கற்க கசடற

சின்ன குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களுக்கான கல்வியின் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க முயற்சிப்பது எல்லா பெற்றோர்களுக்குமே உரியது.
பலர் இவற்றை எல்லாம் குழந்தைகள் கற்றுக்கொள்ள மிக மிக சிறிய வயசிலேயே பிரத்தியேக பாடசாலைகளில் சேர்த்து விட்டு விடுவார்கள்.

ஒரு குழந்தை க்கு கட்டாய பாடசாலை காலம் என்பது எல்லா நாடுகளிலும் வரையறுக்கப்பட்டிருக்கும்.இருந்தாலும் சில பெற்றோர்களதும் சில பிள்ளைகளதும் தேவை கருதி குழந்தைகளை வரையறுக்கப்பட்ட காலத்துக்கு
முன்னரே அனுமதிக்கும் நடைமுறகள் எங்கும் உண்டு.

ஆனால் வாழ்க்கையில் ஒரு தடவை பாடசாலை காலத்தை தொடங்கி விட்டால் கல்வி எனும் நீண்ட பயணத்தில் தொடங்கி வேலை குடும்பம் என்று வாழ்வு என்று ஓடிக்கொண்டு இருப்பது நம் மனித வாழ்வு.

இந்த சக்கரத்தில் அவசிய தேவை அன்றி அவசரமாக நம் பிள்ளைகளை உள் நுழைக்க வேண்டியது இல்லை என்பது என் அபிப்பிராயம்.

நான்கு வயதில் பாலர் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டிய ஒரு குழந்தையை ஒன்றரை வயசில் பாடசாலைக்கு அனுப்பினால் அந்த இரண்டரை வருடங்களும் குழந்தை பெரியளவில் கல்வி கற்று தேறிவிடப்போவதில்லை.
நேர்முகத்தேர்வில் சிறப்பாக பதில் சொல்லவோ சாதனைகள் புரியவோ இது அத்திவாரமாக அமையப்போவதில்லை???? அல்லது பெரிய வகுப்புக்களில் கற்க வேண்டியதை கற்று முடித்து விடப்போவதுமில்லை.மிஞ்சி மிஞ்சி போனால் பாடசாலை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுக்கொள்கிறார்கள்
.மற்றும் ஒன்றாம் வகுப்பில் படிக்க வேண்டிய சிலதை மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாக தெரிந்தும் புரிந்தும் கொள்கிறார்கள் அவ்வளவே.அதுவும் 2 ஆவது வகுப்புக்கு வந்ததும் எல்லோரும்போல் சமமாகிறார்கள்.

ஆனால் அவ்வாறு நெருக்கம் கொடுக்காமல் குழந்தைகளை குழந்தைகளாகவே ஆடிப்பாடி ,நம்முடன் இணைத்து சின்ன சின்ன வேலைகளை கொடுத்து ,அரவணைத்து,இயற்கையையும் இயல்புகளையும் உணர வைத்து
விளையாட்டாகவே ஆரம்ப கல்வியை சொல்லிக்கொடுத்து உரிய வயதில் புத்துணர்வுடன் அவர்கள் பாடசாலைக்காலத்தை தொடக்கி வைத்து பிள்ளைகளையும் மகிழ்வித்து
பெற்றோராகிய நாமும் குழந்தைகளின் சேட்டைகளை ரசித்து மகிழ்ந்து நாளை அவர்களுக்கே சொல்லி வாய்விட்டு சிரிக்க இந்த காலத்தை அழகாக பயன் படுத்திக்கொள்ளலாமே.

இப்போது வீட்டில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை ஒன்றை சொல்கிறேன்

அதாவது இந்த ஈஸ்டர் முட்டைகள் தாராளமாக பல வண்ணங்களில் ஈஸ்டர் காலத்தில் கடைகளில் வாங்கி கொள்ளலாம்.வண்ணங்களில் மயங்காத குழந்தைகளே கிடையாது.இங்கு படத்தில் காட்டி இருப்பது போல் குழந்தைகளுக்கு
காட்டி பாருங்கள் எந்த குழந்தையும் அந்த இடத்தை விட்டு நகராது.ஆனால் புத்தகங்களை பார்த்து ஓடும் குழந்தைகள் உண்டு.

