கன்னத்தில் வெள்ளையாக இருக்கின்றது.

வணக்கம்,
எனது மகனுக்கு இரண்டு வயது ஆகின்றது அவன் பிறந்து இரண்டு மாதம் கழித்து அவனுடைய வலது கன்னத்தில் வெள்ளையாக (ஒழுங்கான வடிவத்தில் இல்லை அதனால் அளவு சொல்ல தெரியல ) இருந்தது டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தோம் அவரும் நிறைய மருந்துகள் கொடுத்தார் எந்த பயனும் இல்லை . தோல் டாக்டரிடம் காண்பித்தோம் அவர் pigmentation என்று சொல்லிவிட்டார் மருந்து போடுங்கள் போனால் போகும் இல்லை என்றல் போகாது என்று கூறிவிட்டார் . இந்தியா வில் வந்தும் டாக்டரிடம் காண்பித்தோம் அவர் அவன் வளரும் போது சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார் . இது போன்று யாருக்காவது இருந்து இருக்கிறதா ? யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் ஆலோசனை கூறவும்.. நன்றி...

//pigmentation// //வளரும் போது சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார் .// அதையேதான் வேறுவிதமாகச் சொல்லியிருக்கிறார். இதுதான் என் அபிப்பிராயமும்.

//இது போன்று யாருக்காவது இருந்து இருக்கிறதா ?// மாணவர்கள் சிலரைக் கண்டிருக்கிறேன். இப்போதும் இருக்கிறது. //யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் ஆலோசனை கூறவும்.// பேசாமல் விடுங்க. அதுதான் நல்லது. எதையாவது செய்யப் போனால் மாறாத தழும்பு வரலாம். விட்டுவிட்டால் வளரும் போது குறைந்துவிடக் கூடும். 2 வயதுதானே! இன்னும் காலம் இருக்கிறது. இப்போ அவசரப்பட்டு எதுவும் செய்யாதீங்க.

//டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தோம் அவரும் நிறைய மருந்துகள் கொடுத்தார் எந்த பயனும் இல்லை .// :-) நீங்க நம்பிப் போய்ட்டீங்க; ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் மருந்துகளை முயற்சி செய்திருப்பார். அவருக்கும் வேறு வழி இல்லையே! உங்களைத் திருப்திப் படுத்த வேண்டும்.

பிக்மண்டேஷன் ஸ்காரை சரியாக்க... ப்ளாஸ்டிக் சர்ஜரிக்குப் போகலாம். அதுவும் நன்கு வளர்ந்த பின்னால் மட்டும். சினிமா நட்சந்திரங்களாக இருந்தால் கூட சட்டென்று இந்த முடிவுக்கு வர மாட்டார்கள். சுலபமாக மேக்கப்பில் மறைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

தங்களின் கருத்துக்கு நன்றி Imma madam..

எனது மகனுக்கும் இரண்டு வயது தான் ஆகின்றது அவன் பிறந்து இரண்டு மாதம் கழித்து அவனுடைய கன்னத்திலும் வெள்ளையாக இருந்தது டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தோம் அவர் அவன் வளரும் போது சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார் . டொன்ட் worry.அதே பிரச்ச‌னை தாம் எனக்கும் பா

மேலும் சில பதிவுகள்