சுவை சுவை வாட்ஸப் சுவை

பெண்கள் மொபைல்

மாற்றங்கள், மாற்றங்கள் உலகம் வேகமாக‌ மாறிக்கொண்டே இருக்கிறது. வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றார்ப் போல் நாமும் நம்மை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். அயல் நாட்டிலுள்ள‌ என் பேத்திகளை பார்க்க‌ வேண்டும் என்று சொல்கிறோம். உடனே பேத்திகள் ''நாங்கள் லேப்டாப்லே உட்கார்கிறோம், நீங்க‌ டவுன் லோடு பண்ணூங்க‌'''என்று சிரிக்கிறார்கள். மெஸேஞ், அப்லோட், டவுன்லோட், வாட்ஸ் அப், பேஸ் புக், மெயில் செக் அப், டேப், வாய்ஸ் மெஸேஜ், ஆடியோ வீடியோ கிளிப்க்ஸ் இந்த‌ சொற்களுக்கு விளக்கம் மூத்த‌ தலைமுறையினற்கு இளைய‌ தலைமுறையினரிடமே கிடைக்கும். இதில் நாம் ஏதாவது மறந்து விட்டால், என்ன‌ தாத்தா இவ்வளவு வயதாகி விட்டது இதுக்கூட‌ உங்களுக்கு தெரியவில்லையே என்று செல்லக் கொட்டு கொடுத்து, மீண்டும் விளக்கம் கொடுக்கிறார்கள். அது நமக்குப் பெருமையாக‌ இருக்கிறது, நம்மை விட‌ நமது வாரீசுகள் புத்திசாலிகள் என்று. நானும் இப்போதுதான் தொடு கைப்பேசியை பயன்படுத்துகிறேன், வாட்ஸ் அப்பில் நுழைந்து பல‌ செய்திகளையும், தகவல்களையும் பார்த்து, படித்து சுவைக்கிறேன். அதில் எனக்குத் தெரிந்த‌ முக்கிய‌ சுவைகளை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
வாழ்க்கைப் பயணம்.

காலங்காத்தாலே கோழி மாதிரி எந்திரிச்சி
காக்கா மாதிரி குளிச்சிட்டு
குரங்கு மாதிரி லபக் லபக் குனு தின்னுட்டு
குதிரை மாதிரி வேகவேகமாக‌ ஓடிட்டு
மாடு மாதிரி கேள்விக் கேட்காம‌ உழைச்சிட்டு
பெண்டாட்டி, பிள்ளைகளோட‌ கரடி மாதிரி கத்திட்டு
வேலைக்காரர்களோட‌ நாயாக் குரைத்து விட்டு
யாராவது தப்பாக் கேட்டா ஆந்தை மாதிரி முழிச்சிட்டு
ராத்திரி சாப்பாடை முதலை மாதிரி விழுங்கிட்டு
எருமை மாடு மாதிரி தூங்க‌ வேண்டியிருக்கு
இதுக்கு பேசாம‌ வண்டலூருக்கே குடிப்போயிடலாம்.

கணவன் மனைவி

மனைவி;; திங்கள் ஷாப்பிங்
செவ்வாய் ஓட்டல்
புதன் அவிட்டிங்
வியாழன் டின்னர்
வெள்ளி மூவீ
சனி பிக்னிக்'''''ரொம்ப‌ ஜோரா இருக்குங்க‌
கணவன்'''யா யா யா
ஞாயிறு கோயில் போகலாம்.
மனைவி'''ஏன்
கணவன்;; ம்ம்ம்ம் பிச்சை எடுக்க‌.

சிறப்பு ஆசிரியர்.

ஆபிசுக்கு போறேன், வேலைக்கு போறேன், டூட்டிக்கு போறேனு சொல்லுற வங்க‌ மத்தியிலே ஐம்பதெட்டு வயதிலும் ''ஸ்கூலுக்குப் போறேனு '''சொல்வது சிறப்பு ஆசிரியர் பணிக்கே உரியது.

இரத்தம் தேவை.

இந்த‌ ஜாதியில் மணமகன், மணமகள் தேவையென‌ விளம்பரம் தரும் எவர்க்கும் மருத்துவமனை சூழலில் அதே ஜாதிய்ல் இரத்தம் தேவை என‌ விளம்பரம் தர‌ தைரியம் இருப்பதில்லை.

எதிரியும் தேவை.
நல்ல‌ நண்பர்கள் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம். ஒரு எதிரி இருந்தால் வாழ் நாள் முழுதும் வெற்றிப் பெறலாம்.

சிந்திக்கவும்.
முன் கடந்து போவோரின்
முகம் காண‌ முடியவில்லை
பின் நின்று சிரிப்போரின்
காரணம் புரியவில்லை
தலை தாழ்ந்தே எங்கும் பயணம்
தொடு திரையை தொட்டபடி
உள்ளங்கையில்தான் உலகம்
கைப் பேசியே சகலம்.
சாமக் கோழி கூவியப் பின்னும்
கொக்கரக்கோ கேட்கும் முன்னும்
வாட்ஸ் அப்பில் மூழ்கிவிட்டோம்
நிஜத்தை மறந்தோம்
நிழலில் மூழ்கி விட்டோம்
கீமோஜியில் கூட‌
சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் உண்டு
ஆனால் நாம்
உள்ளங்கை உலகத்தோடு
கடந்துப் போகிறோம்
இது வாட்ஸப் காலம்
இனியாவது சிந்திப்போம்
நிழலை ஓரம் கட்டுவோம்
நிஜத்தை நேசிப்போம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு '''என்பது பழமொழி.
கையளவு டெக்னாலஜி, உலகளவு அறிவாலஜி'''என்பது புதுமொழி.
நகைச்சுவை.
;;;இந்த‌ மேஜையை தட்டுறதுல‌ இருந்து மின்சாரம் தயாரிக்க‌ முடிஞ்சா தமிழ் நாடு மின்மிகை மா நிலமா ஆகிடும்''[[என்னா தட்டு தட்டுறாங்க‌]].
''

,

5
Average: 4.7 (3 votes)

Comments

வாட்ஸப் மெசேஜ்களா?? கலக்கல் போங்க. இதுல 1 2 எனக்கும் வந்திருக்கு.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

//நிழலை ஓரம் கட்டுவோம்
நிஜத்தை நேசிப்போம்.//

சிந்திக்க‌ வைக்கும் வரிகள். அருகில் இருக்கும் உறவுகளை மறந்து விடுகிறோம். தேவைக்கு மட்டுமே பயன்படுத்த‌ பழகணும்.
அருமை:))

ஹாய்,
'''கலக்கல் போங்க‌'''நன்றிமா

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

'''அருமை'''பாராட்டுக்கு நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

மிகவும் நல்ல இழையொன்று ஆரம்பித்திருக்கீங்க. மற்றவர்களும் தமக்கு வரும் தகவல்களையும் இங்கே பகிரலாமா..?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள் ரஜினி.

‍- இமா க்றிஸ்