சாரா,சுரேஜினி அறுசுவை தோழிகள் பதில் தரவும்

எனக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது. நா இப்ப அம்மா வீட்டுக்கு வந்து 5 மாதம் ஆகிறது இதுவரைக்கும் மாமியார் வீட்டிலிருந்து யாருமே கூப்பிடல ஒரு போன் கூட பன்னல அதனால நானும் பன்னல என்ன மதிக்க மாட்றாங்க நான் அவங்க வீட்ல இருந்தா மட்டும் தான் பேசுறாங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டா ஒரு நல்லது கெட்டதுக்கு கூட சொல்ல மாட்றாங்க ரொம்ப அலட்சியப்படுத்துறாங்க எனக்கு அங்க போகவே பிடிக்கல என் கணவர் இன்னும் இரண்டு மாசத்துல வெளிநாடு போய்ருவாங்க நான் அங்க போற மாதிரி இருக்கும் அவங்க மகள் கல்யாணம் பன்னி வீட்டோடா இருக்கு அவங்க பொண்ண உட்கார வச்சி ரெண்டு பேரும் என்ன வேல வாங்குறாங்க எனக்கு மனசு விட்டு போச்சி நான் என்ன பன்றது நான் சொல்றது கொஞ்சம் தான் ஆனா நிறைய நடந்திருக்கு எல்லாத்தையும் எழுத முடியல எனக்கு ஒரு தெளிவான பதில் தாருங்கள் தோழிகளே ப்ளீஸ்

நிசா கவல படாதீங்க பா என் குடும்பத்துலயும் இதே பிரச்சினை தான் பா. உங்க கணவர் உங்களுக்கு சப்போட்டா இருக்காறா இல்ல அவங்களுக்கு சப்போட்டா இருக்காங்கலா பா.கவல படாதீங்க நிசா எல்லாம் சரி ஆகிடும்.இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன் கூடிய விரைவில் எல்லாரும் உங்கள பத்தி புருஞ்சுப்பாங்க தோழி.

