அடுப்பு எந்த பக்கம் பார்த்து இருக்க வேண்டும்.

Friends need help please,
கிச்சன்னில் அடுப்பு எந்த பக்கம் பார்த்து இருக்க வேண்டும். நான் புது அடுப்பு ஒன்று வாங்கி , எப்போதும் போல் , நாம் கிழக்கு பார்த்து நின்று சமைப்பது போல் வைத்தேன். ஆனால் சின்க் மிக அருகில் வருது. அதனால் நான் தெற்கு நோக்கி நின்று சமைப்பது வைத்துல்லேன். ஈது போல் யாரவது செட் பன்னியது உன்டா? ஈல்லை direction மாட்ர வேன்டுமா?

உங்கள் வசதியைப் பார்த்து வையுங்கள். சமையலறைக் கதவு / ஜன்னல் வழியே உள்ளே வரும் காற்று தீயை அடுப்பை விட்டு விலகிப் போக வைத்தால் வெப்பம் விரயமாகும். இதனால் உங்களுக்கு எரிபொருள் & நேரம் அதிகம் செலவாகும். அடுப்பிலிருந்து இறக்கும் பாத்திரங்களைச் சட்டென்று வைக்கக் கூடியதாக அருகே மேசையில் இடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தூக்கிக் கொண்டு உலாவ முடியாது. இதை விட... சமையல் ஆவி & வாடை வெளியேறும் விதமான இடத்தில் அடுப்பு இருந்தால் நல்லது. இப்போதைய வீடுகளில் இவை எல்லாவற்றையும் கவனித்து வைக்க முடிவதில்லை.

‍- இமா க்றிஸ்

அன்புள்ள‌ ஸ்ருதிக்கு,
உங்களுக்கு வாஸ்து நம்பிக்கை இருந்தால் தென்கிழக்கு, வடமேற்கு
திசைகளில் தான் வைக்க‌ வேண்டும், நீங்கள் முதலில் வைத்த‌ முறையே
சரியானது. காரணம் கிழக்கு நோக்கி நீங்கள் நிற்கும் போது வெளிச்சம் உங்கள் முகத்தில் விழும், காலைச் சூரியனின் கதிர்கள்
உடலுக்கு நல்லது, உங்கள் நிழல் உங்களுக்குப் பின்னால் விழும், வேறு
பக்கமாக‌ இருந்தால் உங்கள் நிழல் அடுப்பின் மீது விழலாம். சோதித்துப்
பாருங்கள். சின்க் மிக அருகில் இருந்தால் சின்க்குக்கும் அடுப்பிற்கும்
இடையே குறுக்கே சின்ன‌ தடுப்பு வையுங்கள். எங்கள் பக்கத்து வீட்டில்
அப்படித்தான் வைத்துள்ளார்கள்.
சிறு குறிப்பு, தெற்கு எமனுடைய‌ திசை.அத்திசை நோக்கி விளக்குகூட‌ ஏற்ற‌ மாட்டார்கள். எதற்கும் வாஸ்துவைப் பார்ப்பது தெளிவைத் தரும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்