ஒன்பது மாத குழந்தைக்கு....,..

என் குழந்தைக்கு ஒன்பது மாதம் ஆகிறது அவனுக்கு என்ன உணவு கொடுக்கரதுன்னே புரியல எது கொடுத்தாலும் சாப்பிட மாட்ரான் என்ன உணவு கொடுக்கலாம்னு சொலுங்க தோழிகளே Pls. ரெசிபி கொடுங்க பா ப்லீஸ் உதவவும் தோழிகளே அவனுடய ஆரோக்கியத்துக்கு உதவுங்கள் ,...,.

http://www.arusuvai.com/tamil/node/23273
http://www.arusuvai.com/tamil/node/19516
http://www.arusuvai.com/tamil/node/22494

9 மாதக் குழந்தை பற்றிய உணவு என்று இல்லாமல் பலதும் இங்கு விவாதிக்கப்பட்டிருக்கின்றன. பாருங்க. http://www.arusuvai.com/tamil/forum/89?page=11&sort=asc&order=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&%24Version=1&%24Path=%2F

10ம் மாதம் சீக்கிரம் வந்துரும். அப்போ உதவும் இது - http://www.arusuvai.com/tamil/node/9411

‍- இமா க்றிஸ்

Romba nandri ma

Feeding bottelai etthanai months use pannalam friends answer pls.......

இது குழந்தையையும் உங்களையும் பொறுத்தது. குழந்தை நடக்க ஆரம்பிக்கும் வரை, கிண்ணத்தில் குடிக்கப் பழகும் வரை பாட்டிலில் குடிக்கக் கொடுப்பது பிரச்சினை இல்லை. (நீங்கள் பால் கொடுப்பதைப் பற்றிக் கேட்காமல் பொதுவாகக் கேட்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு சொல்கிறேன்.)பாட்டில், ரப்பர் சுத்தமாக இருந்தால் சரி.

‍- இமா க்றிஸ்

என் குழந்தைக்கு எப்போது பசும்பால் கொடுக்கலாம் Friends. Nine month aaguthu babylku.

குழந்தைக்கு சிவப்பரிசி நல்லதாம். எப்படி கஞ்சி செய்வது. வேறு உணவுடன் கலந்து ஊட்டலாமா? Papaku ipo 10 months completed. Pls help.

குழைந்த சாதம் இட்லி ் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்கலாம

//Nine month aaguthu// ம்.. ;) தமிழ்ல எழுத முடியும் போது, பேசுற மாதிரியே கலந்து தட்டி இருக்கீங்க. :-)

9 மாசத்துல ஓரளவு எல்லாமே செரிக்கும். எந்த உணவானாலும் அளவோட நல்லா வெந்த மாதிரி கொடுத்தால் போதும்.

பசுப்பால்... நீங்க என்ன நினைச்சு கேட்கிறீங்க என்கிறதை என்னால ஊகிக்க முடியல. ஏதோ ஒரு வேளை மட்டும் கொடுக்கப் போறதானால் கொடுங்க. மீதி உணவுகளையும் பார்த்து சேர்த்துக் கொடுங்க.

‍- இமா க்றிஸ்

//குழந்தைக்கு சிவப்பரிசி நல்லதாம்.// :-) எங்கயோ இமா சொன்னதைப் பார்த்துட்டு கேட்கிறீங்களோ என்று சந்தேகம் வருதே!! :-) ஆம் என்பீர்களானால்... அந்தக் கேள்விக்குப் பொருத்தமாகக் கொடுத்த பதில் அது. அதை வைச்சு எல்லாக் குழந்தைக்கும் கட்டாயம் சிவப்பரிசிக் கஞ்சி கொடுக்கணும் என்கிற முடிவுக்கு வந்துரப்படாது.

//எப்படி கஞ்சி செய்வது// இங்க குறிப்புகள் இருக்கு. எனக்குத் தேடிக் கொடுக்க இன்று நேரம் பத்தாது. சர்ச் பாக்ஸ்ல கஞ்சி என்று போட்டுத் தேடினால் கிடைக்கும்.

//Papaku ipo 10 months completed.// ;)) நீங்களும் தமிழ்ல தட்ட முடிஞ்சும் இங்க்லீஷ்ல தட்டி இருக்கீங்க. :-) ம்... 10 மாதம் - இது வரைக்கும் சாதம் ஆரம்பிக்கலயா!இனி எல்லாமே கொடுக்க ஆரம்பிக்கலாம்.

//வேறு உணவுடன் கலந்து ஊட்டலாமா?// தாராளமா கொடுக்கலாமே! நீங்க சாதம் காய்கறி, மீன், முட்டை சேர்த்துச் சாப்பிடுற மாதிரி கொடுக்கலாம். எங்களைப் போல பாப்பாவுக்குப் பல்லு இராது; மெல்லவும் தெரியாது. மசிய வைச்சுட்டு கொடுங்க. உப்பு, எண்ணெய், காரம், சுவையூட்டிகள், நிறங்கள் வேணாம். (கூடாது என்று சொல்லல.)

‍- இமா க்றிஸ்

Thanks

மேலும் சில பதிவுகள்