இதை கொடுக்கலாமா

ஹலோ தோழிகளே

என் 2 வயது மகனுக்கு தாய்ப்பால் நிறுத்தி 2 மாதம் ஆகிறது. ஆனால் அவன் ஆரம்பத்தில் இருந்தே வேறு எந்த பாலும் குடித்ததில்லை. நானும் பாலில் horlicks, boost, pediasure என எல்லாம் கொடுத்து பார்த்து விட்டேன் ஏதும் குடிப்பதில்லை. நேற்று வீட்டிற்க்கு வந்தவர்கள் சாக்லேட் மில்க் ஷேக் வாங்கி வந்து இருந்தார்கள். அதை நனறாக குடித்து கொண்டான். அதனால் பாலில் சாக்லேட் பவுடர் கலந்து சாக்லேட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாமா அது குழந்தையின் உடலுக்கு நல்லதா உதவுங்கள்

2 வயது என்றால் சாப்பாடுகளைச் சரியாகக் கொடுத்தாலே போதும். பால் நல்லதுதான். தினமும் பாலில் சாக்லட்... எப்போதாவது கொடுப்பதில் எதுவும் ஆகாது. இதையே தினமும் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டுமா!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்