1.பல வண்ணங்களிலும் சிறிய பெரிய அளவுகளிலும் இந்த முட்டைகளை வாங்கி கொள்ளுங்கள்.
2. கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான மிருகங்கள்,தாவரங்கள் ,பறவைகள்,சிறிய குட்டி குட்டி உபயோகப்பொருட்கள்,எழுத்துக்கள்,இலக்கங்கள் என்பவற்றை வாங்கியும் சேகரித்தும் கொள்ளுங்கள்.
3.முட்டைகள் ஒவ்வொன்றிற்குள்ளும் ஒவ்வொரு பொருளை வைத்து மூடி விடுங்கள்.
4.ஒரு கூடையில் முட்டைகளை நிரப்பி குழந்தைகளையும் அருகில் உட்கார வைத்துக்கொள்ளுங்கள்.
5.இப்போது ஒரு முட்டையை எடுக்கும் போது அதன் நிறத்தை சொல்லி எடுங்கள்
6.எடுத்த முட்டையை சத்தம் வருமாறு குலுக்கி காட்டுங்கள்{ அப்போது அவர்களுக்கு உள்ளே இருப்பதை பார்க்கும் ஆர்வம் வரும்}
7.இதோ திறக்கிறேன் என ஒன்று இரண்டு மூன்று சொல்லி திறந்து உள்ளே இருப்பதை சத்தமாக சொல்லுங்கள்.அத்துடன் அது பற்றிய சில விபரங்களையும் சொல்ல மறக்க கூடாது.
8.பறவைகள் மிருகங்களாக இருப்பின் அதன் ஒலியை செய்து காட்டுங்கள்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை இவ்வாறு கற்பிக்கலாம்.
9..அதிக நேரம் இதையே செய்து கொண்டு இருக்காமல் அவ்வளவற்றையும் எடுத்து குழந்தைகளின் கண்ணில் படாமல் ஒளித்து வைத்து விட்டு அடுத்தனாள் எடுத்து சொல்லி கொடுக்க வேண்டும்

அவ்வளவுதான் இதேபோல் ஒரு நாளுக்கு 1 மணிநேரம் செய்து பாருங்கள் 1 வயசு பேசத்தெரியாத குழந்தை கூட, நிறங்கள் ,மிருகங்களின் பெயர்கள்,இலக்கங்கள் போன்றவற்றை நீங்கள் சொல்லிக்கொடுத்த பாணியில் உச்சரிக்க
ஆரம்பித்து விடுவார்கள்.
புத்தகத்தை எடுத்து இது ஆடு மே மே என்று கத்தும் என்றால் அவர்களுக்கு அவ்வளவு சுலபமாக பதியாது.நாளடைவில் சலிப்பாக இருக்கும்.எனக்கு இன்னமும் சில புத்தகங்கள் தூக்க மாத்திரைகளாகவே இருக்கிறது.

ஆனால் இவ்வாறு செய்தால் உற்சாகம் குறையாமல் கற்றுக்கொள்வார்கள்.ஒரு குழந்தைக்கு அன்பாக கல்வி கொடுக்க பெற்றோர் கல்விமான்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
அடுத்தவர்களை பார்த்து அளவுக்கு அதிகமாக எதையும் திணிக்காமல் பிள்ளைகளிற்கு ஆதரவானவர்களாக இருந்து அவர்களின் சிறப்புக்களை அவர்களுக்கு உணர்த்தினாலே போதும்.
தன்னம்பிக்கையுடம் மேலெழுந்து எதிலும் துலங்கும் பலம் பெற்று விடுவார்கள்.

