இன்று என்ன‌ சமையல்

இன்றைய சமையல்

அண்டத்தில் ஆறுக் கோடிப் பிரச்சனை.
உலகத்தில் ஒருக் கோடிப் பிரச்சனை.
நாட்டில் நாற்பதாயிரம் பிரச்சனை.
நகரத்தில் நாலாயிரம் பிரச்சனை.
தெருவில் நூறுப் பிரச்சனை.
வீட்டில் எல்லாமே பிரச்சனை.

ஆனால் எல்லாப் பிரச்சனைகளும் ஒரு காலக் கட்டத்தில், ஒரு கால‌ ஓட்டத்தில் முடிவு கிடைக்கும். பிரச்சனைக்கு தீர்வும் கிடைக்கும். ஆனால் தீர்க்க‌ முடியாதப் பிரச்சனை , முடிவில்லாமல் தினம்தினம் தொடரும் பிரச்சனை, தொடர்கதை பிரச்சனை ஒன்றே ஒன்றுத் தான். அது வீட்டுக்கு வீடு இருக்கும் பிரச்சனை. குடும்பத்தலைவிகள், குடும்ப‌ ராணிகள், கிச்சன் குயின்களின் பிரச்சனைத்தாங்க‌.

"இன்றைக்கு என்ன‌ சமையல்?"

இது தாங்க‌ பிரச்சனை. நம்ப‌ பெண்களுக்கு உரிய‌ பாரம்பரிய‌ பிரச்சனை. பெண்கள் பல‌ உயர் பதவிகளில் பணிப்புரியலாம். உலகப் பிரச்சனைக்கே தீர்வு கண்டு சாதனை படைத்திருக்கலாம். ஆனால் //நம் வீட்டில் என்ன‌ சமையல் ///என்று எண்ணும் போதே பல‌ கேள்விகள் முன் நின்று பேயாட்டம் ஆடும்.

என்ன‌ என்ன‌ காய்கள் இருக்கு, நமக்கு மட்டும் சமையலா, விருந்தினர் வருகை உண்டா, குடும்ப‌ உறுப்பினர்க்கு பத்திய‌ சமையல் செய்ய‌ வேண்டுமா. நேற்று என்ன‌ சமையல் செய்தோம் [இது முக்கியமா கவனிக்க‌ வேண்டும். இல்லை என்றால் நேற்றைய‌ சமையலே ரிப்பீட் ஆகிவிடும்].

யார் யாருக்கு என்ன‌ சைடிஷ் பிடிக்கும், இன்று விரத‌ நாளா, நைட் டின்னருக்கும் சேர்த்து சமையல் செய்துவிடலாமா, இல்லை நைட்க்கு வேறு செய்துக்கொள்வோமா, இரண்டு அல்லது மூன்று ஐட்டம் செய்ய‌ நேரம் இருக்கா, இன்று பணிப்பெண் வேலைக்கு வருவாளா, அதிலும் நமக்கு உதவி செய்வாளா ? இத்தனை கேள்விகும் விடை காண‌ வேண்டும்.

சாய்ஸில் விட‌ வேண்டியதை விட‌ வேண்டும். டிக் அடிக்க‌ வேண்டிய‌ விடைகளுக்கு டிக் அடித்து ஒரு முடிவுக்கு வருவதே ஒரு சாதனையான‌ சோதனையாகும். இன்று என்ன‌ சமையல் என்னும் தேர்வு தினம்தினம் இல்லத்தரசிகளுக்கு நடைபெறும் சுயதேர்வு. இந்த‌ வினாக்களுக்கு விடையை ஒரே நிமிடத்திலும் கண்டுப்பிடிப்பார்கள், ஒரு மணி நேரத்திலும் கண்டுப்பிடிப்பார்கள், ஒரு நாள் எல்லாம் சிந்தித்தும் கண்டுப்பிடிப்பார்கள். அது அவர்களின் திறமையைப் பொறுத்தது.