நிஷா எப்படி இருகிங்க ? உங்களின் நெலைமை எனக்கு மட்டுமில்லை பாதிக்கு மேல். 1. உங்கள் மாமியார் போன் பன்னல ணா விட்டுடுங்க நிங்க பண்ணி பேசுங்க. நிங்க சில காலம் போன் பண்ணலைன அவங்களே உங்கள் கணவரிடம் கண்டிப்பா ஏன் இப்பலாம் போன் பண்றதில்ல நு கண்டிப்பா கேய்பங்க. ஆதலால் போன் செய்து விசாரியுங்கள். உங்களை ஏன் அவங்க மதிக்கணும் நிங்க முதலில் மதித்து போன் பண்ணுங்க அப்புறம் பாருங்க.... அலட்சியம் படுத்துறாங்க ஆமாம் படுத்தலாம்..அதையும் தாண்டி உங்கள் தனித்துவத்தை நிங்கள் அவங்களுக்கு புரிய வைக்கணும். அதற்க்கு நிங்கள் உரிமை எடுத்து பழக வேண்டும்....அங்க ஏன் போக புடிக்கல ? அது உங்க வீடு போங்க பழுகுங்க...எதையும் காதில் வாங்காமல் உங்கள் வேலையய் நிங்க பாருங்க. ஒதுங்கி துங்கி போனால் நமக்கு தான் நஷ்டம்... number 2 .அவங்க பொண்ணு க்கு நிங்க வேலை செய்யணும்னு அவசியமில்ல. நிங்கள் உங்கள் பெற்றோரை வைத்து கேட்க்க வைக்கலாம். பெண்கள் எல்லாரும் அவர்கள் வாழ வேண்டிய இடத்தில இருப்பது தான் நல்லது. அவர்கள் தற்காலிகமாக இருந்தால் இருந்துட்டு போ கட்டும். அவர்கள் சார்ந்த எந்த வேலையும் செய்யாதீர்கள். கொஞ்ச நாளைக்கு மாமியர்க்கு என்ன வேலையாக இருந்தாலும் உதவுங்கள். தவறில்லை. மருமகள் வீட்டில் தூங்கி கொண்டு மகள் வேலை செய்தால் மகளை தான் அம்மா தூக்கி கொண்டாடுவார்கள். ஆதலால் வேலை செய்ய சோம்பேறி படமால் அவர்கள் சொல்லும் முன் அந்த வேலையை நிங்களே செய்யுங்கள். நான் சொல்வது கசப்புதான். இருந்தாலும் சில மாமியார்களை பேசினால் பழகினால் தான் அவர்களுக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காது தெரிந்து கொண்டு நம்ம செய்ய முடியும். திருமான புதிதில் என் நாதனார் துணிகளை நாந்தான் காய வைத்தேன் அதற்காக எண்ணெய் எவன படுத்தினார்கள். அவர்கள் துணியை போடும்போதே நான் மேல் வீட்டுக்கு சென்று சாயங்கலாம் தான் வருவேன். ஆனால் என் துணி என் மாமியார் மாமனார் துணிகளை நானே காய போட்டு மடித்து வைப்பேன். இது அவர்களுக்கு தன்னிலே புரிந்தது. 4 மனிகுல்லையே பாத்திரங்களை கழுவி அடுக்கி விடுவேன். நாத்தனார் வேளைக்கு சென்று வீடு திரும்பும் முன் அவர்கள் கொண்டு வரும் டிப்பன் பாக்ஸ் அவங்க தான் கழுவி ஆகணும்.நிஷா ஆதாலால் சில சாதுர்ய தனமும் வேண்டும்....என்னை குறை சொன்னால் என் கணவரிடம் அழுவேன். அவர் என்னை பற்றி என்றுமே தாழ்வாக கூறியதே இல்லை என் மாமியார் வீட்டில்.... பிக் உப் ஆகுற வரை கொஞ்சம் விட்டு தாங்க. என் அம்மா வீட்டுக்கு என் மாமியார் வந்தால் என் அம்மா நல்லதே கூறி அனுப்புவார்கள். என் மகளை பத்ரம பாத்துகொங்க சொல்வாங்க.. என் மாமியாரை என் வீட்டில் வந்து அழைத்து கொண்டு போக சொல்வேன். என்னை நல்லா படியாக பார்த்துகோங்க நு அவள் கேட்பதை சமைத்து கொடுங்கள் அம்மா என்று என் கணவரும் கூறுவார் என் கணவரும் வெளி நாட்டில் வசிகுறார். என் மாமியார் எப்போதும் என் நங்கையால் கட்சி தான். என்னை பற்றி குறை சொல்லாத நாளே இல்லை. ஆனால் என் மாமியாரிடம் அவர்களுக்கு சாதகமாகவும் அன்பாகவும் பேசுவேன். அது அவர்களுக்கு புடிக்கும். ஆதாலால் நிஷா நாம் எடுத்து கயால் ஆளுவதில் நம் திறமை உள்ளது. நிங்கள் வே லைக்கு சென்றால் நல்லது. இல்லையெனில் உங்கள் கணவரோடு போய் வாழுங்கள். அதுவே நல்லது. நான் அப்படியே நடந்ததை எழுதி வைத்துள்ளேன். ஆகையால் உங்களுக்கு தேவையான கருத்துகளை மட்டும் எடுத்து கொள்ளலாம். தைரியாமாக செயல் படுங்கள். யாரேனும் உங்கள் மனதை காய படுத்தினால் உங்கள் கணவர்ரிடம் கூறி அடுத்த தடவை அவ்வாறு செய்யமால் பார்த்து கொள்ள சொல்லலாம். அதிகாரம் பண்ண நமக்கு உன்னும் வயது வரவில்லை. தள்ளி நின்று வீட்டில் என்ன நடக்கிறது யார் எப்படி என்பதை கண்காணியுங்கள் அப்புறம் அவர்களுக்க்கு ஏற்ற படி நடந்து கொள்ளுங்கள்.

//நா இப்ப அம்மா வீட்டுக்கு வந்து 5 மாதம் ஆகிறது// எதற்காக வந்தீர்கள் என்பதைச் சொல்லவில்லையே! ஒரு விசிட் கூட அங்கே போகவில்லையா! மாதம் ஒரு தடவையாவது விசிட் பண்ணி அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? (விஷயம் விளங்காமல் பதில் சொல்கிறேனோ!! :-) தப்பாக இருந்தால் மன்னிக்க. கேட்க நினைப்பதைக் இங்கு கேட்கச் சங்கடமாக இருக்கிறது.)

//இதுவரைக்கும் மாமியார் வீட்டிலிருந்து யாருமே கூப்பிடல// அது உங்கள் புகுந்த வீடு என்றால், 'உங்கள்' வீடுதானே! அங்கிருந்துதானே வந்தீர்கள்? உங்கள் வீட்டுற்கு உங்களை யாரும் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை. கூப்பிடாமலே போகலாம்.