5
Average: 5 (11 votes)

Comments

//1 வயசு பேசத்தெரியாத குழந்தை கூட, நிறங்கள் ,// இது உண்மைதான். ஒரு ஒப் ஷொப்ல முதல் வொலண்டியரா வேலை செய்தேன். அங்க அடிக்கடி ஒரு குட்டி அம்மா ப்ராமைத் தள்ளிக் கொண்டு வருவா. 8 மாசக்குழந்தை. அது திடீர் திடீரென்று கதைக்கும். red cap, blue shirt என்று சொல்லுறது அரைகுறையா இருந்தாலும் எங்களுக்கு விளங்கும். நாங்கள் எதையாவது சொன்னால், கை காட்டுவா எங்க இருக்கு என்று. அம்மா எங்க கூட்டிட்டுப் போனாலும் சின்னவவோட விடாம கதைச்சுக் கொண்டே இருப்பாவாம்.

‍- இமா க்றிஸ்

அருமையான கட்டுரை... அழகா புரியும்படி எழுதியிருக்கீங்க... இந்த காலத்தில் தேவையான ஒன்று..உங்களுக்கு இருக்கும் பொறுமை எனக்கு இல்லாமல் மதுவை 2 வயது 3 மாதத்தில் ஸ்கூலில் சேர்த்தேன்.. கீப் ரைட்டிங்...
குட்டிகள் அழகா உட்காந்து இருக்காங்க... நல்ல பிள்ளைகள்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அருமையான பதிவு வாழ்த்துக்கள் சுரேஜினி., உங்களுடைய கருத்து தான் என்னுடையதும், தற்போது உள்ள காலகட்டத்தில்் பெற்றோரகள் குழந்தையை வீட்டீல் சமாளிக்க முடியவில்லை என்று சீக்கிரமாக பாடசாலைக்கு அனுப்புகின்றனர். எனக்கு 1 வயது குழந்தை உள்ளது நீங்கள் கூறியது போல 4 வயதில் தான் பாடசாலைக்கு அனுப்ப போகிறேன்,

அருமையான பதிவு வாழ்த்துக்கள் சுரேஜினி., உங்களுடைய கருத்து தான் என்னுடையதும், தற்போது உள்ள காலகட்டத்தில்் பெற்றோரகள் குழந்தையை வீட்டீல் சமாளிக்க முடியவில்லை என்று சீக்கிரமாக பாடசாலைக்கு அனுப்புகின்றனர். எனக்கு 1 வயது குழந்தை உள்ளது நீங்கள் கூறியது போல 4 வயதில் தான் பாடசாலைக்கு அனுப்ப போகிறேன்.

அருமையான பதிவு வாழ்த்துக்கள் சுரேஜினி., உங்களுடைய கருத்து தான் என்னுடையதும், தற்போது உள்ள காலகட்டத்தில்் பெற்றோரகள் குழந்தையை வீட்டீல் சமாளிக்க முடியவில்லை என்று சீக்கிரமாக பாடசாலைக்கு அனுப்புகின்றனர். எனக்கு 1 வயது குழந்தை உள்ளது நீங்கள் கூறியது போல 4 வயதில் தான் பாடசாலைக்கு அனுப்ப போகிறேன்.

அருமையான பதிவு வாழ்த்துக்கள் சுரேஜினி., உங்களுடைய கருத்து தான் என்னுடையதும், தற்போது உள்ள காலகட்டத்தில்் பெற்றோரகள் குழந்தையை வீட்டீல் சமாளிக்க முடியவில்லை என்று சீக்கிரமாக பாடசாலைக்கு அனுப்புகின்றனர். எனக்கு 1 வயது குழந்தை உள்ளது நீங்கள் கூறியது போல 4 வயதில் தான் பாடசாலைக்கு அனுப்ப போகிறேன்.

