தோழிகளே எனக்கு ப்ரியட் நாட்களில் அதிகளவு வயிறுவலி இடுப்புவலி இருக்கும்.நான் டாக்டரிடம் சென்றேன்.அவங்க ஸ்கேன் பண்ணுவோம்.ப்ரியட் வந்த 11வது நாளில் வர சொன்னாங்க.நான் கருப்பை ஸ்கேன் பண்ண சாப்பிட்டு செல்லலாமா இல்லை வெறும் வயிற்றுடன் செல்லவேண்டுமா கூறுங்கள் தோழி
Selvaranidevaraj
தோழி ஸ்கேன் பன்னுறதுக்கு சாப்பாடு பிரச்சினை இல்லை ஆனால் ஸ்கேன் பன்னுறதுக்கு முன்னாடி தண்ணீர் தான் நிறைய குடிக்கனும் நீங்க எப்ப ஸ்கேன் பன்ன போறீங்க எந்த டைம்
நிஷா
நான் வருகிற புதன்கிழமை போகனும்.காலை 8.30 வரச் சொன்னாங்க.
Selvarani
அப்ப கொஞ்சமாக சாப்பிட்டு போங்க அங்க போய் டாக்டர பார்த்துட்டு அவங்க சொல்ரபடி நிறைய தண்ணீர் குடிங்க போகும்போது பாட்டில்ல நிறைய கொண்டு போங்க.உங்களுக்கு குழந்தை இருக்கா இல்லை இது தான் முதல் தடவையா தோழி நீங்க எந்த ஊர் எந்த டாக்டர் பாக்க போறீங்க தோழி
நிஷா
குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கோம்.ஸ்கேன் அனுபவம் முதல் தடவை தோழி.எனக்கு திருநெல்வேலி.உங்களுக்கு குழந்தை உள்ளதா எந்த ஊர் தோழி
Selvarani
எனக்கும் குழந்தை இல்லை தோழி நானும் அதற்காக தான் காத்துக்கொண்டிருக்கேன். திருமணம் ஆகி ஒரு வருடம்.திருமணத்திற்கு முன் மாதவிடாய் ரெகுலர் தான் திருமணத்திற்கு பின் இர்ரெகுலராக மாறிவிட்டது. நானும் டாக்டரிடம் காட்டினேன் பலன் இல்லை என்ன செய்வதென்று தெரியவில்லை.எனக்கு திருவாரூர் பக்கத்தில் உள்ள ஊர் தான்.நாளைக்கு தான் திரும்பவும் டாக்டரிடம் செல்லலாம் என்று இருக்கிறேன் தோழி. பட்டுக்கோட்டையில் உள்ள டாக்டரிடம் தான் காட்ட போகிறேன் தோழி. இந்த அறுசுவையில் உள்ள எத்தனை தோழிகளுக்கு குழந்தை இல்லை இதையெல்லாம் பார்க்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. குழந்தை இல்லாத நம அனைவருக்கும் விரைவிலேயே குழந்தை பிறக்க நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் தோழி
Help me pls
Sis enaku pcod pblm iruku pls yaravadu detail sollungalen
GOD IS LOVE
Selvarani
Nega tirunelvelila entha area
Life Is Easy When U "Accept All"
Jaya
டாக்டரிடம் காட்டினீர்களா தோழி என்ன சொன்னார்கள்
Jaya
டாக்டரிடம் காட்டினீர்களா தோழி என்ன சொன்னார்கள்
jaya
pcod என்று சேர்ச் பாக்ஸ் ல் டைப் பண்ணி தேடுங்கோ.இங்கே அதுபற்றி நிறைய பேசி இருக்கிறார்கள்.அப்பறம் அதுபற்றி தனிப்பட்ட கேள்வி இருந்தால் இங்கேயோ அல்லது அதே திரட்டிலோ கேளுங்கோ பதில் தெரிந்தால் சொல்கிறோம் கவலை வேண்டாம்.
அண்ட் செல்வராணி\\ உங்களுக்கு குழந்தை உள்ளதா\\ என்று இங்குள்ள தோழிகளை மட்டுமல்ல குழந்தை உள்ளவர்களை கூட கேட்பது நல்லதாக தெரியவில்லை.பாவம் சிலர் சங்கடப்படுவார்கள்.