//ஒரு போன் கூட பன்னல அதனால நானும் பன்னல// இது தப்பு. இதையேதான் அவங்களும் சொல்லப் போறாங்க. யார் முதல்ல ஃபோன் பண்ணறது என்று யோசிப்பீர்களானால்... யாரும் ஆரம்பிக்க மாட்டீங்க. ஆரம்பிச்சாலும், மனது ஒவ்வொரு பக்கமிருந்தும் எத்தனை கால் என்று கணக்குப் பார்க்கச் சொல்லும். இது குடும்ப உறவை வளர்க்காது. கணக்குப் பார்க்கக் கூடாது. ஈகோ பார்க்க வேண்டாம். அவங்க ஃபோன் பண்ணாலும் இல்லாட்டாலும் உங்களுக்கு ஒரு கடமை இருக்கு உங்க வீட்டார் (மாமி வீட்டைத்தான் சொல்கிறேன்.) சுகமாக இருக்கிறார்களா என்பதை விசாரிப்பதற்கு. மாமி, மாமாவை மட்டுமாவது விசாரிக்க வேண்டாமா? அவங்க உங்கள் கணவரின் பெற்றோர் இல்லையா! கலியாணம் செய்யும் போது... ஒரு வாழ்க்கைத் துணையை மட்டும் தேடிக் கொள்வதில்லை நாம். இன்னொரு குடும்பத்தை நம் குடும்பத்தோடு இணைத்துக் கொள்கிறோம். (அவர்களுக்கும் இதே கதைதான்.)

//என்ன மதிக்க மாட்றாங்க// என்ன பண்றாங்க? நீங்க சிலவற்றை மட்டும்தான் சொல்லியிருக்கிறீங்க என்று தெரியும்.

//நான் அவங்க வீட்ல இருந்தா மட்டும் தான் பேசுறாங்க// இங்க வந்த பின்னால நீங்க எத்தனை தடவை அவங்க கூட பேசி இருக்கீங்க? அப்போ பதில் சொல்லாம போனை கட் பண்ணாங்களா?

//அம்மா வீட்டுக்கு வந்துட்டா ஒரு நல்லது கெட்டதுக்கு கூட சொல்ல மாட்றாங்க// யப்! சொல்ல வேண்டாம். எதற்காகக்ச் சொல்ல வேண்டும்! அந்த அளவுக்கு நீங்கள் எட்ட இருப்பது உங்கள் பிழை. நல்லது கெட்டது தானா தெரிகிற அளவு கிட்ட இருக்கணும் நீங்க. அப்படி இருப்பது தான் குடும்பம். அவங்க சொல்லித் தான் தெரிய வேண்டும் என்கிற நிலை இருக்கக் கூடாது. சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது... நீங்கள் அவர்களை விட மேலானவர் என்னும் ஒரு எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறதோ என்று நினைக்க வைக்கிறது.

//ரொம்ப அலட்சியப்படுத்துறாங்க// என்ன செய்றாங்க!

//எனக்கு அங்க போகவே பிடிக்கல// அவங்களா கூப்பிட்டாலும் பிடிக்காமல்தான் போவீர்கள் என்று நினைக்கிறேன். :-)

//என் கணவர் இன்னும் இரண்டு மாசத்துல வெளிநாடு போய்ருவாங்க// இப்போ எங்கே இருக்காங்க? ஏன் அவங்க தன் வீட்டுக்கு உங்களைக் கூட்டிப் போகல!!!

//அவங்க மகள்// 'அவங்க மகள்' இல்லை, 'உங்க சகோதரி' இப்போ. //வீட்டோடா இருக்கு// :-) திடீரென்று அஃறிணை!! இருக்காங்கன்னு சொல்லணும். //என்ன வேல வாங்குறாங்க// இதை நீங்கள் சாதுரியமாகத்தான் தவிர்க்க வேண்டும். செய்ய முடிந்ததைச் சந்தோஷமாகச் செய்யலாம். அல்லாத பொழுது ஓய்வு எடுங்கள்.

//நான் சொல்றது கொஞ்சம் தான் ஆனா நிறைய நடந்திருக்கு// புரியுது. உங்கள் கணவரும் தன் பங்கைச் செய்ய வேண்டும். அமைதியாக இருக்கிறார் போல இருக்கிறது.