இண்டைக்கு தேடு தேடென்று தேடி... ஒரே ஒரு பக்கட் - 6 முட்டைகள் கிடைச்சுது. கலரும் பிடிக்கேல்ல, அதில இருந்த டிசைனும் பிடிக்கேல்ல. இனி 2017ல தான் கிடைக்கும் போல. சின்னப் பிள்ளை மாதிரி வாங்கீட்டு வந்தாச்சுது. என்ன செய்யப் போறன் என்று தெரியேல்ல. ;))

‍- இமா க்றிஸ்

உங்கள் கருத்துதான் சுரே எனது கருத்தும் ..2 வயசிலெயெ பெற்றோர் வேலை போவதற்காக குழந்தையை ப்ளே ஸ்கூலில் கேர் சென்டரில் விடுவதெல்லாம் டூ த்ரீ மச்..
எங்க பொண்ணு ஜெர்மாநில பிறந்ததால் அங்கே நீங்க சொன்ன சிஸ்டம் தான் 3 வயசில் கிண்டர் கார்டன் அது எது வீடு மாதிரியே இருக்கும் யூனிபார்ம் கிடையாது எப்பவும் நானும் கூட இருப்பேன் அங்கே பிள்ளைங்களுடன் கடை /காடு எல்லாம் போவோம் ரொம்ப வித்தியாசமான அனுபவம் பேரன்ட்சுக்கும் பிள்ளைங்களுக்கும் ..

உங்கள் கருத்துதான் சுரே எனது கருத்தும் ..2 வயசிலெயெ பெற்றோர் வேலை போவதற்காக குழந்தையை ப்ளே ஸ்கூலில் கேர் சென்டரில் விடுவதெல்லாம் டூ த்ரீ மச்..
எங்க பொண்ணு ஜெர்மாநில பிறந்ததால் அங்கே நீங்க சொன்ன சிஸ்டம் தான் 3 வயசில் கிண்டர் கார்டன் அது எது வீடு மாதிரியே இருக்கும் யூனிபார்ம் கிடையாது எப்பவும் நானும் கூட இருப்பேன் அங்கே பிள்ளைங்களுடன் கடை /காடு எல்லாம் போவோம் ரொம்ப வித்தியாசமான அனுபவம் பேரன்ட்சுக்கும் பிள்ளைங்களுக்கும் ..

ம்ம் கதைப்பினம் .சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் போல.அடுத்தனாள் தேடினாலே கிடைக்காது இம்ஸ்.நாங்களும் இடைல ஒருக்கா தேடினாங்கள் கிடக்கவே இல்ல.அடுத்த தடவை நிறைய வாங்கி வச்சு விளாடுங்கோ

//மதுவை 2 வயது 3 மாதத்தில் ஸ்கூலில் சேர்த்தேன்..// மது அம்மா மட்டுமா அப்பிடி???
சுரேஜினி அம்மாவும் தான்.நம்மட ஊரில 5 வயசிலதான் ஸ்கூல்.அதுவரைக்கும் ரெண்டரை வயசில சேர்த்து விட்டதால பாலர் வகுப்புக்கு போறேன் போறேன்.
என்ன கொடுமை சரவணா?

அம்மா நினைச்சிருப்பா பிள்ளை எக்க சக்கமா படிக்கபோது எண்டு.பட் மீ கோயிலுக்கு போய் இந்த பாலர் வகுப்பு குண்டு விழுந்து நொருங்கி போக வேணும் மாதாவே எண்டு மண்டாடி விட்ருவன்.

//குழந்தையை வீட்டீல் சமாளிக்க முடியவில்லை//அதைவிட நிறைய பெற்றோர் இப்பிடி முன்னமே அனுப்புறதால குழந்தைகள் ரெம்ப புத்திசாலியாகுவாங்க அப்டி ந்னு நினைச்சும் அனுப்புறாங்க.

எனக்கு வீட்டுக்கு பக்கத்தில ஸ்கூல் .கிளாஸ் ரூம் எல்லாம் தெரியும் .வெளிய விளாடினா வீட்ல இருந்து பாக்க தெரியும்.இந்த முதல் படத்தில இருக்கிற ஸ்கூல்தான்.பட்அனுப்பல. வீட்லதான் சொல்லி குடுக்கிறன்.

எல்லா விஷயங்களிலயும் ரெம்ப தெளிவா இருக்குறீங்கள் அஞ்சு.மீ குழம்பி போய் ஆரம்பத்தில ரெஜிஸ்ட பண்ணி மீட்டிங் போய் அதுக்கு அப்பறம்தான் முடிவெடுத்தனான்.

//பாலர் வகுப்பு குண்டு விழுந்து நொருங்கி போக வேணும் மாதாவே // ;)))))) பொல்லாத பிள்ளையா இருந்திருக்கிறீங்கள். ;D

இதாவது பரவாயில்லை. எத்தின குட்டீஸ் டீச்சர்ட தலையில இடி விழ வேணும் என்று மன்றாடியிருக்கினம் எண்டு தெரியுமா! ஊரில 5ம் வகுப்பு நல்ல கெட்டிக்காரச் சின்னவர் ஒருவர் தன்ட டயறியை எனக்குக் காட்டினார். ;))) முழு டயரிலயும் ஒரே ஒரு டீச்சரைப் பற்றித்தான் இருந்துது. அவ நல்ல ஃபேமஸான ஆள். அவட பென் துலைய, பிரம்பு முறிய, கதிரை உடைய, டியூஷன் நேரம் கரண்ட் இல்லாமல் போக என்று நிறைய வாழ்த்தியிருந்தார். :-)

‍- இமா க்றிஸ்

சூப்பர்...எதார்த்தம் உண்மை அம்மா.நானும் நேத்து என் பொன்னுக்காக கடை கடையாக தேடுனேன்.கிடைக்கவே இல்ல.தனி தனியா கிடைக்குது ஆனா 2 கலர் தான் இருக்கு அதனால நான் வாங்கல.வேர எப்படி சொல்லி கோடுக்கலாம்.சொல்லுங்க அம்மா. என் பொண்ணுக்கு 11 மாதம் ஆரம்பித்து விட்டது.நானும் நிங்கள் சொன்ன மாதிரி 4 வயது ல தான் அனுபுவேன்.அதுவும் என் புருசன் 4 வருசதுக்கு பிறகு சொந்த ஊர்க்கு போகனும்.அங்கே தாய் மொழி தமிழ்ல தான் படிக்க வைப்பேன்நு சொல்ராங்க அம்மா.இப்போ எப்படி என் பொண்ணுக்கு விட்டுல இருந்து சொல்லி கோடுக்கனும் நு சொல்லுங்கள் அம்மா.நான் இப்போ 10 நாளா தான் காலைல 45 நிமிடங்கள் நடபேன் அப்போது என் பொண்ணுகூட பேசிட்டே போவேன்
ஆனால் அவ கேட்டுடே துங்கிருவா.என்னும் என்ன பன்னலாம் சொல்லுங்கள். நான் என் பொண்ணு கூட தனியாக இருப்பேன்.எப்போதும் எதாவது பேசிட்டு விடிட்டு இருபொம்.
ட்

பதில் தாருங்கள். என் பெண்ணுக்கு நான் கற்று கொடுக்க வேண்டும்.

முட்டை தான் வேணும் என்று இல்லை. இப்ப 11 மாசம். ஐடியா கேட்டு சொல்லிக் கொடுக்கும் அவசியம் இப்போ இல்லை. ஈஸியா எடுத்துக்கங்க. இன்னும் கொஞ்சம் காலம் ஆகட்டும். அதுவரை உங்களுக்குத் தோணுற மாதிரி சந்தர்ப்பத்தைப் பொறுத்து பாப்பாவோட பேசினாலே போதும்.

‍- இமா க்றிஸ்

சரிங்க இமா அம்மா. நன்றி

ஒன்பது ஐடியாவும் நவமணிகள்.
குட்டிப் பாப்பா இருக்கும் வீட்டில் யூஸ்ஃபுல்.
இன்னும் நிறைய‌ பதிவுகள் இப்படி கொடுங்க‌ சுரே:)