கோதுமை பீட்ரூட் அல்வா

கோதுமை பீட்ரூட் அல்வா

தேதி: March 9, 2016

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (19 votes)

 

கோதுமை மாவு - 1 கப்
ஜீனி - 2 1/2 கப்
நெய் - 3/4 கப்
முந்திரி பருப்பு - 12
கலருக்கு :
பீட்ரூட் - 1 (சிறியது)
கேரட் - 1 (சிறியது)


 

தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். கேரட், பீட்ரூட்டை தோல் சீவி வெட்டி மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து 1 கப் சாறு எடுத்து கொள்ளவும்.
ஜீனி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
ஜீனி கரைந்ததும் பீட்ரூட் சாறை சேர்க்கவும்.
மாவை தோசை மாவு போல் நீர்க்க கரைத்து கொள்ளவும்.
தண்ணீர் கொதித்ததும் கரைத்த மாவை சேர்க்கவும்.
கட்டி பட்டு விடாமல் இருக்க கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அடுத்து சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.
அல்வா நன்றாக கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் வெளியே வரும்.
இப்பொழுது இன்னொரு அடுப்பில் நெய்யில் முந்திரியை வறுக்கவும்.
கோதுமை பீட்ரூட் அல்வா
வறுத்த முந்திரியை அல்வாவுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
கோதுமை பீட்ரூட் அல்வா
சுவையான கோதுமை பீட்ரூட் அல்வா ரெடி.
கோதுமை பீட்ரூட் அல்வா


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் குறிப்புகளை வெளியிட்ட அட்மின் அண்ணா & டீம் க்கு மிக்க நன்றி...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Nice... Kandipa... Try panni result soldren

நன்றிங்க.. ட்ரை பண்ணி பார்த்திட்டு சொல்லுங்க...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Wow recipe semmaya irukum polaye... i will try

நன்றி மணி மலர்.. ஆமாம்பா.. நல்ல சுவையாக இருந்தது.. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி