அச்சு முறுக்கு

அச்சு முறுக்கு

தேதி: February 24, 2016

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்

மொத்த நேரம்: 35 நிமிடங்கள்

5
Average: 4.3 (8 votes)

 

பச்சரிசி - 1 கிலோ
சர்க்கரை - 300 கிராம்
முட்டை - 3
தேங்காய் - 1
எண்ணெய்


 

முதலில் தேங்காயை துருவி கெட்டியாக‌ பாலெடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை நனைய‌ வைத்து டவலில் ஈரத்தை போக்கி, நீர் விடாமல் மிக்சியில் நைசாக‌ பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
பச்சரிசி மாவு முட்டை கலவை
அத்துடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
தேங்காய் பால் சர்க்கரை
அதில் மாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
அரிசி மாவு சேர்க்கவும்
தோசை மாவு பதத்தில், சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் முறுக்கு கடினமாக இருக்கும். நீர்க்க இருந்தால் முறுக்கு மொறுமொறுப்பாக வரும்.
தோசை மாவு பதம்
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் முறுக்கு அச்சினை முக்கி சூடாக்கவும். அச்சு சூடாக இருந்தால்தான் மாவு அதில் ஒட்டும்.
முறுக்கு சுடுதல்
சூடான‌ அச்சை மாவில் முக்கால் பாகம் அமிழ்த்தி எடுக்கவும். முழுவதும் அமிழ்த்தினால் முறுக்கு அச்சில் இருந்து கழன்று விழாது. கவனம் தேவை.
அச்சை அமிழ்த்தல்
மாவுடன் கூடிய அச்சை எண்ணெயில் அமிழ்த்தவும். மாவு சற்று வெந்ததும் முறுக்கானது அச்சில் இருந்து பிரிந்து வந்துவிடும்.
எண்ணெய்யில் முறுக்கு
முறுக்கு சிவந்து வந்ததும் எடுக்கவும்.
சிவந்த முறுக்கு
இதே போல் எல்லா மாவையும் முறுக்காக சுட்டு எடுக்கவும். சட்டியின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் இரண்டு மூன்று என்று பொரித்து எடுக்கலாம்.
அச்சு முறுக்கு தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப சூப்பரா இருக்கு.அச்சு முறுக்கு சாப்பிடுவதோட சரி.எண்ணைல நின்னு பொரிச்சு எடுக்குற அளவுக்கு பொறுமை பத்தாது எனக்கு..நீங்க பண்ணதுல எடுத்துக்கிறேன்.ஆனா கலர் சேர்க்க மாட்டீங்களோ நீங்க.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சின்ன வயசில அம்மா செய்யும் போது பக்கத்தில் உட்கார்ந்து கணக்கு இல்லாம சாப்பிட்டு கிட்டே இருப்போம்...இப்ப அமமாவால செய்ய முடியாது..எனக்கு செய்ய தெரியாது..☺
உங்க முறுக்கு பாத்ததும் ஆசையா இருக்கு

anbe sivam

நீங்க சொல்வது உண்மையே அபி. அச்சு முறுக்கு செய்ய நிறைய பொறுமை வேணும். ஆனால் குட்டீசுக்கு ரொம்பப் பிடிக்கும்னு செய்வேன். கலர் சேர்ப்பதில்லை அபி. எல்லாம் உங்களுக்கே எடுத்துக்கோங்க அபி

ம். நானும் தான் கவி. அம்மா செய்ய செய்ய எடுத்து தம்பி தங்கையோடு சேர்ந்து சாப்பிட்டுகிட்டே இருப்போம். இனி நீங்க செய்து பாருங்க கவி. ஒரு டம்ளர் அரிசி எடுத்து கொஞ்சமாக செய்து பாருங்க. இப்போ இந்த முறுக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.