அஜித்குமாரின் அன்பு மனம்

என் கணவர் திரு சுப்ரமணியம் அவர்கள் டி.வி.சீரியல்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களிலும் தோன்றுவதுண்டு.

ஷுட்டிங் முடிந்து வந்ததும், ஷூட்டிங் நடந்த இடம், இடம் பெற்ற நடிகர்கள் என்று சுவாரசியமாக சொல்லுவார்.

எந்திரன் படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு வந்த போது எங்களுக்கு ஒரே பிரமிப்பு.

ஷூட்டிங் முடிந்து வந்ததும் நான் கேட்ட முதல் கேள்வி - ‘ரஜினிகாந்த் வந்திருந்தாரா? ஐஸ்வர்யா ராயை பார்த்தீங்களா?’ என்பதுதான்.:):)

பின்னே? அந்தப் படத்தின் படப்பிடிப்பில் பத்திரிக்கையாளர்களுக்கே அனுமதி கிடையாது என்று பரபரப்பான நியூஸ் அடிபட்டுக் கொண்டிருந்த போது, ரஜினியையும் ஐஸ்வர்யா ராயையும் நேரில் பார்க்க முடிந்தது பெரிய விஷயமாயிற்றே.

இங்கே நான் பதிவிடப் போவது தல அஜித் குமாருடன் என் கணவர் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது கிடைத்த இனிய அனுபவத்தைப் பற்றி.

சென்ற பதிவைப் போல இதையும் என் கணவரின் வார்த்தைகளிலேயே பதிவிடுகிறேன்.

இனி, ஓவர் டு திரு சுப்ரமணியம்:

சென்ற வருடத்தில் ஒரு நாள் – அஜித்குமாருடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது.

படப்பிடிப்பு இடைவேளையின் போது – சக நடிகர்கள் சிலர் ஒரு இடத்தில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தோம்.

லேசாக மழை ஆரம்பித்ததால் – அஜித்குமார் உள்ளே வந்தார். நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை அவர் கடந்த போது, மரியாதை நிமித்தம் நான் எழுந்து நின்றேன்.

அவர் உட்கார நினைத்தால் இடம் வேண்டுமே.

அஜித்குமார் என்ன செய்தார் தெரியுமா – என் தோளைப் பிடித்து அழுத்தி என்னை உட்கார வைத்தார்.

அது மட்டுமல்ல – “அங்கிள், நான் வர்றதுக்காக எல்லாம் நீங்க எழுந்திருக்ககூடாது, உட்காருங்க அங்கிள்`’ `என்று அன்புடன் கூறினார்.

அவர் அத்தனை அன்பாக சில வார்த்தைகள் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு ஃபோன் வந்தது.

அஜித்குமார் உங்களை ஃபோட்டோ எடுத்திருக்கிறார். இந்த நம்பரை காண்டாக்ட் செய்து, உங்கள் ஃபோட்டோவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார் ஒரு நண்பர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அஜித் குமார் என்னை ஃபோட்டோ எடுத்தாரா, எப்பொழுது என்று திகைத்தேன்.

குறிப்பிட்ட நண்பரை தொடர்பு கொண்டேன்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த என்னை, எங்கோ தொலைவில் இருந்து, மிக அருமையாக ஃபோகஸ் செய்து, புகைப்படம் எடுத்திருந்தார் அஜித்குமார்.

அது மட்டுமா!

அந்தப் புகைப்படத்தை பெரிய அளவில் ப்ரிண்ட் செய்து, அதில் அவரது ஆட்டோக்ராப் இட்டிருந்தார்.

அழகான முறையில் அதை ஃப்ரேமும் செய்து, அனுப்பியிருந்தார்.

என்னுடைய மகிழ்ச்சியையும் திகைப்பையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
புகைப்படத்தை என்னிடம் கொடுத்த நண்பர் என்ன சொன்னார் தெரியுமா?

“சார், இந்த ஃபோட்டோ உங்ககிட்ட கொடுத்தாச்சுன்னு அஜித்குமாருக்கு தகவல் சொல்லணும். நீங்க இதை கையில் வைத்துக் கொள்ளுங்க, ஒரு ஃபோட்டோ எடுக்கிறேன்.

அதோடு, நீங்க அஜித்குமாரிடம் ஏதாவது சொல்லணும் என்றால் அதையும் ஒரு வீடியோவாக எடுத்துக்கறேன்” என்றார்.

மகிழ்ச்சியில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ரொம்ப நன்றி அஜித் சார், சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களிடம் பேசி, என் நன்றியை சொல்ல ஆசைப்படறேன்” என்று ஆர்வத்துடன் சொன்னேன் அந்த வீடியோவில்.

அடுத்த வாரத்தில் மற்றொரு படப்பிடிப்பில் நண்பர் என்னை சந்தித்தார்.

”அஜித்குமாரிடம் பேசணும்னு சொன்னீங்களாமே, இப்பப் பேசறீங்களா?” என்று கேட்டு, அஜித்குமாரின் செயலாளரின் ஃபோனில் தொடர்பு கொண்டு, என்னிடம் கொடுத்தார்.

“என்ன சுப்ரமணியம் சார், ஃபோட்டோ கிடைச்சுதா” என்று அஜித்குமாரின் காந்தக் குரல் கேட்டது.

‘கிடைச்சுது சார், ரொம்ப ரொம்ப சந்தோஷம். எனக்கு ஒரு ஆசை, உங்களுடன் இன்னும் நிறைய படங்களில் சேர்ந்து நடிக்கணும்” என்று கோரிக்கை வைத்தேன்.

“அதுக்கென்ன, கண்டிப்பா நான் உங்க கூட நிறைய படங்களில் நடிக்கிறேன்” என்றார் அன்புடன்.

எத்தனை எளிமையும் அடக்கமும் பாருங்கள்!!!

உங்க கூட நான் நடிக்கணும் என்று நான் சொல்ல, அதுக்கென்ன நடிக்கலாம் என்று சொல்லாமல், ‘நான் உங்க கூட நடிக்கிறேன்’ என்று வார்த்தைகளிலும் அவரது எளிமையான பண்பை வெளிப்படுத்திய பண்பாடு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மக்களின் மனம் கவர்ந்த அஜித் குமாருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

5
Average: 5 (12 votes)

Comments

ஹாய்,
////அஜீத் குமாரின் அன்பு மனம்////ரொம்ப‌ அசத்துறிங்க‌. வாழ்த்துக்கள்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை. இந்த விடுமுறையில் பார்க்கலாம் என்று குறித்து வைத்திருக்கிறேன்.

ஃப்ரேம் செய்திருக்கும் அந்தப் படம் அழகாக இருக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருந்தீங்க. அதோட விகிபீடியா போய் அஜித் குமாரைப் பார்த்துட்டு... திசை மாறிப் பறந்து போய்ட்டேன். :-) சாரி.

ஹ்ம்! எனக்கும் ஒரு படத்திலயாவது நடிக்கணும் என்று ஆசையா இருக்கு. அடுத்த தடவை வரும் போது ஒரு ஷூட்டிங் பார்க்கணும். நீங்கதான் கூட்டிப் போகணும்.

‍- இமா க்றிஸ்

வெல்கம் மேடம் ;) வரும் போதே விஜய் அஜித்னு அசத்தறீங்க!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு இமா,

அடுத்த முறை இந்தியா வரும்போது சொல்லுங்க, கண்டிப்பாக ஷூட்டிங் போகலாம்.

நீங்க படத்தில் நடித்து, பிரபலமாகி, பேட்டி கொடுக்கும்போது, மறக்காம என் பெயரையும் சொல்லணும்.

அஜித் குமார் பிறந்த நாள் மே 1ம் தேதிதான். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லியாச்சு.

(அடுத்த மாசம் வரை வெயிட் பண்ணி, பதிவு போட பொறுமையில்லை, அதான் இப்பவே போஸ்டிங்:):):))

அன்புடன்

சீதாலஷ்மி

////நீங்க படத்தில் நடித்து, பிரபலமாகி, பேட்டி கொடுக்கும்போது, மறக்காம என் பெயரையும் சொல்லணும்.// ;))))
நிச்சயம் சொல்லுவேன். தல சான்ஸ் கொடுத்தாலே அவங்க பாட்டி ரோல் தான் கொடுப்பாங்க போல. ;))

‍- இமா க்றிஸ்

முடியல... நினைச்சுப் பார்க்கவே முடியல இமா. சீதா... அக்கா கேரக்டர் வாங்கித்தாங்க இமாக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

:-) ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்ல! இருங்க. ;))

‍- இமா க்றிஸ்

அன்பு வனி,

ஆமாம் வனி, அஜித் விஜய் என்றால் கொஞ்சம் கலர்ஃபுல் ஆக இருக்குமே.

ஹி ஹி ஒரு விளம்பரம்தான் :):)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இமா, அன்பு வனி,

வாய்ப்பு மட்டும் கிடைச்சுடுச்சுன்னா ... ஆஹா. அசத்திடுவோம்ல.

எனக்கு என்னவோ, எனக்கு வாய்ப்பு கிடைச்சா, வில்லி ரோல் பண்ணனும்னுதான் ஆசை.

அன்புடன்

சீதாலஷ்மி

:-) ம்ஹும்! அது உங்களுக்கு வராது சீதா.

‍- இமா க்றிஸ்

அன்பு ரஜினி மேடம்,

வருகைக்கும் பதிவுக்கும் மிகவும் நன்றி.

உங்க பதிவுகள் கொஞ்ச நாட்களாக காணோமே, ஏன்? சீக்கிரம் கதை கவிதைகளுடன் வாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

இமா... அக்கா கேரக்டர்கு ரெக்கமன்ட் பண்ண என்னை அன்பாகதான் கவனிக்கணும் ;)

சீதா வில்லி??!! சொர்ணாக்கா மாதிரியா? இல்ல நீலாம்பரி மாதிரியா??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா...

//உங்க கூட நான் நடிக்கணும் என்று நான் சொல்ல, அதுக்கென்ன நடிக்கலாம் என்று சொல்லாமல், ‘நான் உங்க கூட நடிக்கிறேன்’ என்று வார்த்தைகளிலும் அவரது எளிமையான பண்பை வெளிப்படுத்திய பண்பாடு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.//

உண்மை சீதா.
எளிமையே உயர்வு தரும்.

Really interesting message..Now I understood How"Thala" stands in All occasions..May God Bless him With all rewards..

மன்னிக்கணும் மேடம் உங்களுக்கு வில்லி வேடம் செட்டாகாது ஆனா சிரிப்பு வில்லி வேணா செட்டாகும் டிரை பண்ணுங்க ... ஹிஹிஹி

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..