சிலர் ஒரு வாரத்திற்கு என்ன‌ சமையல் மெனு என்பதை அட்டவணைப் போட்டு சமைப்பார்கள். அது கொஸ்டீன் அவுட் ஆன‌ தேர்வுப் போல் இருக்கும். சுவார்ஸ்யமாக‌ இருக்காது. குழந்தைகள் ஒடி வந்து ''அம்மா இன்று என்ன‌ சாப்பாடு? ''' நு நம் கையைப் பிடித்து கொஞ்சுவார்கள். அம்மாவோ, தாம் செய்த‌ சமையலைப்பற்றியும் அதற்கு தாம் செய்த‌ வெலையையும் கற்பனைக் கலந்து கதையாகச் சொல்லி மகிழ்ச்சியுடன் உணவை ஊட்டுவார்கள் அல்லது பரிமாறுவார்கள். அப்போது அங்கே நடைப்பெறும் உரையாடல் மிகவும் சுவார்ஸ்யமாகவும், மனதிற்கு சந்தோஷமாகவும் இருக்கும். உணவு பரிமாற்றத்துடன் அன்புப் பரிமாற்றமும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும். இது தினம்தினம் புதிது புதிதுப் போல் நடக்கும் சுகமான‌ சுவையான‌ நிகழ்ச்சி.

நம்முடைய‌ சமையல் மெனு சரிவிகித உணவாகவும், சத்துள்ள‌ உணவாகவும், சுவையான‌ உணவாகவும் இருப்பது அவசியம். பொதுவான‌ சமையல் மேனு. குழம்பிற்கும், பொரியல், கூட்டுக்கும் உள்ள‌ காம்பினேஷன்.

1. வெங்காய‌ சாம்பார் + உருளை, கருணை போன்ற‌ கிழங்குவகை வறுவல்.
2. காய் சாம்பார் + அவரை, பீன்ஸ், கோஸ், கேரட் வகை பொரியல்.
3. வத்தக் குழம்பு + வாழைத்தண்டு, நூல்கோல், கோஸ் கூட்டு.
4. காய் காரக் குழம்பு + கீரை வதக்கல்.
5. காய்க்கறி குருமா + அப்பளம், வடாம்.
6. கீரை குழம்பு + முருங்கைக்காய் கத்தரிக்காய் பொரியல், பட்டாணி உருளைப் பொரியல், உருளை கத்தரிக்காய் பொரியல்.....அதாவது இரண்டுக்காய் சேர்த்தப் பொரியல்.

அசைவ‌ உணவு மெனு;;
1. வெங்காய‌ சாம்பார் + மட்டன், சிக்கன், மீன், சுறா வறுவல்.
2. மட்டன், சிக்கன், மீன், குழம்பிற்கு சைட்டிஷ் தேவை இல்லை. சப்பாத்தி, பூரி, பரோட்டா, பிரியாணிக்கு கிரேவிகள் சரியான‌ ஜோடியாகும்.

இன்று என்ன‌ சமையல் என்று நான் யோசிக்கும் போது தோன்றிய‌ கருத்துக்களே இந்தப் பதிவாகும்.

5
Average: 5 (5 votes)

Comments

எனக்கும் இன்ந்த பிரச்சனை தினமும் வருவதுண்டு.இதனால் என் கணவருக்கும் எனக்கும் நிறைய வாக்கு வாதம் வருவதுண்டு பா. சரியாக சொல்லியிருக்கீங்க.

ஏமாறாதே|ஏமாற்றாதே

அன்பு ரஜினி மேடம்,

நல்ல பதிவு.

இது தினமும் நடக்கும் விஷயம்தான். நீங்க சொன்ன மாதிரி, முதலிலேயே டைம் டேபிள் போட்டு வச்சால், சுவாரசியம் போய் விடுகிறது.

ஆனாலும், மறு நாள் சமையல் மெனு மட்டுமாவது முதல் நாளே யோசிச்சு வச்சுடணும். அதே போலதான் தோசை மாவு, மிளகாப் பொடி திரிச்சு வைக்கிறது, இதெல்லாம் கரெக்டா செய்து வைத்துக் கொண்டால் காலை நேர டென்ஷன் இல்லாம இருக்கும்.

எதையும் பிளான் பண்ணி செய்யணும்.(இத வடிவேலு வாய்ஸ்ல படிங்க)

அன்புடன்

சீதாலஷ்மி

இப்பிடி ஒரு பிரச்சனை இருப்பது நிறைய பேர் சொல்லி அறிந்திருக்கிறேன்.ஆனால் என் அம்மா என் சகோதரிகள் யாரிடமும் இந்த பிரச்சனையை நான் அவதானித்ததில்லை.என் 8 வருடத்திற்கு மேற்பட்ட சமையலிலும் இவ்வாறான குழப்பம் வந்தது இல்லை.அதற்கான காரணம் உங்களுக்கு உதவலாம் என்ற நோக்கத்தில் மட்டும் இந்த பதிவை இடுகிறேன்.

