அவுரி பொடி

அவுரி பொடி னா என்ன..சொல்லுங்கள் pls

எனக்கும் தெரியாது. கூகுள் செய்ததில் அப்படி ஒரு தாவரம் இருப்பதாகத் தெரியவந்ததது. அவரை இனத் தாவரம் போல தெரிகிறது. இலை, விதை, வேர் என்று பொடித்து மருந்துகளில் பயன்படுத்துகிறார்கள் போல் தெரிகிறது. மூலிகை மருந்துக் கடைகளில் விசாரித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

நான் அபுதாபி ல இருக்கிறேன். இன்கு கேட்டு பார்தேன் கிடைக்கவில்லை.யாராவது என்கு கிடைக்கும் என்று சொன்னால் உதவியாக இருக்கும்

அவுரி பொடி என்பதை ஆயர் வேதத்தில் நீலி பொடி என்பார்கள். இண்டிகோ சாயம் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அவுரி பொடி தலைக்கு பயன்படுத்தக்கூடிய டைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அவரி பொடி தலைக்கு சாயம் மட்டும் கொடுப்பது அல்ல. சில நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. பெரும்பாலும் அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நீலி பிருங்காதி தைலம் அவுரி இலையினைக் கொண்டு தயாரிப்பது தான்.

மேலும் சில பதிவுகள்