வேலை செய்யும் இடத்தில்

ஹலோ தோழிகளே

நான் ஒரு கல்லூரியில் 5 வருடங்க‌ளாக‌ பணிப்புரிகிறேன். நானும் என்னுடன் ஒருவரும் ஆபீஸில் பணிபுரிகிறோம் ஏறக்குறைய‌ எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான‌ வேலை தான். மற்ற‌ இருவர் நூலகத்தில் பணிப்புரிகிறார்கள். ஒருவர் ஆசிரியர். இவர்களில் 4 பேரும் ஒரே மொழி கன்னடம் நான் மட்டும் தமிழ். எங்கு சென்றாலும் ஒன்றாக‌ தான் செல்வோம். 4 பேரும் சில‌ நேரங்களில் என்னுடன் நன்றாக‌ பேசுவார்கள் எங்காவது சென்றால் கூப்பிடுவார்கள். என்னுடன் பேசி சிரிப்பார்கள். சில‌ நேரங்களில் திடீரென‌ எதுவும் பேச‌ மாட்டார்கள் அவர்கள் மட்டும் அவர்கள் மொழியில் பேசிக்கொண்டே இருப்பார்கள் நானெ எதாவது கேட்டலும் பதில் கூற‌ மாட்டார்கள். நான் பேசி கொண்டிருக்கும் பொழுது இடயில் அவர்கள் வேரு எதவது பேச‌ தொடங்கி விடுவார்கள். என்ன‌ காரனம் என்றே தெரியவில்லை. ஒரு சமயம் இப்படி செய்யாதே உனக்கு சொல்வதற்க்கு அம்மா அப்பா இல்லை அதனால் தான் நாங்கள் கூறுகிறோம் என்று என் தவறை திருத்தி உதவுவார்கள். ஒரு சமயம் எதுவும் கண்டுக்கொள்ள‌ மாட்டார்கள். எனக்கு மிகவும் வேதனையாக‌ உள்ளது. ஒரு நாள் முழுவதும் என் பக்கத்தில் இருந்துக்கோண்டே என்னை ஒதுக்கி வைப்பது கஷ்டமாக‌ உள்ளது. என் வயதில் யாரும் இல்லை எல்லாரும் என்னை விட‌ பெரியவர்கள். என்னை இப்படி ஒதுக்கி வைக்க‌ என்ன‌ காரணம் என்று எவ்வளவு முயற்ச்சி செய்தும் கன்டுப்பிடிக்க‌ முடியவில்லை. என்ன‌ செய்வதென்று புரியவில்லை தோழிகள் தான் உதவ‌ வேன்டும்

//இவர்களில் 4 பேரும் ஒரே மொழி கன்னடம் நான் மட்டும் தமிழ். // பாஷை புரியாமல் இருப்பது உங்கள் மனதில் ஒரு சின்ன... என்ன சொல்லட்டும்! ம்... சந்தேகம் / தயக்கம்... எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதுவும் நட்பின் மத்தியில் ஒரு சின்னத் திரை போட்டிருக்கிறது.

//சில‌ நேரங்களில் திடீரென‌ எதுவும் பேச‌ மாட்டார்கள்// சில நேரங்களின் தானே! பல நேரங்களில் எல்லாம் ஓகே ஆக இருக்கு இல்ல! நேற்றே உங்களுக்குப் பெரிதாகப் பதில் தட்டினேன். இடைல எழுந்து போக வேண்டியதாப் போச்சு. திரும்ப வந்து மறந்து போய் நானே விண்டோவை க்ளோஸ் பண்ணிட்டேன். :-) இன்று என் சின்னவர் வகுப்பில் ஒவ்வொரு இன்சிடண்டுக்கும் அவரவர் நெகட்டிவ் ஆட்டிட்யூட் & பாஸிட்டிவ் ஆட்டிட்யூட் எழுதும்படி கேட்டாங்க.
நான் க்ளோஸ் பண்ணின பதில் பற்றி... நெகட்டிவ் ஆட்டிட்யூட் - கர்ர்ர்ர்... ;(( நேரம் எடுத்து இத்தனை தட்டி இப்புடி டிலீட் பண்ணிட்டமே ;(( என்கிறது. பாஸிடிவ்... இந்த விஷயத்தை இன்று என்பதால்தான் உங்களோட ஷேர் பண்ண முடியுது என்கிறது. :-)
சில நேரங்களில் மட்டும்தானே தவிர மீதி எல்லா நேரமுல் உங்களை ஒதுக்கல எப்கிறது பாஸிடிவ் தானே!! கிடைக்கும் சமயம் இதை நினைச்சு சந்தோஷமா இருங்க.

