வரகரிசி உளுந்தங்கஞ்சி

வரகரிசி உளுந்தங்கஞ்சி

தேதி: March 9, 2016

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்

மொத்த நேரம்: 35 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

வரகரிசி‍‍‍‍‍‍ - 100 கிராம்
தோலுடன் கூடிய‌ உளுத்தம்பருப்பு - 25 கிராம்
வெந்தயம் - கால் ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
தேங்காய் துருவல் - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையான‌ப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
தேவையானப் பொருட்கள்
முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, கொதிக்கும் நீரில் போடவும்.
உளுத்தம் பருப்பு வேக வைத்தல்
சற்று நேரம் ஆகி பாதி வெந்ததும் வரகரிசியை கல் நீக்கி சேர்க்கவும்.
வரகரிசி சேர்த்தல்
அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும்.
பூண்டு சீரகம் வெந்தயம் சேர்த்தல்
பின்னர் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்தல்
நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.
உப்பு சேர்த்தல்
கஞ்சியாக‌ வைத்து எள்ளுத்துவையல் வைத்து சாப்பிடலாம். அல்லது சாதம் போல‌ வைத்து மீன் குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.
வரகரிசி உளுந்தங்கஞ்சி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்