//எல்லாத்தையும் எழுத முடியல// இதுவும் புரியுது. அதனால யாரும் உங்களுக்கு //தெளிவான பதில்// சொல்ல முடியாது. அவரவர் நோக்கில் பதில் சொல்வோம். நீங்கள் உங்களுக்குப் பொருத்தமானதை எடுத்துக் கொள்ளுங்கள்.

//நான் அவங்க வீட்ல இருந்தா மட்டும் தான் பேசுறாங்க// இது நல்ல விஷயம். பேசாம இருக்கல அவங்க. நீங்க பேசினா நிச்சயம் பதில் பேசுவாங்க.

முதலில் உங்கள் கணவரிடம் பேசி அவர் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

திருமணம் ஆகி ஒன்றரை வருடத்தில் 5 மாதமாக‌ அம்மா வீட்டில் இருக்கிறீர்கள். மணமான‌ பின் உங்கள் வீடு அது தானே. உங்கள் நாத்தனாரைப் போலத்தானே (நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ உங்கள் நாத்தனாரை அவர் அம்மா வீட்டில் இருப்பதை ? அது போலத் தானே) உங்களையும் உங்கள் அம்மாவீட்டில் இருப்பவர்களும் நினைப்பார்கள். எல்லாம் இருக்கட்டும். இன்னும் இரண்டு மாதங்களில்
வெளிநாடு செல்ல‌ இருக்கும் கணவரை விட்டு இப்படி இருப்பது
உங்களின் எதிர்கால‌ வாழ்க்கைக்கு எந்த‌ விதத்திலும் நல்லது இல்லை
என்பதே என் கருத்து மட்டுமல்ல‌. அறிவுரையும் ஆகும்.
வெட்டி ஈகோவையெல்லாம் தூக்கித் தூரப் போட்டு விட்டு உடனடியாக‌ உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். உங்கள் கணவரோடு
சேர்ந்து வாழும் வழியைப் பாருங்கள். இப்போதே உங்கள் கணவரோடு
முதல் முறையிலேயே வெளிநாடு செல்லும் வழியைப் பாருங்கள்.
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது நல்லது அல்ல‌.
அனாவசியமாக‌ தேவையில்லாதவற்றைச் சிந்திக்காமல் இருப்பது
நல்லது. இப்போதே போனால் தான் நீங்களும் அவருடனேயே வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் (இதுவரையில் செய்யாமல் இருந்தால்) என்பது என் கருத்து. வீம்பு முக்கியமா?
வாழ்க்கை முக்கியமா? சிந்திக்கவும். (என்னைத் திட்டினாலும் பரவாயில்லை )
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

எனக்கு தெளிவான பதில் தந்ததுக்கு மிகவும் நன்றி. எனக்கு மாமியார் மீதெல்லாம் ஒன்றும் கோபம் இல்லை நாத்தனார் வீட்டோடு இருக்காங்க என்னால யாரையும் புரிஞ்சிக முடில சின்ன சமையல் செய்றதில் கூட என்ட ஒரு வார்த்தை கேட்க மாட்றாங்க நாத்தனார்ட தான் கேட்குறாங்க நானா எதாவது இத செய்யலாமா னு கேட்டா கூட வேணானு சொல்லி நாத்தனார்ட கேட்குறாங்க.7 மணிக்கு எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து டிவி பாத்துட்டு இருப்போம் என் கணவர் மாமனார் வெளியே போய்டுவாங்க நாங்க மூன்று பேரும் இருப்போம் அப்ப டிவி ய அடக்கிட்டு இரண்டு பேரும் ரூம்ல போய் தனியா பேசிட்டு இருப்பாங்க அப்ப நா மட்டும் தனியாக இருப்பேன் ரொம்ப சங்கடமா இருந்துச்சி.அவங்க தான் முதலில் போன் பன்னனும்னு நான் சொல்லல இரண்டு நாளைக்கு ஒரு தடவை போன் செய்வேன் ஆனா இப்ப தா பன்னல. மாமியார் பன்ன வேணா பன்னனும்னு நான் சொல்லவு மாட்டேன் ஆனா நாத்தனார் ஒரு போன் பன்னலாம்ல.நாளைக்கு ஒரு தேவை இருக்கு அதுக்கு போறத கூட சொல்ல மாட்டாங்க இரண்டு பேர் மட்டும் கலந்து பேசிக்குவாங்க அடுத்த நாள் நா வேல பாத்துட்டு இருப்பேன் 12 மணிக்கு திடீரென வந்து கிளம்பு தேவைக்கு போய்ட்டு வானு சொல்லுவாங்க எனக்கு ஒன்றுமே புரியாது. நா வேலைக்கெல்லாம் அலுப்பு பாக்க மாட்டேன் எந்த வேலையா இருந்தாலும் முகம் சுளிக்காம முடியாதுனு சொல்லாம செய்வேன். நாத்தனார் குழந்தையோட பால் பாட்டிஈ கூட நா தா கழுவி வைப்பேன். எனக்கு மாமியார் வீட்ல இருக்கனும்னு தா ஆசை ஆனா நாத்தனார் வீட்டோட இருக்குறது நாள மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு. என் அம்மா அத்தா மாதிரி தா அவங்க இரண்டு பேரையும் நினைக்கிறேன்.நீங்க சொல்றது எல்லாமே எனக்கு புரியுது கூடிய சீக்கிரம் நா அவங்க வீட்டுக்கு இல்ல என் வீட்டுக்கு போறேன். என்ன தெளிவுப்படுத்தினதுக்கு ரொம்ப நன்றி சகோதரிகளே.

