மீன் குழம்பு

மீன் குழம்பு

தேதி: April 5, 2016

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 35 நிமிடங்கள்

4
Average: 3.4 (30 votes)

 

மீன் - அரை கிலோ
புளி - பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய்தூள் - 6 ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 3
பூண்டு - 2 முழு பூண்டு
தேங்காய் - 2 துண்டுகள்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப


 

சின்ன வெங்காயம் 10 எடுத்து துருவிய தேங்காயுடன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து சுண்டியதும் மீனை இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
மீன் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவவும். மீண்டும் நல்லெண்ணெயில் தாளித்து இறக்கவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாளைக்கு மீன் வாங்கிட்டு தான் அடுத்த வேலை....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டிஷ் பார்க்க ஆசையா இருக்கு. யாராவது சமைச்சுக் கொடுத்தா சாப்பிட்டுப் பார்க்கலாம். :-)

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & டீம் நன்றி

Be simple be sample

வனி மீன் வாங்கியாச்சா. :)

Be simple be sample

நானே வச்சி தரேன் உங்களுக்கு மீன் குழம்பு :).தான்க்யூ

Be simple be sample

Revathi you know Finger Fish Fry;
I don't know please eppidi prepare seiyanum, yaravathu theruncha solungappa

சர்ச் பாக்ஸ்ல தேடினா நிறைய குறிப்புகள் இருக்கும் பாருங்க காஞ்சனா. 27708 இந்த நம்பர் போட்டாலும் ஒரு குறிப்பு வரும் பாருங்க.

Be simple be sample

revathi ur fish curry very nice . i tried it very tasty , do u know how prepare prawn masala

இறால் மசாலா - http://www.arusuvai.com/tamil/node/4863
இறால் மசாலா - www.arusuvai.com/tamil/node/11008
இறால் மசாலா - www.arusuvai.com/tamil/node/30581
ப்ரான் பீஸ் மசாலா - www.arusuvai.com/tamil/node/11046
ப்ரான் இன் க்ரீன் சில்லி மசாலா - www.arusuvai.com/tamil/node/5334
இறால் பீன்ஸ் மசாலா - www.arusuvai.com/tamil/node/21399

‍- இமா க்றிஸ்

cook panni pakkuren mam

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை இது போன்று நானும் சமையல் வகைகளை அளிக்க உள்ளேன். keep support me

https://play.google.com/store/apps/dev?id=4702890658323381984

மல்லித்தூள் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.முயற்சி செய்து பாருங்கள் சகோதரி.மல்லி மிளகாய் வத்தல் சீரகம் சோம்பு மிளகு வறுத்த கறிவேப்பிலை வறுத்த அரிசி விரலி மஞ்சள் அரைத்த பொடி பயன்படுத்தி செய்தால் நன்றாக இருக்கும்