காரணம் இதுதான் ஒரு குறிப்பிட்ட உணவுகளுக்குள் எங்களை பழக்கப்படுத்தி அதை தொடர்வதில்லை நாம் .வேறு நாட்டு உணவு வகைகள் ஐயும் பழக்கத்தில் வைத்திருக்கிறோம்.வேறு நாடுதான் என்று தேவையில்லை பக்கத்து ஊர் லேயே வேறு விதமான உணவுகள் சாப்பிடுவார்கள்.

உண்மையில் கூட்டிக்கழித்து பார்த்தால் அப்படி பல வகையறாக்களை சமைத்து சாப்பிடுவது சந்தோசம் மட்டுமல்ல செலவும் நேரமும் மிச்சம் படுத்தக்கூடிய சுவையான உணவுகள் பல கண்டறிய முடியும்.

நான் ஒவ்வொரு நாட்டுக்கு ஊர்களுக்கு போய் வந்த பிறகு அங்குள்ள நல்ல உணவுப்பழக்கம் சிலதை என் பட்டியலில் சேர்ந்து விடும்.

சென்னை போய் வந்ததும் சாம்பார் ,வத்தக்குழம்பு,மோர்க்குழம்பு,இப்படி பல உணவுகளை விரும்பி சேர்த்துக்கொண்டேன்.

முஸ்லீம் குடும்பங்களுடன் சேர்ந்து அவர்கள் செய்யும் பாயா வில் இருந்து நோன்புக் கஞ்சி வரைக்கும் என் உணவு பட்டியல்களில் வந்து விட்டது.

யாராவது வருகிறார்கள் என்றால் கூட எதை திக்கு முக்காடும் அளவுக்கு எதை செய்வது என்று தெரியாமல் அவ்வளவு ஞாபகம் வரும்.

குட்டிகள் கூட விரும்பி பழக்கப்பட்டு விடுவார்கள்.குடும்பத்தில் யாருமே புது புது உணவுகளை சுவைக்க மறுக்க மாட்டார்கள்.

அவர்கள் உணவை எங்கள் ஸ்டைலில் செய்து சாப்பிடுவது கூட ஒரு சுவை.

சோ உணவுப்பழக்கத்தை விரிவு படுத்தினால் இது ஒரு இன்ரஸ்ட் ஆன விஷயம் என்பது என் அனுபவம்.

அதைவிட நம் தமிழ் சமையல்கள் அதிக நேரத்தை விழுங்கிக்கொள்வதாலும் சிரமமாகவும் இருப்பதால் தான் வேலைக்கு போகும் பெண்களும் பிஸியாக இருக்கும் பெண்களும் பாவம் மிகவும் நொந்து போய் விடுகிறார்கள்.

இது என்ன்னுடைய ஐடியா அண்ட் அனுபவம் யாருக்காவது உதவினால் சந்தோசம்.

ஹாய்,

;;;மைன்ட் வாய்ஸ்'''கேட்டு நாளாகி விட்டது. நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்.
என் பதிவுக்கு முதல் கருத்து கொடுத்தமைக்கு நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்.

'''அவர்கள் உணவை எங்கள் ஸ்டைலில் செய்து சாப்பிடுவதுக் கூட‌ ஒரு சுவை''''அழகானக் கருத்து. நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நாளைக்கு என்ன‌ சமையல் என்பதை மட்டும் இன்றே முடிவு செய்வேன்.
சில‌ சமயம் அதுவும் யோசனையாவே முடிவதும் உண்டு.:))
எப்படியோ சமையலை பற்றி யோசிப்பதும் சுவாரஸ்யம் தானே நமக்கு.

இது இன்டர்நாஷனல் பிரச்சினை. ;) எல்லா வீட்டிலும் இருக்கும்.

இறுதியில் மெனு காம்பினேஷன் கொடுத்திருப்பது அருமையான யோசனை ரஜினி.

‍- இமா க்றிஸ்