கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட்

கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட்

தேதி: April 5, 2016

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

4
Average: 3.8 (21 votes)

 

குடைமிளகாய் - 1 (பெரியது)
கடலை மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
கேரட் - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட் 1
குடைமிளகாய், விதையை நீக்கி விட்டு வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். மீதமாகும் மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதியை பொடியாக வெட்டவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.
கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட் 2
மாவில் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைக்கவும். (பஜ்ஜி மாவு பதமாக)
கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட் 3
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை வைத்து நடுவில் கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும்.
கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட் 4
வெந்ததும் திருப்பி போட்டு நன்றாக சிவக்க வேக வைத்து எடுக்கவும். மீதியையும் இது போலவே போட்டு எடுக்கவும்.
கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட் 5
சுவையான கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட் ரெடி.
கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட் 6


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்புகளை அழகாக வெளியிட்ட அண்ணா & டீம் க்கு மிக்க நன்றி:)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

பார்க்கவே அழகாக இருக்கு அபி.நநாளைக்கு இது நான் பன்ன போறேன். நாளைக்கு எப்படி இருக்கு நு சொல்ரேன்.கண்டிப்பா நல்லா இருக்கும்.

நன்றிப்பா.. ட்ரை பண்ணி பார்த்திட்டு சொல்லுங்க.. முடிந்தால் பேன்ஸ் கிளப்பில் போட்டோ காட்டுங்க.. நாங்களும் பார்க்கிறோம்.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

இன்று தான் இங்க சேர்ந்திருக்கேன்... இந்த சமையல் குறிப்பு செய்முறை விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு... இனிமேலதான் இந்த பகுதில என்னல்லாம் இருக்குதுன்னு தேடணும்

காலை இங்க வந்து கருத்து சொல்லி இருந்தேன்... காணோமே...

காலை இங்க வந்து கருத்து சொல்லி இருந்தேன்... காணோமே...

நன்றிங்க.. உங்க கமெண்ட் இருக்கே ?? காணலை சொல்றிங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி