
தேதி: March 9, 2016
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
மொத்த நேரம்: 30 நிமிடங்கள்
எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ
நல்லெண்ணெய் -5 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 10 இலைகள்
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்து பொடிக்க
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
தனியா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து பொடி செய்யவும். பூண்டை தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும்.

இத்துடன் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை 2 விசில் வரை வேக வைக்கவும்.

சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

கொத்தமல்லித்தழை தூவவும். கோழி ரசம் ரெடி.

Comments
revs
இது சூப் போலவா இல்ல சாதத்தோட சாப்பிடலாமா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
எனது அம்மாக்கு ப்ரியானி செய்ய
எனது அம்மாக்கு ப்ரியானி செய்ய தெரியவில்லை.படி எப்படி செய்வது என்று சொல்லுங்கல்
வெற்றிசெல்வன்
இங்கு படங்களோடு உள்ள பிரியாணி குறிப்புகள் நூற்றுக்கணக்கில் இருக்கு. உங்களுக்கு இன்ன வகை தேவை என்று கேட்டிருந்தால் எடுத்துக் கொடுத்திருப்பேன். பொதுவாகக் கேட்கிறீர்கள். மேலே அறுசுவை லோகோவுக்குப் பக்கத்தில் கூகுள் கஸ்டம் சர்ச் இருக்கு இல்ல! அங்க பிரியாணி என்று போட்டு தேடுங்க. கிடைக்கும் லிஸ்ட்ல இருந்து பிடிச்சதை எடுங்க.
https://www.youtube.com/watch?v=qNdVOcoT5XI அறுசுவை கிச்சன் - வெஜிடபிள் பிரியாணி வீடியோ இது.
- இமா க்றிஸ்
லெமன் சோடா சாப்பிடுவது நண்மைகள், தீமைகள்
லெமன் சோடா நண்மைகள், தீமைகள் தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடம்பில் கிட்னி செயல் இழக்கும் எனப்படுகிறதே ஆகையால் உங்கள் கருத்தை தெறியபடுத்தவும்
கோழி ரசம்
எளிமையான சுவையான குறிப்பு. இந்த வார விடுமுறையில் முயற்சி செய்தேன். நன்றாக இருந்தது.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!