சமி அக்காவிடம் வருகிறாள். அவர்கள் பரீக்குட்டி பற்றிய பேச்சு பழனியை வெறுப்பு கொள்ள செய்கிறது. அதே கோபத்துடன் கடலுக்கு செல்கிறான்.
அன்று இரவு பரீக்குட்டி கருத்தம்மாவின் வீடு தேடி வருகிறான். அவர்களின் காதல் மீண்டும் அரும்பி ஒருவரை ஒருவர் அணைத்து கொள்கின்றனர். பழனி செல்லும் தோணி ஆபத்தில் சிக்கி கொள்கிறது.
அதற்கு பிறகு என்ன நடந்தது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

நீண்டநாள் இடைவெளியில் என் மனதை தழுவிய நாவல். இதை படித்து முடித்ததும் இந்த படமும் பார்க்க வேண்டும் என்று ஆவல் வந்துள்ளது. பரீக்குட்டியின் கடலோர பாடல் படிக்கும் போது ' மானச மைனே வரு' பாடல் மனதில் ஓடியது. சில கதைகள் மட்டுமே நம்மை ஏதோ செய்யும். அது போல் என் மனதில் பரீக்குட்டியும், கருத்தம்மாவும் நிறைத்து உள்ளனர்.

5
Average: 4.8 (5 votes)

Comments

ரொம்ப‌ அருமையான‌ கதை...முழுவதும் படிக்க‌ ஆசை அரும்பியுள்ளது...ஆன்லைன் ல‌ படிக்க‌ முடியுமா...அந்த‌ நாவலின் முழு விவரம் சொல்ல‌ முடியுமா...நான் ஒரு நாவல் பைத்தியம்....
//சில கதைகள் மட்டுமே நம்மை ஏதோ செய்யும்// முற்றிலும் உண்மை... பார்ப்பவர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அந்த‌ சூழ்நிலையில் இருப்பவர்களுக்கே அதன் வலி தெரியும்...
வாழ்த்துக்கள் ரேவ்ஸ்...

Expectation lead to Disappointment

நல்ல கதை. சாகித்திய அகாடமி விருது வாங்கிருக்கு.செம்மீன் நெட்ல போட்டாலே வந்துடுமே. நான் லைப்ரரில இருந்து எடுத்து வந்து படிக்கிறேன். நீங்க மட்டுமா நானும் அதே பைத்தியம்தான் :). தான்க்யூ.

Be simple be sample

சூப்பரா சொல்லியிருக்கிறீங்கள்.எனக்கு சிஸ் ஆ பிறந்திருக்கலாம்.ஏன்னா எனக்கு நாவல் ,படம் இதெல்லாம் முழுசா படிக்க பாக்க பொறுமை இல்ல ஆராச்சும் படிச்சுட்டு இப்பிடி அழகா சொன்னால் அதுதான் விருப்பம்.என் தங்கை யை வாசிச்சுட்டு சுருக்கமா 10 நிமிசத்தில சொல்லு ன்னு நிறைய கதை கேட்டிருக்கேன்.அதுமாதிரி இருக்கு தங்யூ ரேவ்.

செம்மீன் கதையை உப்பு புளி காரம் எல்லாம் சரியான‌ விகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கீங்க‌. அருமையா இருக்கு. ரொம்ப‌ வருஷம் முன்னே இந்த‌ படம் பார்த்தது. என் அம்மாவுக்கு ரொம்ப‌ பிடித்த‌ படம்.
கடலின் அக்கர‌ போனோரே
காயாக் குன்னினு போனோரே
போய் வரும்போல் எந்து கொண்டு வரும்
கை நிறைய..... இந்த‌ பாட்டு என் மனதில் நீங்காத‌ பாட்டு. என் பசங்களுக்கும் இந்த‌ இரண்டு வரி மனப்பாடம் நல்லா பாடுவாங்க. படத்தை விட‌ நாவலா படிக்க‌ நல்லா இருக்கும்னு தோணுது. வாழ்த்துக்கள் ரேவ்ஸ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஹா ஹா ஹா. சரியா போச்சு உங்க சிஸ்டர் ரொம்ப நல்லவங்க. எனக்கு பிடிச்ச கதைன்னா எவ்வளவு முறைன்னாலும் ஒரே கதையை படிச்சுட்டே இருப்பேன். அது பொன்னியின் செல்வன். படமும் அப்படிதான் பிடிச்சதுன்னா எவ்வளவு பார்த்தாலும் சலிக்காம பார்பேன். லாஸ்டா அத்தனை முறை பார்த்துட்டே இருக்கற படம் பிரேமம். இனிமே கதை படிச்ச சுருக்கமா சொல்லிடறேன நான் ஒக்கேவா. தான்க்யூ சுரே