நிஷா உங்களை மாதிரி மருமகள் எல்லாரு வீட்டுக்கும் கேடைகுரதிள்ள. சில சண்டை பேர்வழிகள் அடங்கா பிடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நிங்கள் உங்களை ready பண்ணின்கொங்க. majurityaa நடந்துகோங்க. மற்றவர்கள் எடுக்கும் முடிவிற்கும் நிங்கள் எடுபதிற்கும் வித்தியாசம் இருக்கட்டும். அவர்கள் பேசினால் பேசட்டும். உங்களை தனிமை படுதுவாதாக நினைப்பதை மறந்து இத்ர்ல்லம் ஒரு விஷயமா பாத்துப்போம் என்று எண்ணுங்கள். நாளைக்கு உங்களுக்கு குழந்தைகள் பிறந்தால் அதோனோடு செலவிடுவீர்கள இல்லை இவர்களோடு நியம் பேசுவீர்களா அதுக்குலாம் டைம் இருக்கானு பாருங்க. டிவி off பண்ண திரும்ப போட்டு பாருங்க இல்லேன்னா புத்தகம் வாங்கி படியுங்கள் ...அவர்கள் வேலை செய்யட்டும் ஆல விட்டா போதும் சாமின்னு இருங்க .....ஆரம்பத்தில் ஆர்வ கோளறு இருக்கத்தான் செய்யும் தலைமை பொறுப்புகளை நம்ம தலையில எப்போது போட்டுக்க கூடாது இப்போதைக்கு தொண்டர்களா இருந்து மாமியார் வழியை பின்பற்றுங்கள். உங்களை நிங்கள் திருத்தி கொள்ளுங்கள் சந்தோஷத்தை அவர்களிடம் அடமானம் வைத்து அவஸ்தை பட வேண்டாம். வாழக வளமுடன்.

Nisha epa nega correct mutivu pannirginga unga pirajanai matrita enaku erunthcu enaku mamanaar illai husband Darin erunthanga 1year 1month leave ku varuvanga ennai kalyanam panni kuduthadu chennai amma veedu paramakudi pakkam chennai le sonntham yarum illai enaku fever vandha kuda hospital kuditu poga aall erugadu mamiyavu natthanaar ethaju ketta mattum pathil solluvanga vera ethuvu pesa mattanga pothaduku kulandaiu illai malati tittuvanga kulandaiku treatment edugavu yarum kutidu poga mattanga 3year ange erunthen apram pullaiku treatment eduga engamma veedule en kanavaru vittudu ponaru apram en mamiyar pettha kettudu ennai dives panna poren solli 9month pesama eruntharu apram iraivanoda arulal avare manasu mari vandaru epa enga orule taniya veedu piticu vajjaru kalyanam agi 6year kali just kulanthaiku pora thou epa 11 month le baby eruga enaku kulandai pirandhu en mamiya en kulandaiye parka varale en ponnuku epa avunga Attha veedu sontham illama poitcu ethuta en periya kavalai epa nega edutha mutive na apa eduthrta en kulandaiku sontham erunthrkum thonuthu

Unga husbandkum ungalukum ethum sanda ilala

Life Is Easy When U "Accept All"

மேலும் சில பதிவுகள்