மிளகு காரச் சட்னி

மிளகு காரச் சட்னி

தேதி: February 23, 2016

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

மொத்த நேரம்: 15 நிமிடங்கள்

4
Average: 3.5 (14 votes)

 

தக்காளி - 5 (பெரியது)
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
தேவையானப் பொருட்கள்
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.
மிளகாய் வறுத்தல்
அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)
மிளகு சேர்த்தல்
அடுப்பை அணைத்து வைத்து வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
வெந்தயம் வறுத்தல்
மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதக்கல்
தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
மிக்ஸியில் அரைத்தல்
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.
தாளிப்பு
சுவையான மிளகு கார சட்னி தயார். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
மிளகு காரச் சட்னி தயார்

சளி நேரத்தில் சாப்பிட காரசாரமாக நன்றாக இருக்கும். நல்லெண்ணெய் தவிர வேறு எண்ணெயில் செய்தால் மிளகாயை குறைத்து செய்யவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமை பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு ஏன்னா எனக்கு இந்த மாதிரி கார சட்னி வகையெல்லாம் ரொம்ப பிடிக்கும். கார சீடை எப்படி செய்றதுனு சொல்லுங்க தோழி

குறிப்பை அழகாக வெளியிட்ட அண்ணா & டீம் க்கு மிக்க நன்றி..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றிப்பா.எனக்கும் காரசட்னி தான் ரொம்ப இஷ்டம்.கார சீடைன்னா காரம் போட்டு பண்ணுவாங்களா? இல்ல நார்மலா நம்ம பண்ற வெள்ளை சீடைய தான் கேக்குறீங்களா?

சீதாம்மா ரெசிப்பி சீடை இருக்கு.இந்த லிங்க் பாருங்கப்பா.

http://www.arusuvai.com/tamil/node/29189

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றி தோழி அந்த சீடை எப்படினு தெரியல ஆனா காரமா சிவப்பு கலர்ல இருக்கும்

சர்ச் பாக்ஸ்ல கார சீடை போட்டு தேடுங்க.. நிறைய காட்டும்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

இன்னைக்கு நைட் சாப்பாட்டுல தோசைக்கு நீங்க செய்த சட்னி தான் செய்தேன் தோழி ம்ம்ம் நல்லா இருந்தது இத மாதிரி வேற கார சாரமா சட்னி இருந்தா போடுங்க செய்து பார்க்கிறேன் தோழி

நன்றிப்பா.. உடனே செய்து பார்த்திட்டு சொன்னதற்கு.. ரெசிப்பிக்கு கீழே இன்னொரு கார சட்னி இருக்கு.. மற்ற கார சட்னிகளும் இருக்கு..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

தோழி இரவில் தண்ணீரில் சோம்பை போட்டு வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் சரிவரும் என்று படித்தேன் அது உண்மையென்றால் அதை எப்போது எவ்வளவு குடிக்கனும். அப்பறம் தோழி மாதவிடாய் சரிவரவும் கரு தங்குவதற்கும் வழி சொல்லுங்கள் தோழி

அபி,
நல்ல காரசாரமான சட்னி
பாராட்டுக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்கள் கேள்வியை இப்பொழுதுதான் பார்த்தேன்.. சோம்பு தண்ணீர் பற்றியும், மற்றது பற்றியும் எனக்கு தெரியலைப் பா.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ஆமாம் நல்ல காரசாரமான சட்னி.. நன்றி அக்கா...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அருமையான‌ தகவல்

Reiki Guna ( Reiki Distance Group Healer )

மிக்க நன்றி...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மிளகு கார சட்னி அருமையாக உள்ளது.

தன்னம்பிக்கையோடு வாழுங்கள் வெற்றி நிச்சயம் ( ரெய்கி குணா )

அருமையான சட்னி நன்றி

Belsh

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Puli milagai serkadha kulambu edhavadhu solunga mam