Be simple be sample

நானும் அந்தபடம் பார்க்கணும்ன்னு நினைச்சுட்டே இருக்கேன். பார்க்கலாம் எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு ' சந்தன தோணியரே போனோரே நிங்கள் போய் போய் போய் வருமோ'. நம்ம பிளேலிஸ்ட்ல ஃபேவர்ட் சாங் :). தான்க்யூ

Be simple be sample

ஹாய் ரேவ்ஸ்...எப்படி இருக்கீங்க‌? அறுசுவையில‌ என்ன‌ புதுசா இருக்குன்னு எட்டிப்பார்த்தா...எனக்குப் பிடித்த‌ சப்ஜெக்ட்...கருத்து சொல்லாம‌ போக‌ முடியலை! அடுத்த‌ கதை என்ன‌ படிக்கலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன்.....நல்ல கதையா சொல்லீட்டீங்க‌.....நன்றி. எப்பவும்போலவே உங்களோட‌ கதை வர்ணனை அருமை! உங்கள் பணி தொடரட்டும்....

ஹாய் அனு.எப்படி இருக்கீங்க.உங்களுக்கு பிடிச்ச டாபிக் ஓடி வந்துட்டிங்க. சீக்கிரம் படிங்க நல்லாருக்கும். தான்க்யூ

Be simple be sample

நிறைய‌ புக்ஸ் படிக்கிறீங்க‌.
ரொம்ப‌ நல்ல‌ பழக்கம்.
நானும் ஒரு காலத்தில் பைத்தியம் மாதிரி படித்திருக்கேன். இப்போ குறைந்துவிட்டது.
இனி நிறைய‌ படிக்கனும்னு உங்க‌ பதிவை படிச்சதும் தோணுது.:))

இரண்டாம் மூன்றாம் வகுப்பு படிச்ச காலத்தில் பார்த்த நினைவு இருக்கு. கதை முழுசா நினைவில் இல்லை. சிலசில காட்சிகள் மட்டும் நினைவுல இருக்கு. பாடல்கள்... மொழியைத் தாண்டி இலங்கையிலும் வெகு பிரபலம். பாடசாலை நிகழ்ச்சிகளில் மீனவ நடனம் என்றால், 'கடலினக்கரை போனோரே' பாடலுக்குத்தான் பெரும்பாலும் ஆடுவார்கள். நாவல் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

நான் இப்பதான் தேடி கண்டுபிடிச்சு படம் பார்த்துட்டேன் :). நாவலின் ரசம் குறையாத படமா எடுத்துருக்காங்க. அந்த பாடலின் பெருமை என்றும் அழியாது. புத்தகம் கிடைத்து படித்தால் பகிரவும்.:)

Be simple be sample

நேரம் கிடைக்கும் போது படிங்க. தான்க்யூ

Be simple be sample

ஏ பொண்ணு நீ மட்டும் அந்த நாவல படிச்சிருக்கே எனக்கு தராம ,, ரொம்ப மோசம் போ... அழகா எழுதி இருக்கே ரேவா !

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

உங்களுக்கு தர முடியலனுதான கதை சொல்லி முடிச்சுட்டேன் :)))). தான்க்யூ

Be simple be sample