10 மாத குழந்தைக்கு கட்டி

என் குழந்தைக்கு 10 மாதம் நடக்கிறது. அவளுக்கு பின் மண்டைல ஒரு கட்டி மாதிரி இருக்கு.கொழுப்பு கட்டி (நான் நினைக்கேன்).டாக்டர் ட பொனோம் .டாக்டர் இது ஒன்னும் பிரச்சினை இல்லை என்று சொன்னார்கள் .2 வாரம் பாருங்க பெருசு ஆனா இரத்த பரிசோதனை செய்யலாம்நு சொன்னாங்க.சிறிது பயமாக இருக்கு கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்கள் அம்மா.நாங்கள் அபுதாபி ல இருக்கிரொம்.அடுத்து என் பொண்ணு மூக்கு பக்கம் ரெண்டு பக்கமும் வெள்ளை கலரா இருக்கு.முதலில் சிறியதாக இருந்து இப்போது கொஞ்சம் பெருசா வருது.என் பொண்ணு புதிய நிறம். (வெள்ளை இல்லை கருப்பு இல்லை)என்ன பன்னனும் செல்லுங்கள் அம்மா. இப்போது என் பொண்ணு நடக்கிறாள்.

முதல்ல தலைப்புல இருந்து அந்த 'இமா அம்மா'க்குப் பதிலா, '10 மாத குழந்தைக்கு கட்டு' என்று போடுங்க. இப்படி த்ரெட் போடுக் கூப்பிட்டா எனக்கு சந்தோஷம்தான். ஆனால் எனக்கு பதில் தெரியாதே! பெயர் போட்டிருந்தா பொதுவா மற்றவங்க பதில் சொல்லத் தயங்குவாங்க. மாற்றப் பாருங்க கண்ணா.

//கொழுப்பு கட்டி// இல்லையென்று நினைக்கிறேன். //டாக்டர் இது ஒன்னும் பிரச்சினை இல்லை என்று சொன்னார்கள். 2 வாரம் பாருங்க பெருசு ஆனா இரத்த பரிசோதனை செய்யலாம்நு சொன்னாங்க.// பயப்பிட வேண்டாம். அவர்கள் சொல்வது சரிதான். என் குழந்தைகளுக்கு தலையில், கையில், காதின் பின் என்று வந்திருக்கு. இதையேதான் டாக்டர் சொன்னாங்க. 2வாரம் கழித்தும் அப்படியே இருந்தது. பிறகு எங்களுக்கும் மறந்து போச்சு. நினைவு வந்து பார்க்கும் போது கட்டு இல்லை. எப்போ காணாமல் போனது என்று தெரியவில்லை. பெரியவர்களுக்கும் இப்படி இருப்பது உண்டு.

//மூக்கு பக்கம் ரெண்டு பக்கமும் வெள்ளை கலரா இருக்கு.முதலில் சிறியதாக இருந்து இப்போது கொஞ்சம் பெருசா வருது.// உங்கள் பெண் பொது நிறமா! ம்... இதைப் பற்றி சொல்லத் தெரியவில்லை. நீங்க த்ரெட் தலைப்பை மாற்றுங்க. யாராவது வந்து பதில் சொல்லுவாங்க. பூங்கோதை, சீதா கண்ணில் பட்டால் நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

Naan arusuvaiku putithu .tamila tipe panna kathukiren,anatha katiku karanam podukaka irukalam.

சரி அம்மா மாத்திடேன்.அது சின்ன பந்து மாதிரி இருக்கு.எனக்கு முன்னாடி நெஞ்சில் இப்படி இருந்து அதை operation பன்னிருந்து.அதான் கொஞ்சம் பயம்.

நன்றி தோழி.ஆனால் பொடுகு இல்லை.

//எனக்கு முன்னாடி நெஞ்சில் இப்படி இருந்து அதை operation பன்னிருந்து.// பயப்படாதீங்க. இது தோலுக்கு நேர் கீழே தான் இருக்கும். ஆளமாக இராது. அதனால் ஒப்ரேட் பண்ணுவது... சின்னதா ஒரு கீறு மட்டும்தான். உள் தலைக்கும் இதற்கும் தொடர்பு இராது. யோசிக்காதீங்க. ஆனால் மாற்றங்களைக் கவனிக்க வேண்டும். சீழ் கட்டின மாதிரியோ சிவந்தோ சூடாகவோ தெரிந்தால் அல்லது தொடும் போது நோ இருப்பதாகத் தெரிந்தால் வீட்டு வைத்தியம் என்று இராமல் உடனே கொண்டு போய்க் காட்டுங்க. இப்படிச் சொன்னதற்காகவும் பயப்படாதீங்க. இப்படி இருந்தாலும் கை, கால்ல வருவது போலதான் இருக்கும். அவதானமாக இருப்பீர்கள் என்று சொன்னேன்.

‍- இமா க்றிஸ்

சரி அம்மா.கவனமா தினமும் பார்த்துடே தான் இருகேன் மா.அப்படியே தான் இருக்கு. ஏதாவது மாறுதல் தெரிந்தால் உடனே மருத்துவமனை செல்கிறேன் அம்மா.

பாப்பாவின் தலையில் உள்ள‌ கட்டிக்கு மஞ்சளை மட்டுமே இழைத்துப்
போடவும். மஞ்சளால் எந்தப் பின் விளைவும் இருக்காது.
கீழே விழுந்து அடிபட்டிருக்கலாம் என்று கருதினால் ( அப்படி இருந்தால் அந்த‌ இடம் கன்னிப் போய் இருக்கும், தொட்டால் கல் போன்று இருக்கும்.) இப்படி இருந்தால் குழம்புக்குப் போடும் புளியைக்
கெட்டியாகக் கரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு
சேர்த்து கொதிக்க‌ வைத்து ஆறின‌ பின் அந்தக் கட்டியின் மேல்
பற்று போல் போட்டு விடுங்கள். எதுவாக‌ இருந்தாலும் தானாகவே
எந்தத் தொல்லையும் இல்லாமல் கரைந்து விடும். அல்லது பழுத்து உடைந்து விட்டால் அந்த‌ இடத்தினை சுத்தம் செய்து விட்டு வெறும்
மஞ்சளை மட்டும் ஆறும் வரை மேலே போடுங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

பொண்ணுக்கு கட்டி வழிக்கவில்லை அம்மா.வெளியே தெரியவும் இல்லை.நம்ம தடவி பார்தால் உல்ல ஒரு சின்ன பந்து மாதிரி இருக்கு அம்மா.ஆனால் அவளுக்கு வழி இல்லை.நன்றி அம்மா.

அன்புள்ள‌ ரேவதிக்கு இரத்தக் கட்டியானால் புளிப்பத்து போட்டால் உள்ளுக்குள்ளேயே கரைந்து விடும். அதனால் பயம் வேண்டாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

சரி அம்மா. ரொம்ப நன்றி.

மேலும் சில பதிவுகள்