//என்ன‌ காரனம் என்றே தெரியவில்லை.// தெரிய வேணாம். அதனால் ஆகப் போகும் நன்மை எதுவும் இல்லை. விட்டிருங்க.

//ஒரு சமயம் இப்படி செய்யாதே உனக்கு சொல்வதற்க்கு அம்மா அப்பா இல்லை அதனால் தான் நாங்கள் கூறுகிறோம் என்று என் தவறை திருத்தி உதவுவார்கள். // ;-) இது.... உதவி என மாட்டேன். அவரவர் பட்டு, சிந்தித்துத் திருந்த வேணும். அம்மா அப்பா இருந்தால் மட்டும் அவங்களுக்கு உங்க ஆபீஸ் விஷயம் தெரியவா போகிறது சொல்லித் திருத்த! உங்கள் இடத்தில் நான் இருந்தால்... கேட்பது போல் கேட்ப்பேன். எனக்குச் சரியென்பதை மட்டும் செய்வேன். அவர்கள் அடுத்த தடவை அட்வைஸ் கொடுக்கும் போது, என் விஷயத்தில் தலையிடுவதை நான் என்கரேஜ் பண்ணவில்லை என்பதை எப்படியாவது புரிய வைத்து விடுவேன்.
எப்போவாவது அவர்களுக்காக உங்களுக்குப் பிடிக்காததை, தவறானதைக் கூடச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வரலாம். அவதானமாக இருங்கள்.

//எனக்கு மிகவும் வேதனையாக‌ உள்ளது.// இருக்கக் கூடாது. வாழ்க்கை என்பது வரும் எல்லாவற்றுக்கும் முகம் கொடுப்பதுதான். கிடைக்கும் போது சந்தோஷப்படுங்கள். இல்லாத போது கவலைப் படாமலிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

//ஒரு நாள் முழுவதும் என் பக்கத்தில் இருந்துக்கோண்டே என்னை ஒதுக்கி வைப்பது கஷ்டமாக‌ உள்ளது.// சரி... அவர்கள் உங்களை ஒதுக்குவதாக நினைக்க வேண்ண்டாம். நீங்கள் அவர்களை ஒதுக்கியதாக அந்தச் சமயங்களில் நினைத்துக் கொள்ளுங்களேன்.

//என் வயதில் யாரும் இல்லை எல்லாரும் என்னை விட‌ பெரியவர்கள்.// இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.//என்னை இப்படி ஒதுக்கி வைக்க‌ என்ன‌ காரணம்// காரணம் எதுவும் இல்லை. உண்மையில் அவர்கள் உங்களைத் தங்கள் தங்கை இடத்தில் தான் வைத்திருக்கிறார்களே தவிர நண்பி என்னும் இடத்தில் இல்லை என்று தோன்றுகிறது. //எவ்வளவு முயற்ச்சி செய்தும் கன்டுப்பிடிக்க‌ முடியவில்லை.// விட்டிருங்க. இதிலெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம். நீங்கள் தப்பாக ஏதாவது செய்திருந்தால் அது உங்களுக்குப் புரிந்திருக்கும். அல்லாத வரை... யோசிச்சு மனதைக் கெடுத்துக் கொள்வதில் அர்த்தம் எதுவும் இல்லை.

//என்ன‌ செய்வதென்று புரியவில்லை// வேலைக்கு சந்தோஷமாகப் போங்க. எப்பவும் போல பேசுங்க. எங்காவது போகக் கூப்பிட்டால், பிடித்தால் போங்க. அல்லாவிட்டால் அவர்கள் மனம் நோகாதபடி ஒரு காரணத்தைச் சொல்லுங்க. உங்கள் பேச்சுக்குப் பதில் கிடைக்காத பொழுது அங்கிருந்து விலகி உங்கள் வேலையைப் பார்க்கப் போயிருங்க. அவர்கள் தனித்துப் பேசினால்... அது அவர்கள் வயதிற்கான பேச்சாக, உங்களுக்குப் பொருத்தமில்லாததாக இருக்கக் கூடும் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். உங்கள் நட்பு நல்லபடி தொடரும்.

‍- இமா க்றிஸ்

பதிலுக்கு நன்றி. இபொழுது தான் தெளிவடைந்து இருக்கிறென்

மேலும் சில பதிவுகள்