எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

தேதி: March 9, 2016

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (16 votes)

 

கத்தரிக்காய் -1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
தேங்காய் - அரை மூடி (சிறியது)
பூண்டு - 10 பல்
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
புளிக்குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
புளி தண்ணீர் - 2 கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 ஆர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையானப் பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும். கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும்.
தேவையானப் பொருட்கள்
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளி வதக்கல்
கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 4 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும். (பாத்திரத்தில் கூட வதக்கி கொள்ளவும்).
கத்தரிக்காய் வதக்கல்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து வெட்டி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
கடுகு வெந்தயம் தாளித்தல்
வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.
பூண்டு வதக்குதல்
அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும்.
தேங்காய் குழம்பு பொடி சேர்த்தல்
அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
புளி கரைசல் உப்பு சேர்த்தல்
குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்கவிடுதல்
எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும்.
எண்ணெய் தெளிவு
சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்பதற்கான செய்முறை விளக்கம். ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. தேனி பகுதிகளில் சாம்பார் தவிர மற்ற அனைத்து குழம்பு வகைகளுக்கும் வெங்காயம், தக்காளி வதக்கி தேங்காயுடன் அரைத்து தான் செய்வார்கள். இப்படி வதக்கி அரைத்து செய்வதால் குழம்பு கெட்டியாக வரும். ருசியும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அந்த ப்ளேட்டை அப்படியே இங்கே தள்ளுங்க...Slurp!!! :)

அன்புடன்,
மகி

நன்றி டீம் குறிப்புகளை வெளியிட்டதற்கு..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ரொம்ப நன்றி... இங்க வாங்க சூப்பரா செய்து தரேன்..☺☺

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

குழம்பு மிகவும் அருமையாக உள்ளது. புளி குழம்பு பொடி எப்படி செய்வது

மிக்க நன்றிங்க..எனக்கு குழம்பு பொடி எங்க அம்மா தான் அரைத்து தருவாங்க.. நீங்க சர்ச் பாக்ஸில் புளிக்குழம்பு பொடி, குழம்பு பொடி போட்டு தேடிப்பாருங்க நிறைய வருகிறது.. இங்கே சைடில் வகைகளில் பொடி என இருக்கிறது. அதிலும் எல்லா பொடிகளும் இருக்கும்.. உங்களுக்கு விருப்பமானதை அரைத்துக் கொள்ளலாம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றி அபி.,

எண்ணெய் கத்திாிக்காய் குழம்பு நன்றாக வந்தது்
அபி சிஸ்டா் 2 வது ரெசிபி செயதேன்
நன்றி
ப்ரியங்களுடன்
ஜெய்பு

ட்ரை பண்ணி பார்த்திட்டு சொன்னதற்கு மிக்க நன்றி...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அருமையான ரெசிபி எனககு பிடித்தமான குழம்பு . நன்றி

I try this method. Taste was very nice. Thank u abi

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

I try this method. Taste was very nice. Thank u abi

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

I try this method. Taste was very nice. Thank u abi

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

I try this method. Taste was very nice. Thank u abi

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

I try this method. Taste was very nice. Thank u abi

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

I try this method. Taste was very nice. Thank u abi

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

யாரோ நிறைய தடவை கூப்பிட்டுருக்காங்கனு தகவல் கிடைச்சு அபி பயந்து போய் ஓடி வந்தேன்.. :)
நன்றிங்க.. செய்து பார்த்திட்டு கருத்தும் சொன்னதற்கு...
ஒரு முறை அழுத்திட்டு விட்டுட்டா அதுவே பதிவாகிடும்.. நிறைய தடவை அழுத்திட்டீங்க போல..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

பார்க்கவே பசிதூண்டுகிறது நானும் உங்களை போல்தான் செய்வேன்

எல்லாம் நன்மைக்கே

ஓ அப்படியா... வருகைக்கு நன்றிங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி