வாயுத்தொல்லை பற்றி சந்தேகம்

என் கணவர் வாயுத்தொல்லையால் அவதிபடுகிறார். கேஸ்ட்ரிக் மாத்திரை போடுகிறார். நான் பெருங்காய‌ நீர் கொடுத்தால் குடிப்பதில்லை. வாயுத்தொல்லை இருந்தால் மாரடைப்பு வரும் என்று அவருடைய‌ நண்பர் சொன்னாராம் இது உண்மையா தெரிந்தவர்கள் பதில் தாருஙள் ப்ளீஸ்

//வாயுத்தொல்லை இருந்தால் மாரடைப்பு வரும்// இப்படிக் கேள்விப்பட்டதில்லை.

மாத்திரை போடுவது மட்டும் போதாது. உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டியிருக்கும்.

மாரடைப்பு நோவை வாயுத் தொல்லை என்று நினைத்து சிகிச்சைக்குப் போகத் தாமதிப்பவர்கள் உண்டு. சில சமயம் வாயுத் தொல்லை... பயப்படும்படியாக வலிக்கும். இரண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சுலபமல்ல. இதை வைத்து நண்பர் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

வாயு தொல்லைக்கு பால் ல பூண்டு போட்டுநல்ல காச்சி நல்ல மசித்து கொடுங்க.சரி ஆகிரும்.வாரம் ஒரு முறை கொடுங்க. நாங்கள் அப்படி தான் குடிக்கிரோம்.

பெருங்காயத்தை பச்சையாக‌ கரைத்துக் குடிக்கமுடியாது.
மோரில் தாளிப்பில் பெருங்காயம் சேருங்கள்.சாம்பாருக்கான பருப்பு,
உப்புமா,சட்டினிகள், பஜ்ஜி மாவு (இதில் ஓமமும் சேர்க்கலாம்) கடுகு தாளிக்கும் காய்கறிகள் இவற்றில் சேருங்கள். தினமும் கட்டாயம்
ரசம் குடிப்பது நல்லது. கரும்பு ஜுஸ் குடிப்பது நல்லது. எலுமிச்சை
ஜூஸ் குடித்தால் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேருங்கள். உடனேயே
வாய்வு ஏப்பமாக‌ வெளியேறுவதைக் காணலாம். ஓமவல்லி இலையை
பஜ்ஜி செய்யலாம். ரசத்தில் போடலாம்.
இரவில் உணவு உண்ட‌ பின் வெற்றிலை போடுவது வாய்வுவெளியேற‌ உதவுவதோடு உண்ட‌ உணவு செரிமானமாக‌ உதவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்